Labels

Monday, 23 October 2017

சஞ்சலமாய்...!!

சஞ்சலமாய் மனம்.


முருகன் விழா...!! ( கவிதை )           
1.
பரவசமான பக்தர்களின்
உற்சாக மனக்களிப்பு
வள்ளிமலை சமணர்
குகை அருகில்
உடைந்த டாஸ்மாக்
பாட்டில்கள்.
2.
எப்போதோ காணாமல்
போய் விட்டதாய் புகார்?
அசுரர்களின்
ஆணவம் அடக்கிய
முருகன் கையிலிருந்தத்
தங்க வேல்.
3.
திருப்பரங்குன்றத்தில் ஒருத்தி
தணிகைமலையில் ஒருத்தி
தனித்தனி குடும்பமாய்
அங்கும் இங்கும் அலைந்தான்
மயில் வாகனத்தில் முருகன்.
4
கவலை நீங்க
கந்த சஷ்டி கவசம்
படித்தாள்
தேர் திருவிழாவில்
தொலைந்து போனது
அவள் கழுத்து
வைர நெக்லஸ்.
5..
சரவணப் பொய்கையைத்
தேடுகிறார்கள்.
பூமிக்கு வந்த
கார்த்திகைப் பெண்கள்.
6..
அண்ணன் தம்பி
இருவரும் இன்னும்
ஒன்று சேரவில்லை
ஞானப்பழம போட்டியில்
தோற்ற முருகன்.
ந.க. துறைவன்

*

Saturday, 21 October 2017

முருகன் விழா...!! ( கவிதை )1.
வள்ளியைக் கலப்பு
திருமணம் செய்துக் கொண்டு
ஊர் திரும்பினான் முருகன்.
2.
அடையாளம்
அற்று இருக்கிறது
குறமகளின் வள்ளிமலை.
திணைப்புனம்.
3.
சேவலும் மயிலும் சண்டை
போடாமல் இருக்கிறது
முருகன் கைகளில்…
4.
போர் முடித்து திரும்பிய
முருகன் சினம் தணிந்து
தணிகை மலையில்
மனைவியரோடு அமைதியாய்…!!
5.
வள்ளியை மணந்த பின்
இளங்குமரன் ஆனான்
கிழவன் முருகன்.

ந.க. துறைவன்.

சிறகொடிந்து...!! ( ஹைக்கூ )

Thursday, 19 October 2017

ஏறும்புகள் / Ants...!! ( கவிதை )1.
எது பாதையென்று தெரியாது
எப்படியோ வளைந்து நெளிந்து
பயணிக்கின்றன எறும்புகள்?

You do not know what is the path
Somehow bent
Traveling ants?
2.
க்யூ வரிசை அமைப்பு
எறும்புகளிடம் இருந்து
கற்றானா மனிதன்.
Que Line layout
From ants
Learned man.
*
3.
முதல் உணவு தானிய
சேமி்ப்பு கிடங்கு.
எறும்புகள் கற்றுக் கொடுத்த
அறிவு தானோ?
First grain cereal
Savings Warehouse.
Ants taught
Do you have knowledge?
*
4.
விரைந்து போகும்
எறும்பினை பிடிக்க
முயற்சிக்கிறது குழந்தை.
Hurry up
Catch an ant
Trying the baby.
*
5.
சர்க்கரை நோய் இல்லை
இனிப்பு கண்டவுடன்
மொய்க்கும் எறும்புகளுக்கு…!!
Diabetes does not exist
Seeing the sweetness
For the ant
*
6.
எந்த ரூபத்திலும்
எந்த கணத்திலும் நேரும்
எறும்புகளுக்கு மரணம்.
In any form
In any moment
The death of the ants.
N.G. Thuraivan.

*

Wednesday, 18 October 2017

சுர சுரா கம்பி மத்தாப்பு...!1 ( கவிதை )
1.
வெடியோசையில்
உள்ளடங்கியது
மாப்பிள்ளை – பொண்ணு
அறையில்
சிரிப்பு சத்தம்
2.
தலை தீபாவளி
சீர்வரிசைக்கு
GST வரி கேட்டார்
புதுமாப்பிள்ளை.
3.
நாக்கைக் குத்தியது
தீபாவளிக்கு செய்த
முள்ளு முறுக்கு.
4.
மௌன உழைப்பு
வெடித்து சிதறுகிறது
தீபாவளி வெடிகளாய்…!
5.
அதிரசம்
முறுக்கு
எள்ளடை
தீபாவளி
முப் பலகாரம்.
ந.க. துறைவன்.

