Labels

Haiku (3) photo (2) Thought (4) Thoughts (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருள் உரை. (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (20) கலை (1) கவிதை (332) கவிதை. (7) கவிதைகள். (7) கஜல் (17) கிராமியக் கதை (2) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (2) குறுங்கவிதைகள் (12) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர்பாடல் (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (5) செனரியு (24) சென்ரியு (38) சென்ரியு. (14) சென்ரியூ (99) துணுக்கு (96) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நல்வாக்கு. (1) நன்னெறி. (3) நீதிநெறி (1) படம் (66) பரேகு ஹைக்கூ (4) பழமொழி (2) பாடல் (1) புதுக்கவிதை (231) பொது அறிவு (12) மரபு (18) முல்லா கதை (11) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (21) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துக்கள் (36) விமர்சனம் (2) ஜென் (1) ஜென் கதை (12) ஹைக்கூ (342) ஹைக்கூ. (55) ஹைபுன் (48)

Thursday, 28 July 2016

நேசம்...!! ( ஹைக்கூ )*Haiku – Tamil / English.
*
நீ எனது நிலா எனது மேகம்
பூமியில் பூக்கள் கூட்டம்
மக்கள் அன்பாய் நேசிக்கிறார்கள்.
*
You are my moon, my cloud
Meeting on earth flowers
People love love.
*

ஒரு வரிக் கவிதைகள்...!!*
1.
உதட்டில் ஐஸ்கிரீம் இனிப்பு.
2.
பூக்களுக்கு முதுமை இல்லை.
*
3.
ஆமைகளுக்கு ஆயுள் கெட்டி.
4.

தேனிலவுக்கு எங்கும் போவதில்லை தேனீக்கள்.
5.
கிள்ளி பறிக்கும்போது கண்ணீர் வடிக்கிறது பூக்கள்.
6.
மலைக்கு விசிறிக் கொண்டிருக்கிறது ஒற்றை மரம்.
7
அவள் காலில் அணிந்திருப்பது சத்திமிடாத கொளுசு.

ந.க.துறைவன். 

Wednesday, 27 July 2016

வரவேற்பு...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
பருவ மழையை
மரங்கள் வரவேற்கின்றன
இலைகளை அசைத்து
*
Monsoon
Trees are welcomed
Shook the leaves ..

*

Tuesday, 26 July 2016

அந்தரங்கம்...!! ( புதுக்கவிதை )


*
பேசுபவர்கள் யார் என்று தெரியவில்லை?
பேசியதும் என்னவென்று புரியவில்லை.
அவர்களுக்குள் ஏதோவொரு
ஆழந்தப் பிரச்சினையின் அடிவேரின் மூலம்
உள்ளுணர்வில் புதைந்திருக்கிறது.
இருவரும் விட்டுக் கொடுக்காமல்
பேசினார்கள் கோபப்பட்டார்கள்.
யாரும் சமாதானமாகவில்லை
போவோர் வருவோர் வேடிக்கைப்
பார்க்கிறார்கள் என்று கூட
அச்சப்படவில்லை வெட்கப்படவில்லை.
பொதுவிடம் என்ற பொறுப்பின்றி
மறந்துப் போய் சண்டையின்
உச்சத்திற்கு நெருங்கிவிட்டார்கள்.
வாய்சத்தம் பெரும் சத்தமாகியது
யார் விலகிப் போகுவதன்று
தன்முனைப்பு
கூட்டம் அருகில் நெருங்கி நிற்கிறது
மெல்ல அவள் விலகி நடந்தாள்
அவனோ முறைத்து பார்த்தான்.
வெம்மையின் புழுக்கம் முகம் காட்டியது
உள் அரங்கில் நடக்க வேண்டடியது
அம்பலத்தில் 
வாழ்க்கையே வேடிக்கைப் பார்த்தலின்
நிகழ்வாக அரங்கேறியது
விரைந்து காற்றின் விசையில்
நகர்கிறது வெயிலை மறைத்த மேகம்

*

தவளைகள்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
வயல்வெளியில் ஓரே சத்தம்
மழை பெய்த இரவு
தூங்கவில்லை தவளைகள்.
*
The only noise in the field
Night rain
Frogs do not get enough sleep.