*

Tuesday, 17 October 2017

ஊசி வெடி - தீபாவளி... !! ( கவிதை )
1.
அக்காவோடு பேசி
ஊசி பட்டாசாய்
வெடித்தாள்
தங்கச்சி.
2.
மைத்துனிக்கு
மத்தாப்பு
பிடித்துக் கொடுத்தான்
மாமன்
3.
பற்ற வைத்தாள்
குடும்பமே அதிர்ந்தது
தீபாவளி வெடி.
4.
முற்போக்கான
முயற்சி
தீபாவளிக்கு
வருகை
கலர் முறுக்கு.
5.
சிரித்தாத அக்கா
சிரித்தாள்
காதைப் பொத்தி
தம்பி
வெடித்த ஆனை
வெடி சத்தம் கேட்டு…!!

ந.க. துறைவன்.

வாழ்த்துக்கள்.


Saturday, 14 October 2017

வெடி

மற்ற வைத்தாள்
குடும்பமே அதிர்ந்தது
லட்சுமி வெடி.


வெடி...!!

தீபாவளி பற்ற வைத்தாள் குடும்பமே அதிர்ந்தது லட்சுமி வெடி. ந க துறைவன்.

நொறுக்குத் தீனி...!! ( கவிதை )*
1.
முரண்பாடுகளின்
ஊடே தான்
வாழ்க்கை
முன்னேற்றமே
நிகழ்கிறது.
2.
பேசுவது ஒன்று
செய்வது ஒன்று
முரண்பாடானது
மனிதம்.
3.
உனக்குள் நான்
வெளியில் தெரியாத
அரூப உருவம்.
4.
சாணம்
திருநீரானது
நெற்றியில்
மூவரி ஹைக்கூ…

நண்பனின் கிண்டல்
வரிகள்.
5.
காதலியைக் கைவிட்டு
காதலியின் தோழியைத்
திருமணம் செய்து கொண்டான்
பிழைக்கத் தெரிந்தவன்.
6.
பிரிந்தவளுக்குத் தான்
தெரியும் துயரம்
இணைந்தவளுக்குத் தான்
தெரியும் மகிழ்ச்சி.
7.
GO GO
என்று சொன்னாலும்
போகாது
E
   G
       O
8.
வீண் விவாதம்
வீம்பு விவாதம்
இஃதொரு
வாதநோய்.
9.
பேச்சில் தேன் இனிக்கும்
வார்த்தைகள் தேள் கொட்டும்
10.
வெற்றிக்குப் பின்னால்
தோல்வி
தொடர்ந்து வருகிறது.
ந.க. துறைவன்.


Friday, 13 October 2017

கொஞ்சம் வெட்கப்படு...!!
புதிய ஹைக்கூ நூல் அறிமுகம்.

தலைப்பு : கொஞ்சம் வெட்கப்படு
           அவள் அதிகாரம் – 1.

ஆசிரியர் : டுவிட்டூ பாண்டூ

வெளியீடு ; கந்தகப்பூக்கள்.
           120, குட்டியணைஞ்சான் தெரு,
           சிவகாசி – 626 123. தமிழ்நாடு.
           இந்தியா.
           செல் : + 91 98435 77110.

பக்கம் : 64

விலை     ரூ.50/-

“ காதலையும் காமத்தையும் கொண்டாடும் சிறு முயற்சியே இந்த அவள் அதிகாரம். அதன் முதல் பகுதியாக “ கொஞ்சம் வெட்கப்படு ” எனும் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது ” என்று இந்நூலாசிரியர் கூறுகிறார். அதன்படி, திருக்குறள் காமத்துப்பால் குறளை எடுத்துக் கொண்டு, அதற்குரியதான பொருளில் ஹைக்கூ படைத்துள்ளார் என்பது கூடுதலான தகவல். இம்முயற்சி தமிழ் ஹைக்கூவிற்கு புதிய வரவு என்றே கொள்ளலாம். மேலும், ஜப்பானிய ஹைக்கூக்களில் காமம் சார்ந்த படைப்புக்கள். பல வெளிவந்துள்ளன. அதற்கு நிர்வாண ஹைக்கூ கவிதைகள் என்று பெயர் வைத்துள்ளார்கள்.