*

Monday, 25 July 2016

வளையம்...!! ( ஹைக்கூ )இரும்பு வளையம் போட்டு
பாதுகாக்கிறார்கள்
கோயில் கிணறு.

*

துவக்கம்...!! ( கவிதை )விலகி விலகி நடக்கிறார்கள்
நெருங்குகிறது காதல்.
*
சிலையின் அருகில் நின்று
எடுத்து கொண்டார்கள் செல்பி.
*
சாமி கும்பிட்டாள்
கையில் கிடைத்தது பூ,குங்குமம்.
*                                      
வெயிலில் அலைந்தாள்
வாடிவிட்டது கூந்தலில் பூ.
*
அவள் வேலையில் இருந்தாள்
அவன் வேலை தேடினான்.

*
மழை...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
சேமித்து கொள்கிறது
மழை நீரை
வளமான பூமி.
*
Is stored
Rain water
Fertile Earth.

N.G.Thuraivan.
Haiku – Tamil / English.
*
சேமித்து கொள்கிறது
மழை நீரை
வளமான பூமி.
*
Is stored
Rain water
Fertile Earth.

N.G.Thuraivan.

Sunday, 24 July 2016

இலவசங்கள் - ஒரு பார்வை.


*
அரசின் இலவசங்கள் மக்களை இருபிரிவினராகப் பிரித்து வைத்துள்ளது.
1.இலவசம் வாங்குபவர்கள்
2.இலவசம் பெறாதவர்கள்.
இவர்களில் தொடர்ந்து இலவசங்களை வாங்குபவர்களைப் பார்த்து இலவசங்களை வாங்காதவர்கள் பொறுமைப்படுவது இயல்பான செயலாகும். இலவசம் வாங்குபவர்கள் எவ்வளவு பேர் அதற்கு தகுதியானவர்கள். பத்து பனிரெண்டு ஆண்டு காலமாக தொடர்ச்சியாக இலவசங்களைப் பெற்று வருவதால் மற்றவர்களுக்கு பொறாமை ஏற்படாதா? அரசின் மீது வெறுப்பு ஏற்படாதா? மேலும் மேலும்  இலவசங்களை அளித்து மக்கள் வரிப்பணம் ஒரு பகுதியைச் சார்ந்த மக்களுக்கே போய் சேர்ந்துக் கொண்டிருக்கின்றன என்பதை அரசும் அதிகாரிகளும் அறியாத ஒன்றா? மக்கள் மத்தியில் இலவசங்களைப் பற்றி விமர்சனங்கள் என்னவென்று யாருமே அறியாதவர்களா என்ன? வாக்கு வங்கியை மையமாக வைத்து செயல்பாடும் இந்த இலவசம் என்று ஆசை ஒரு தூண்டில் தான். அதில் சிக்கியிருப்பது மக்கள் என்கின்ற மீன்கள். அதிலும் ஒரு பகுதியைச் சார்ந்த மக்கள் மட்டுமே. அவர்களால் அப்பொருள்களை யாராலுமே வாங்கி உபயோகிக்க முடியாததா? பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பான இருந்த அவர்களின் வருமானம் இன்றைக்கும் அதே வரம்பில் தானிருக்கிறதா? அவர்களில் எத்தனை பேர் தனிக்குடும்பாகி விட்டிருப்பார்கள். வேலையில் சேர்ந்து தனிவருவாய் சம்பாதிப்பார்கள். இதுபோன்று ஏராளமாக பிரச்சினைகள் இலவசங்களில் உள்ளடங்கியிருக்கிறது. தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே அதிகமாக இலவசங்களை அளித்து வரும் மாநிலமாகும்.
இலவசங்களுக்கு செலவிடும் வருவாயில் வேலைவாய்ப்பு. சிறுதொழில் வளர்ச்சி, போன்றவற்றை செய்து கொடுத்தால் என்ன? மக்கள் யாரும் இதுவரை எந்த அரசாங்கத்திடமும் எங்களுக்கு இலவசமாகப் பொருள்கள் கொடுங்கள் என்று கேட்பதே இல்லை. அரசியல்கட்சிகள் தான் தேர்தல் நேரங்களில் இலவசம் வாக்குறுதிகளை அளித்து வாக்குகளைப் பெற முயற்சிக்கின்றன. இதுபோன்ற அரசின் செயல்பாடுகள் இந்தியா பொருளாதார வளர்ச்சிக்கு முன்னேற்றமாக அமையாது. இதனால் கடன் சுமையும், டாஸ்மாக் வருமானமும் தான் வீணாக்கப்பட வேண்டியதாயிருக்கும். டாஸ்மாக் வருமானம் இல்லையெனில், வேறு திட்டங்களிலிருந்து பணம் எடுத்து தானே இலவசத்திற்காகச் செலவு செய்ய வேண்டடிலயிருக்கும். இதையெல்லாம் அரசியல்கட்சிகளும் மக்களும் உணராமல் இல்லை. எதிர்காலத்தில் இப்போக்கு தொடரும் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை. மக்களும் விழிப்புணர்வு பெற்று வருகிறார்கள். எனவே, டாஸ்மாக் எதிர்த்து மக்கள் போராடுவது போன்று இன்னும் சில ஆண்டுகள் கழித்து அரசின் இலவசங்களை எதிர்த்து மக்கள் போராடும் காலம் ஒன்று கனிந்து வரும் என்றே எதிர்ப்பார்க்கலாம்.

*

Saturday, 23 July 2016

முலாம்பழம்...!! ( கவிதை)
1.
அவள் காலில் அணிந்திருப்பது 
சத்தமிடாத கொளுசு.

2. 
முலாம்பழம் வாங்கியவன் 
உருட்டி உருட்டிப் பார்த்து 
விலைக் கேட்டான்.

3. 
பாதையில் இரத்தச்
சிவப்பாய் 
வெற்றிலைத் துப்பல்கள்.
*

Thursday, 21 July 2016

சூதாட்டம்..!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English;.
*
வழிபாடு இல்லாத கோயில்
ஊருக்கு வெளியில்
சூதாடிகளின் சுகமான இருப்பிடம்.
*
Wish Temple Worship
Outside the town
Gamblers comfortable location.

*

ஆடிவெள்ளி...!!ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு பொங்கல் வைப்பது கூழ்வார்ப்பது அருள்வாக்கு கேட்பது என்றெல்லாம் ஓரே திருவிழாக் கொண்டாட்டம் தான். மக்களின் முகங்களில் மகிழ்ச்சி சந்தோஷம் காண முடிக்கின்றது. ஆனால், கூழ்வார்ப்பு என்ற பெயரில் அண்டா அண்டாவாய் நிரம்பும் கூழினை யார் குடிக்கிறார்கள்? யாரும் குடித்து நானும் பார்த்ததில்லை. அக்கூழினைப் பள்ளம் தோண்டி அதில் ஊற்றி மூடிவிட்டு வீணாக்குகிறார்கள் அல்லது பிராணிகள் வளர்ப்போர் வந்து குடங்களில் வாங்கிக் கொண்டுப் போய் அவைகளுக்கு ஊற்றி பசியாற்றுகிறார்கள். அதற்கு பதிலாக மக்கள் விரும்பி சாப்பிடும் விதவிதமான ஏதேனுமொரு பொருளைப் படைத்து அம்மனுக்கு காணிக்கையாக்கலாம். அப்பொருளையே வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக அளித்து, மகிழ்ச்சியோடு புண்ணியம் தேடலாமே. பக்தியிலும் மாற்று சிந்தனைகள் கொண்டு வந்து திருவிழாக்களைப் பெருமையோடு கொண்டாடி மகிழலாமே. எல்லாவற்றிற்கும் மனமிருந்தால் மார்க்கம் உண்டு.
ந.க.துறைவன்.

*

Wednesday, 20 July 2016

செல்பி...!! ( கவிதை )


*
செல்போனில் பேசுகிறாள்
சிரித்து சிரித்து மகிழ்கிறாள்
சத்தமில்லாமல் பேசுகிறாள்
சந்தேகம் வாராமல் பேசுிறாள்.