இந்நூலில் வாசிப்பிற்கு வசீகரித்தச் சில ஹைக்கூ கவிதைகள்.

1
கலவி இன்பம் சிறிது!
அவள் பார்வையுடன்
கலக்குமின்பம் பெரிது!.
*
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.
அதிகாரம் 110:1092
2.
அவள் அல்ல அது!
காதல் பயிர் வளர
அவள் பாய்ச்சும் நீர்!
*
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.
அதிகாரம் ; 110. 1093.
3.
பிடித்தவர்போல் பேசுவதும்
பிடிக்காதவர்போல் பார்ப்பதும்
அரங்கேறுகிறது காதல்.
*
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.
அதிகாரம் ; 110. 1097.

4.
விலகினால் சுடும்
நெருங்கினால் குளிரும்
காதல் நெருப்பு அவள்?
*
நீங்கின் தெறுஉம் குறுகும்கால் தண்என்னும்
தீயாண்டு பெற்றாள் இவள்?
அதிகாரம் 111. 1104.
*
5.
சண்டையிடு!
சமாதானமாகு
கூடட்டும் காதல்!
*
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.
அதிகாரம். 111. 1109.
*
காதல் கொண்டாடுங்கள். காமம் உணர்வுகளை வெல்லட்டும்.
மனிதம் விழிப்புணர்வு பெற்று எழுச்சி பெறட்டும்.

நண்பர். டுவிட்டூ பாண்டூ அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

நன்றி.
                                    
ந.க. துறைவன். வேலூர் – 632 009.
செல் ; 9442234822 / 8903905822.  

தேதி ; 13-10-2017. 

Thursday, 12 October 2017

பெயர் தெரியாப் பூ...!!புதிய ஹைக்கூ நூல் அறிமுகம்.

தலைப்பு : பெயர் தெரியாப் பூ.

ஆசிரியர் : கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி

வெளியீடு ; கந்தகப்பூக்கள்.
           120, குட்டியணைஞ்சான் தெரு,
           சிவகாசி – 626 123. தமிழ்நாடு.
           இந்தியா.
           செல் : + 91 98435 77110.

பக்கம் : 48.

விலை     ரூ.40/-

ஹைக்கூ நூற்றாண்டு விழா முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இச்சிறு  நூலில், மகாகவி பாரதியாரின் “ ஜப்பானிய கவிதை ”  16-10-1916 – ல் வெளிவந்தக் கட்டுரை இடம் பெற்றுள்ளது சிறப்பு அம்சம். தன்னைச் சுற்றி நிகழும் சமகாலச் சம்பவங்களைப் பார்த்து அனுபவித்ததை ஹைக்கூவாக்கி காட்டியுள்ளார் ஸ்ரீபதி.
  

1.
எப்போதும் களவாடப்படுகிறது
கரைக்குள் முடங்கியோடும்
நதி.
2.
மினரல் வாட்டர் பாட்டிகளுடன்
தீவிரமாக ஆலோசனை செய்யப்பட்டது
நதிநீர்ப் பங்கீடு.
3.
லாரி ஏறி
செத்தது
நதி.
*
அரைநூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் நதிநீர் பிரச்னையைத் தீர்ப்பதற்கு எந்தவொரு அரசும் முனைப்புக் காட்டவில்லை. பேசியே காலந்தாழ்த்தி வருகிறரா்கள். இங்கே நதிகள் பாழ்பட்டு வருகின்றன. இந்நிலையினைச் சுட்டிகிறது
மேற்கண்ட நதிகள் ஹைக்கூ கவிதைகள்.

நண்பர். கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

நன்றி.
                                    
ந.க. துறைவன். வேலூர் – 632 009.
செல் ; 9442234822 / 8903905822.  
தேதி ; 13-10-2017.

.

வெளிச்சப் பறவைகள்....!!
புதிய ஹைக்கூ நூல் அறிமுகம்.

தலைப்பு : வெளிச்சப் பறவைகள்.

ஆசிரியர் : நீலநிலா செண்பகராஜன்.

வெளியீடு ; கந்தகப்பூக்கள்.
           120, குட்டியணைஞ்சான் தெரு,
           சிவகாசி – 626 123. தமிழ்நாடு.
           இந்தியா.
           செல் : + 91 98435 77110.

பக்கம் : 48.