குறுஞ்செய்திகள் அனுப்புகிறாள்
குறும்பு வரிகள் படிக்கிறாள்
குலுங்கி குலுங்கி சிரிக்கிறாள்
குனிந்து வெட்கப்பட்டு வியர்க்கிறாள்

செல்பி எடுத்து பார்க்கிறாள்
அழகை ரசித்து சிரிக்கிறாள்
நண்பர்களுக்கு அனுப்புகிறாள்
நிறைய லைக் வாங்குகிறாள்

மனம் கலங்கி நிற்கிறாள்
மலங்க மலங்க முழிக்கிறாள்
சிக்கில் போக்கத் தெரியாமல்
சிக்கிக் கிட்டு தவிக்கிறாள்.
*

Monday, 18 July 2016

சுவடு...!! ( சென்ரியு )நம்பியவன் கைவிட்டான்
அறிமுகமில்லாதவன் கைபிடித்தான்
நெஞ்சில் அழியாத சுவடு.

*

ஓஷோ சொன்ன கதை...!!ஒரு நாள் இரவு நண்பர்கள் கூட்டமாகச் சேர்ந்து ஒரு ஹோட்டலில் பெரிய விருந்து ஏற்பாடு செய்தனர். அவர்கள் விடியும்வரை நன்றாகக் குடித்து, உண்டு மகிழ்ந்தனர். அவர்கள் விருந்து முடிந்து போகும்போது அந்த ஹோட்டலின் முதலாளி தனது மனைவியுடன் இப்படி நிறைய எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களை அனுப்பியதற்காக கடவுளுக்கு நன்றி கூறும்படி கூறினார்.  இப்படிப்பட்ட கூட்டம் தொடர்ந்து வந்தால் தாங்கள் பணக்காரர்களாகிவிடலாம் என்றும் அவர் மனைவியிடம் கூறினார். அந்த விருந்தை ஏற்பாடு செய்தவர் ஹோட்டல் முதலாளியிடம் விருந்துக்கான தொகையைக் கொடுக்கும்போது தான் செய்கின்றத் தொழிலும் சிறப்பாக நடைபெற வேண்டுமென்று வேண்டிக் கொள்ளும்படிக் அந்த ஹோட்டல் முதலாளியிடம் கேட்டுக் கொண்டார். ஏனெனில் தான் செய்யும் தொழில் நன்றாக நடந்தால்தான் மீண்டும் மீண்டும் இந்த ஹோட்டலுக்கு வரமுடியும் என்று கூறினார்.
உடனே ஹோட்டலின் சொந்தக்காரர், “ அது சரி, உங்களது தொழில் என்ன ஐயா? ” என்று கேட்டார். அதற்கு அந்த விருந்து கொடுத்தவர், “ நான் பார்ப்பது சுடுகாட்டில் வெட்டியான் வேலை, நிறைய பேர் செத்தால் தான் எனக்கு தொழில் நன்றாக நடக்கும் ” என்று கூறினான்.
ஆதாரம் ; ஓஷோவின் “ காமத்திலிருந்து கடவுளுக்கு ” – நூல் – பக்கம் – 241 -242.

தகவல் ; ந.க.துறைவன். 

Sunday, 17 July 2016

சந்தேகம்...!!

அன்பே,

சந்தேகமில்லாமல் எப்படித் தேடல் துவங்கும்?
சந்தேகமில்லாமல் எப்படிச் சத்தியத்தை
அறிந்துக் கொள்ள இதயம் துடிக்கும்?
ஞாபகத்தில் கொள் –
நம்பிக்கை மனிதனைக கட்டிப் போடும்
சந்தேகம் அவனை விடுதலைப் படுத்தும்.
ஆதாரம் ; ஓஷோ – ஒரு கோப்பைத் தேனீர் – நூல் – பக்கம் – 49.
தகவல் : ந.க.துறைவன்.
*

வேடிக்கை...!! ( சென்ரியு )

Senryu – tamil / English.