விலை     ரூ.40/-

ஹைக்கூ நூற்றாண்டு முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இச்சிறு  தொகுப்பு. நூல் சமூக பிரச்னைகள் அலசும் மிக எளிமையான ஹைக்கூ கவிதைகளைக் கொண்டுள்ளது.
1.
குளத்தில் குளிக்கும் இளம்பெண்
மேனியை கைகளால் மூடினாள்
எட்டிப் பார்க்கும் நிலா.
2.
காமம் அழகான கவிதை
கவிதை
புரியாத காமம்.
3.
ஊருக்கெல்லாம்
வாட்ஸ்அப்பில் செய்தி
தபால்காரனின் மரணம்.

இவ்வாறான சில கவிதைகள் சட்டென வாசிப்பிற்கு வசப்படுகின்றன.

நண்பர். நீலநிலா சண்பகராஜன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

நன்றி.

ந.க. துறைவன். வேலூர் – 632 009.
செல் ; 9442234822 / 8903905822.  

*

Friday, 6 October 2017

சிரிப்பு...!!

உடல்நலத்திற்கு சிரிப்பே சிறந்த மருந்தென்றார்கள் அவன் அடிக்கடி சிரிப்பதற்கு சாப்பிடுகிறான் மருந்து.

Tuesday, 3 October 2017

குறியீடு...!!

நெற்றி திலகம்.


நச்சரிப்பு.

நச்சரிப்பு.

மனமெல்லாம் எங்கோ?
கையில் செல்போன்
தோழியின் நச்சரிப்பு.


காதல் கவிதை


தாஜ் மஹால்.

தாஜ்மகால்

உத்தரப் பிரதேசம்
அரசின் சுற்றுலா துறை
கையேட்டில் இருந்து
தாஜ் மஹால் நீக்கம்.

ந க துறைவன்.


Monday, 2 October 2017

கோரிக்கை.

ஆட்சியில் நீடித்தது இருக்க வேண்டும் என்று திருப்பதி பெருமாளிடம் கோரிக்கை வைத்துள்ளார் தமிழக முதல்வர்.

ந க துறைவன்.


கோரிக்கை.


Friday, 22 September 2017

சூரிய காந்திப்பூ...1.
கையில் அகப்படாமல்
ஏமாற்றி விட்டு
பறக்கிறது
பட்டாம்பூச்சி.
2.
வயல் வெளியில் சிரிப்பொலி
இரை தேடும் கொக்குகள்
எழும்பும் இசை நாதம்.
3.
வாழ்வதற்காக நிறையவே
வருமானம் தேடுகிறோம்
ஆனால்,
இனிமையான
வாழ்வைத்தான்
தொலைத்து விடுகிறோம்.
4.
கொடுப்பதும்
பறிப்பதும் தான்
பதவிகள்.
5.
நமது சொந்த வாழ்க்கையை
நாம் வாழ வேண்டும்
மற்றவர் வாழ்க்கையை
நாம் வாழ்தல் கூடாது.
ந. க. துறைவன்.


பட்டாம்பூச்சி.

பட்டாம்பூச்சி.

கையில் அகப்படாமல்
ஏமாற்றி விட்டு
பறக்கிறது
பட்டாம்பூச்சி.

என். கணேசன்.


பட்டாம்பூச்சி பறத்தல்


Tuesday, 19 September 2017

வாழ்க்கை.

வாழ்க்கை.

நமது சொந்த வாழ்க்கையை
நாம் வாழ வேண்டும்
மற்றவர் வாழ்க்கையை
வாழ்தல் கூடாது.

கணநாயகன்.வாழ்க்கை.


வாழ்க்கை.

வாழ்க்கை.

நமது சொந்த வாழ்க்கையை
நாம் வாழ வேண்டும்
மற்றவர் வாழ்க்கையை
வாழ்தல் கூடாது.

கணநாயகன்.வாழ்க்கை.


Friday, 15 September 2017

பிரதிபலிப்பு...!!

நீருக்குள் நிழல்
பிரதிபலிப்பதை உணருமா?
அழகான மரங்கள்.

ந க துறைவன்.


Tuesday, 12 September 2017

சிரிப்பொலி...!! ( ஹைக்கூ )
Haiku – Tamil / English.

வயல் வெளியில் சிரிப்பொலி
இரை தேடும் கொக்குகள்
எழுப்பும் இசை நாதம்.
*
Smile on the field outside
Cranes looking for prey
Wake up

N.G. Thuraivan.