வேடிக்கை பார்க்கிறார்கள்
கண்கள் எதிரில் நிகழ்கிறது
ஆடை விலகிய பெண்ணின் பிணம்                         
*
Fun
The opposite occurs when the eyes
Clothing and pulled the girl's corpse

*

பார்த்தல்...!! ( கவிதை )


*
சவ ஊர்வலத்திற்கு
வழிவிட்டுப் போகின்றன
சாலையில் வாகனங்கள்.
உள்ளிருந்தே பார்வையிடுகிறார்கள்
கடைக்காரர்கள்.
விலகி நின்று பார்க்கிறாரகள்
பாதசாரிகள் வியாபாரிகள்.
பாடை முன் செல்ல பின்னே
மலர்கள் பிழ்த்து உதிர்க்கிறார்கள்.
பின்தொடர்பவர்கள்.
மௌனமாக பயணிக்கிறது
பிணவண்டி.
இறந்தவர் எந்தப் பகுதியென்று
எவருக்கும் தெரியாது?
இறந்தவரை இரக்க உணர்வோடு
பார்க்கிறார்கள்
நாளை இறக்கப் போகிறவர்கள்!!


*

Friday, 15 July 2016

இலைகள்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
வார்த்தை இலைகள்
மௌனமாய் உதிர்த்தது
பேசாத மரங்கள்
*
Word leaves
Beamed silent
Mumble trees
*

வாடிக்கையாளர்கள்...!!
 முடித்திருத்தகம் கடையின்
மூலை முடுக்கெல்லாம்
தொங்கும்
பாலியல் படங்கள்
நாவிதருக்குத் தெரியுமோ?
நாடிவரும்
வாடிக்கையாளரின்
மன இயல்
உளவியல்.
*

Thursday, 14 July 2016

பாறைகள்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
எவ்வளவு  தான்  தாங்கும்
அலைகளின்  மோதல்
கரையில்  நிற்கும்  பாறைகள்.
*
How's Accommodation
Clash of the waves
Standing on the shore rocks.

*

விருது வாங்கலையோ விருது...!!இன்றைய நாளிதழில்

மகளிருக்காக இந்த ஆண்டு முதல்  “ அம்மா இலக்கிய விருது ” தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பாருங்க.
அப்படியே மற்ற கட்சிக்காரர்களும் மகளிருக்காக புதுமையா இப்படி விருதுகளை அறிவிக்கலாமே!
1. தாத்தா இலக்கிய விருது
2. தளபதி இலக்கிய விருது
3. பெரிய அய்யா இலக்கிய விருது
4. சின்ன அய்யா இலக்கிய விருது
5. அண்ணி இலக்கிய விருது
6. தங்கை இலக்கிய விது
7. தோழி இலக்கிய விருது
8. பாட்டி இலக்கிய விருது
9. தாய் இலக்கிய விருது
இப்படி நிறைய பெயரில் அறிவிச்சி எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தலாமே.
என்ன எழுத்தாளர்களே விருது வாங்க விண்ணப்பிச்சிட்டீங்களா? சீக்கிரம்… சீக்கிரம்…
விருது உங்களுக்குத் தான்… நல்வாழ்த்துக்கள்.
ந.க.துறைவன்.

*

நகரும் வீடு...!!இறைவன் தன் திருமணத்திற்கு எல்லா மிருகங்களுக்கும், உயிரினங்களுக்கும் அழைப்பு அனுப்பினார்.
எல்லா உயிரினங்களும் சென்றன.
ஆமை மட்டும் போகவில்லை.
இறைவனுக்குக். கோபம் வந்தது. அடுத்த நாள் ஆமையைக் கூப்பிட்டு “ ஏன் என் அழைப்பை ஏற்று திருமண விருந்தில் கலந்துக் கொள்ளவில்லை ” என்றார்.
ஆமை, “ இறைவா! உலகத்தில் தன் சொந்த வீட்டை விடச் சிறந்த வீடு எங்கே உள்ளது? தன் வீட்டில் இருக்கும் திருப்தி, அமைதி, சுகம் வேறு வீட்டில் கிடைக்குமா? ” என்று கேட்டது.
இறைவன் கோபம் கொண்டார். “ இனி நீ உன் வீட்டை உன் மேல் சுமந்து கொண்டு நீரிலும் நிலத்திலும் அலையக் கடவாய்! ” என்று சபித்தார்.
ஆகவே தான் ஆமையின் ஓடு, வீடாய் அமைந்து சுமக்கிறது.
ஏ மனிதா! உன் வீட்டில் இருக்கிற சுகமும் சுதந்திரமும் அரசனின் அரண்மனையில் கிடைக்குமா?
உன் வீட்டின் கூழ் அரசனின் அறுசுவை உணவினும் மேம்பட்டதே!
எலிக்கு வளை. பாம்பிற்னுப் புற்று. குருவிக்குக் கூடு. சிங்கத்திற்குக் குகை!
உனக்கென வீடு எங்கே?
உலகம், உன்னுடைய வாடகை வீடுதானே!
ஆதாரம் ; ஈசாப் நீதிக்கதைகள் – ஆ.மா.சகதீசன் – நூல் – பக்கம் – 75 – 76.
தகவல ; ந.க.துறைவன்.

*

Wednesday, 13 July 2016

இரண்டு கவிதைகள்...1.
குழிப்புண்கள்
*
மேம்பாலத்தைக்
கடக்கும் போதெல்லாம்
பாலாற்று நதியைப்
பார்க்கிறது கண்கள்.
மணல் வாரி வாரி
எடுத்துள்ளதால்
உடம்பெல்லாம்
குழிப்புண்கள்.
*
2.
கட்டணம்
*.
நகராட்சி கட்டணக்
கழிப்பிடத்தில்
இலவசமாக
சிறுநீர் கழிக்கிறது
நாய்.
ந.க.துறைவன்.

*

நதி...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil /English;.
*.
நீருக்குள் தெரிகிறது
கரையில் மரங்கள்
பூக்களின் அழகை ரசிக்கும் நதி.
*
It looks like the water
Trees on the shore
River to enjoy the beauty of flowers.

*

Tuesday, 12 July 2016

பூவும் வண்டும்...!! ( கவிதை )என்னை பார்த்தும்
பார்க்காமலும் ஒதுங்கி
போக நினைத்தாலும்
மறந்து போக முடியவில்லை.
நெஞ்சின் நினைவுகள்
அழித்துவிடவில்லை
என்ன இருந்தாலும்,
பூவுக்கும் வண்டுக்குமான
உறவு பிரிக்க முடியுமா
*

Monday, 11 July 2016

ஹைக்கூ...!!

Haiku – Tamil / English;
*
சத்தியம்,சிவம், சுந்தரம்
நெற்றியில் மூன்று
ஹைக்கூ வரிகள்.
*
Truth, Shivam, Sundaram
Three on the forehead
Haiku lines.
*

காதல் தெம்மாங்கு பாடு...!! ( கவிதை )தென்றல் காற்றே தென்றல் காற்றே
தெம்மாங்கு பாடு.
தாவணி போட்டக் கன்னி வருகிறாள்
தெம்மாங்கு பாடு.
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி
தெம்மாங்கு பாடு
செவத்த பொண்ணு பாதையில் வருகிறாள்
வரவேற்று பாடு.
மல்லிகைப்பூவே மல்லிகைப்பூவே
தெம்மாங்கு பாடு
அவள் கருத்த கூந்தலைச் சூடிய அழகை
தெம்மாங்ஞ பாடு
கோவைப் பழமே கோவைப் பழமே
தெம்மாங்கு பாடு
சிவந்த உதடுகள் துடிக்குது பாரு
தெம்மாங்கு பாடு
உள்ளம் உருக உணர்வுகள் பெருக
தெம்மாங்கு பாடு
காதல் தெம்மாங்கு பாடு
காதல் தெம்மாங்கு பாடு!!

Justice


Peace


Saturday, 9 July 2016

உறவுகள் மேம்பட...!! ( துணுக்கு )1. நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை ( Ego ) விடுங்கள்
2. அர்த்தமில்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை
  விடுங்கள் ( Loose Talk )
3. எந்த விஷயத்தையும் பிரச்சனையையும் நாசுக்காக கையாளுங்கள்.
  ( Diplomacy )விட்டுக் கொடுங்கள் ( compromise )
4. சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத்தான் ஆகவேண்டும் 
  என்பதை உணருங்கள் ( Tolerance )
5. எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் 
   உண்டோ,  இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
6. உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக்
   கொள்ளுங்கள். ( Flexibility )
7. மற்றவர்களுக்குரிய மரியாதையைக் காட்டவும், இனிய, இதமான
  சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள். ( Courtesy )
8. புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட
  நேரமில்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள்.
9. பிரச்சனை ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும்
  என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவக்க முன் வாருங்கள்.
ஆதாரம் ; ஓஷோவின் “ மனம் இறக்கும் கலை ” – நூல்.
தகவல் ; ந.க.துறைவன்.