Saturday, 9 September 2017

கேள்விகள்...!! ( கவிதை )
நிறைய கேள்விகள் கேட்டேன்
அவளிடம்
எந்த பதிலும் சொல்லவில்லை
எல்லாமே மௌனம்.
*
ஏமாற்றங்கள்
ஏமாற்றங்களால் தான்
வெல்லப்படுகின்றன.
*
பூமியில் உள்ளவர்களை
இரவில் வேடிக்கைப் பார்த்து
சிரிக்கிறது நிலா.
*
கலையாத மேகம்
நூல் இழைகளாய்
இறங்குகின்றன மழை
ந.க. துறைவன்.


Wednesday, 6 September 2017

நூல் அறிமுகம்.
புதிய ஹைக்கூ நூல் அறிமுகம்.

தலைப்பு     : ஹைக்கூ உலகம்

தொகுப்பாசிரியர் : முனைவர் ம. ரமேஷ்

பங்கு பெற்ற கவிஞர்கள் ; 11 பேர்.
மொத்த ஹைக்கூ கவிதைகள் : 660.

வெளியீடு ; ஒவியா பதிப்பகம்
            17 - 13 – 11, ஸ்ரீராம் காம்ப்ளஸ்க்,
            காந்தி நகர் மெயின் ரோடு,
            வத்தலகுண்டு – 624 202.
            திண்டுக்கல் மாவட்டம்
            தமிழ்நாடு.
            செல் ; 766 755 7114.

விலை     ரூ.120/-

     முகப்பு அட்டையில், கதவின் அருகே இருட்டில் ஏக்கமாய் நின்றிருக்கும் சிறுமியின் கண்கள் எதிர்கால வெளிச்சத்தை நோக்கி ஊடுருவிப் பாய்கின்றன. இதனையொரு குறியீடாகவே காண்கிறேன். 11 கவிஞர்களின் 660 ஹைக்கூக்கள் இடம் பெற்றுள்ளன. அனைத்தும் வாசகர்கள் படித்து நுகர்ந்தது அனுபவிக்க வேண்டும்.

கவிதைகளைத் தொகுத்தத் தம்பி ம. ரமேஷ், மற்றும்
வெளியிட்ட நண்பர் வதிலைபிரபா இருவருக்கும், பங்கு
பெற்ற கவிஞர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். நல்வாழ்த்துக்கள்.

ந.க. துறைவன்.   


Sunday, 3 September 2017

குட்டிக் கதை...!!

ஓஷோவின் குட்டிக்கதை..


ஒரு துறவி இமயமலைமீது ஏறிக்கொண்டிருந்தார். தோளில் துணி மூட்டை, ஒரு கையில் கமண்டலம் – தண்டம். இன்னொரு கையில் ஊன்றுகோல். இவ்வளவுதான் இவரது சுமை. நண்பகல். செங்குத்தான ஏற்றம். துறவி வியர்வையில் நனைந்திருந்தார். சற்று முன்னால் ஒரு சிறுமியும் மலை ஏறுவதைப் பார்த்தார். பத்து- பன்னிரண்டு வயதுதான் இருக்கும். அவள் தோளில் தம்பியைத் தூக்கிவைத்து ஏறிக் கொண்டிருந்தாள். ஆறு – ஏழு வயதுச் சிறுவன். நல்ல பருமன். அவள் உடலிலும் வியர்வை வெள்ளம்.

துறவி பரிதாபப்பட்டார். “ மகளே, பெரிய சுமையைத் தூக்கி வைத்துக்கொண்டு போகிறாயே கஷ்டமாக இல்லையா?, என் மூட்டையே எனக்கு பாரமாக இருக்கிறதே. ” என்றார்.

சிறுமி திடுக்கிட்டுத் திரும்பினாள். துறவியைக் கண்டாள். சிறுதுணி மூட்டையையும் கவனித்தாள். புன்முறுவலுடன் சொன்னாள். “ சாமி, உங்களுக்கு அந்த மூட்டை பாரமாக இருக்கலாம். எனக்கு அப்படியில்லை. ஏன்னா இவன் என்னோட தம்பி. ” என்றாள்.
ஆதாரம் ; ஓஷோவின் – அஷ்டாவக்ர மகாகீதை – பக்கம் – 211.
தகவல் ; ந. க. துறைவன்.