*

Friday, 8 July 2016

காவல்பொம்மை...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / Haiku
*
பேண்ட் சர்ட் அணிந்த கிறுக்கன்
நிலத்தின் நடுவே
காவல் பொம்மை.
*
Shirt Band wore loony
In the midst of the land
Police toy.

*

குழந்தைகளைக் கொல்லும் கம்சர்கள்...!!குழந்தைகள் விரும்பி உட்கொள்ளும் சாக்லெட் போன்ற பொருள்களில் விஷசத்து மிகுந்தப் பொருள் கலப்படம் செய்து, தயாரித்து விற்பனைfக்கு வெளியிட்டுள்ள
மனசாட்சி இல்லாத தொழிலதிபர்கள்
மனசாட்சி இல்லாத அதிகாரிகள்
மனசாட்சி இல்லாத இடைத்தரகர்கள்.
மனசாட்சி இல்லாத மொத்த விற்பனையாளர்கள்
மனசாட்சி இல்லாத சில்லரை வியாபாரிகள்
குழந்தைகளை எப்படியெல்லாம் ஏமாற்றியுள்ளார்கள்?
இவர்களுக்கெல்லாம் குழந்தைகளே இல்லையா என்ன?
அவர்கள் குழந்தைகள் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். ஆனால், தேசத்தில் உள்ள குழந்தைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக விஷமிட்டு மெல்ல மெல்ல மனநோயாளிகளாக்கி சாகடிக்க வேண்டும். இதென்ன வியாபார உத்தி? இதை சர்வதேச மாபியாக்களிடம் கற்றார்களா? கோடிகோடியாக பணம் சம்பாதிக்கக்
குழந்தைகளைக் குறிவைத்து தாக்கும் இவர்கள் யார்? இவர்களின் பின்னணியில் இருப்பர்கள் யார்?
இவர்கள் குழந்தைகளைக் கொல்லும் கம்சர்கள்
இந்தியதேசத்தின் குழந்தைகளைச் சீரழிக்கும் வம்சர்கள்.     
இந்தக் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கும் எங்கேனுமொரு கிருஷ்ணபரமாத்மா இருக்கலாம்? தப்பிக்கலாம்?
நெஞ்சுப் பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதர்களை….??ஃ
ந.க.துறைவன்.

*

பென்குவின்....!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
காண்போர் இல்லாத இடத்தில்
ஆனந்த நடனமாடி மகிழ்கின்றது
பென்குவின் பறவைகள்.
*
Without blowing the place
Enjoy dancing with joy
Penguin birds.

N.G.Thuraivan.

Thursday, 7 July 2016

கூத்தாடிகள்...!! ( கவிதை )


*
நெடுநாள் வாழ்ந்ததின் அர்த்தம் சூன்யம்
நொடியில் உணர்த்தி விடுகிறது மரணம்
*
கழைக்கூத்தை வேடிக்கைப் பார்க்கிறார்கள்
மன வக்கிரக் கூத்தாடிகள்.
 *
வெண்டைப்பூ கொண்டை ஏறாது    
சண்டைகோழி சமாதானம் ஆகாது.
*
அலட்சியம் வாழ்வை வீழ்த்தும்.
இலட்சியம் வாழ்வை உயர்த்தும்
*
கருணை மனம் தேட வேண்டியிருக்கிறது
மனிதம் பொறுமை  இழந்து வருகிறது

*

Wednesday, 6 July 2016

பணியாரங்கள்...!!

சென்ரியு

தட்டில் வைத்தாள் அம்மா
சுயைான குழிபணியாரங்கள்
குளிர்ந்த பனைநுங்குகள்.

நிலா...!! ( ஹைக்கூ )

HAIKU / Tamil / English;.
*
சில்லென்று காற்று
மழை வருமோ?
தெரியவில்லை நிலா.
*
Cold wind
Might rain?
The moon is not known.

*

Tuesday, 5 July 2016

அன்பே...!! ( கவிதை )வாழ்வு ஒரு எல்லையில்லாத புதிர்,
ஆகவே அறிவு மிகுந்தவர்கள்
வாழ முடிவதில்லை்
வாழ்வு குழந்தைத்தனம் கொண்டோர்க்கே
உரியதாக இருக்கிறது.
யாருடைய இயற்கை அறிவுப் புழுதியால்
மூடப்படவில்லையோ அவர்களுக்கே
வாழ்வு உரியது.
ஆதாரம் ;ஓஷோ – ஒரு கோப்பைத் தேனீர் – நூல் – பக்கம் – 8.

தகவல் ; ந.க.துறைவன்.

அணில் விளையாட்டு...!! ( கவிதை )
கொய்யா மரக்கிளையில்அமர்ந்து
பழத்தைக் கொறித்து தின்கிறது
அழகான அணில்பிள்ளை.
வேகமாய் விரைந்து வந்து
அணிலை விரட்டுகிறது காகம்.
துள்ளித் துள்ளி அடுத்தடுத்தக்
கிளைக்குத் தாவியது வேகமாய்
உர்ரென்று முறைத்த குரங்கின்
குரல் கேட்டு மீண்டும் தாவியது.
கையிலிருந்தப் பப்பாளிப் பழத்தினை
எறிந்துவிட்டு போட்டிக்கு வந்தத்
தோழனைத் துரத்திய விரட்டியது
தோழமைக் குரங்கு.
திடீரென யாரோ கல்லெறிகிற
சத்தங்கேட்டச் சிட்டுக்கள் பறந்தன.
மரத்தின் கீழ் நின்றிருந்த இரு
சிறுவர்களைக் கண்டதும்
உற்றுப் பார்த்து நக்கல் செய்து
விலகியோடியது
அணில்பிள்ளைக்.கடித்தப்பழம்
கீழே விழுந்தது. தாவி எடுத்து
ஊதித் துடைத்தனர் சிரித்தனர்
அணில் விளையாட்டின் மௌன
அழகை ரசித்தனர் சிறுவர்கள்
சிறிது நெரத்தில் மறைந்தது
அணில்பிள்ளை சிறுவர்கள் கலைந்தனர்
மணித்துளிகளில் நிகழ்ந்தச் சந்தோஷத்
தருணத்தின் இன்பத்தை இழந்தது
தவிக்கின்றது மௌனமாய்
கொய்யா மரம்.

Sunday, 3 July 2016

சுவாமி விவேகானந்தர் நினைவுநாள்.


உரை.

இன்பத்தில் இருப்பது நோயின் பயம்;
உடலில் இருப்பது சாவின் பயம்;
உயர்பிறப்பில் சாதி இழத்தலின் பயம்;
பணத்தில் இருப்பது கொடுங்கோலின் பயம்;
பலத்தில் இருப்பது பகைவர் பயம்;
மதிப்பில் அதை இழத்தலின் பயம்;
அழகில் இருப்பது மூப்பின் பயம்;
அறிவில் இருப்பது தோல்வி பயம்;
குணத்தில் இருப்பது வசையின் பயம்;
வாழ்க்கையில் இருப்பது எல்லாம் பயமே;
துறவில்தானே பயமே இல்லை!
ஆதாரம் ; சுவாமி விவேகானந்தர் – தியானமும் அதன் முறையும் – நூல் – பக்கம் – 59 – 60.

தகவல் ; ந.க.துறைவன்.

Friday, 1 July 2016

சிரிப்பு...!! ( சென்ரியு )

Senryu – Tamil / English;.
*
மழைக்கு ஒதுங்கி நின்றவர்கள்
செல்லில் பேசி கொண்டிருந்தனர்
பைத்தியக்காரனின் சிரிப்பு
*
Rains and standing aside
Were talking on cell
Madman's laughter

(