*

Wednesday, 30 August 2017

ஆர்மா மலை...!! ( கட்டுரை )
*

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகில் இருக்கும் ஆர்மா மலைக் குகையில் இருக்கும் ஓவியங்கள், கல்வெட்டுக்கள், செங்கல் கோயில் ஒன்றையும் ஆய்வாளர் பாஸ்கரன் ஆராய்ந்து இருக்கிறார். 1970 – ல் கிராமவாசிகள் இந்த மலையை “ அரவான் மலை ” என்கிறார்கள். அரவன் அல்லது அருகன் என்ற சொல் தீர்த்தங்கரைக் குறிக்கும். ஒரு ஓவியத்தின் பரப்பு 7 மீட்டர் நீளம், அகலம் 3.5 மீட்டர். அது ஒரு தாமரைக் குளத்தின் சித்திரம். அதில் வாத்துக்கள், பறவைகள், தாமரை இலைகள், மொட்டுக்கள் இடம் பெற்றுள்ளன. ஓர் ஓவியத்தில் ஆடு ஒன்றின் மேல் சவாரி செய்யும் அக்னி. இன்னொரு ஓவியம் எமன், சித்தன்னவாசல் ஓவிய முறை. இதன் காலம் 10 அல்லது 11-ம் நூற்றாண்டு என்று கணிக்கிறார் ஆய்வாளர். பல்லவர்கள், ராஷ்ரகூடர்கள், சோழர்கள் தமக்குள் அதிகாரப் போட்டி நடத்திக் கொண்டிருந்த காலத்தில் எல்லோரா, ஆர்மா மலை, சித்தன்னவாசல் ஓவியங்கள், ஓவியங்களில் இருக்கும் கலாச்சாரப் பிணைப்பைக் காட்டுகின்றன. அதோடு, ; கிடக்கட்டும் பதவிச் சண்டை, நாம் ஸ்தாபிப்போம் கலை ஒற்றுமையை!’ என்கின்றன ஒவியங்கள்.
ஆதாரம் ;  பிரபஞ்சன் கட்டுரை - தி இந்து – 30-08-201 நாளிதழ். .
தகவல் ; ந.க. துறைவன்.

*

Tuesday, 29 August 2017

சீனக் கவிதை.
ஆசையின் பின்னால் ஓட்டமா?
*
வாழ்வில் எது முக்கியம்?
பெயரா, புகழா, மனநிறைவா?
எப்போது வாழ்வு அர்த்தமுள்ளதாகும்?
மனிதாபிமானத்துடன் வாழ்வதிலா?
பணம் சேர்ப்பதிலா?
வாழ்வில் துன்பம் தருவது எது?
லாபா, நஷ்டமா?
அதிகமான ஆசை அநாவசியச் செலவுகளில் முடிகிறது.
அளவுக்கு மீறிச் சேர்ப்பது அழிவில் கொண்டு விடுகிறது.
போதுமென்ற மனம் பெற்றிருக்கும்போது
பழிச்சொல் நம்மைப் பாதிப்பதில்லை.
எடுத்த காரியத்தை எப்போது நிறுத்த வேண்டும் என்ற
நிதானம் இருக்கும்போது
ஆபத்துக்கள் அணுகுவதில்லை.
இவனே, வாழத்தெரிந்த மனிதன்
காலத்தை வென்றவன்!.
ஆதாரம் ; சீன ஞானம் – வாழ்க்கை வெளிச்சம் – நூல்.       
          மொழிபெயர்ப்பு. எம்.எஸ் உதயமூர்த்தி. – பக்கம் – 141.
தகவல் ; ந.க. துறைவன்.

*

Friday, 25 August 2017

மழை...!! ( கவிதை )1.
எல்லா கவிதைகளும்
மழைக் குறித்து
பேசுகின்றன
மழை தான்
மனிதனைக் குறித்து
பேசியதில்லை.
2.
மழையில் நனைந்து
ஒதுங்க இடம் தேடி
தவிக்கிறது
பூனை.
3..
மலர்ந்த மலருக்கு
மாலை வரைதான்
மரியாதை.
4.
எங்கே கிடைக்கும்
இளைப்பாற
குளிர் நிழல்.
5.
கடுப்பாய் இருந்தாள்
கலகலப்பானாள்
புதிய
படவையைப்
பாராட்டியபோது!
5.
எல்லோருக்கு
பிடிக்கும் அந்த
வளையல்
வட்டம்.
6.
மண் வாசம்
உணர்ந்து
அனுபவிக்கிறதோ?
தெரு நாய்.
ந.க. துறைவன்.