Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Sunday 24 July 2016

இலவசங்கள் - ஒரு பார்வை.


*
அரசின் இலவசங்கள் மக்களை இருபிரிவினராகப் பிரித்து வைத்துள்ளது.
1.இலவசம் வாங்குபவர்கள்
2.இலவசம் பெறாதவர்கள்.
இவர்களில் தொடர்ந்து இலவசங்களை வாங்குபவர்களைப் பார்த்து இலவசங்களை வாங்காதவர்கள் பொறுமைப்படுவது இயல்பான செயலாகும். இலவசம் வாங்குபவர்கள் எவ்வளவு பேர் அதற்கு தகுதியானவர்கள். பத்து பனிரெண்டு ஆண்டு காலமாக தொடர்ச்சியாக இலவசங்களைப் பெற்று வருவதால் மற்றவர்களுக்கு பொறாமை ஏற்படாதா? அரசின் மீது வெறுப்பு ஏற்படாதா? மேலும் மேலும்  இலவசங்களை அளித்து மக்கள் வரிப்பணம் ஒரு பகுதியைச் சார்ந்த மக்களுக்கே போய் சேர்ந்துக் கொண்டிருக்கின்றன என்பதை அரசும் அதிகாரிகளும் அறியாத ஒன்றா? மக்கள் மத்தியில் இலவசங்களைப் பற்றி விமர்சனங்கள் என்னவென்று யாருமே அறியாதவர்களா என்ன? வாக்கு வங்கியை மையமாக வைத்து செயல்பாடும் இந்த இலவசம் என்று ஆசை ஒரு தூண்டில் தான். அதில் சிக்கியிருப்பது மக்கள் என்கின்ற மீன்கள். அதிலும் ஒரு பகுதியைச் சார்ந்த மக்கள் மட்டுமே. அவர்களால் அப்பொருள்களை யாராலுமே வாங்கி உபயோகிக்க முடியாததா? பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பான இருந்த அவர்களின் வருமானம் இன்றைக்கும் அதே வரம்பில் தானிருக்கிறதா? அவர்களில் எத்தனை பேர் தனிக்குடும்பாகி விட்டிருப்பார்கள். வேலையில் சேர்ந்து தனிவருவாய் சம்பாதிப்பார்கள். இதுபோன்று ஏராளமாக பிரச்சினைகள் இலவசங்களில் உள்ளடங்கியிருக்கிறது. தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே அதிகமாக இலவசங்களை அளித்து வரும் மாநிலமாகும்.
இலவசங்களுக்கு செலவிடும் வருவாயில் வேலைவாய்ப்பு. சிறுதொழில் வளர்ச்சி, போன்றவற்றை செய்து கொடுத்தால் என்ன? மக்கள் யாரும் இதுவரை எந்த அரசாங்கத்திடமும் எங்களுக்கு இலவசமாகப் பொருள்கள் கொடுங்கள் என்று கேட்பதே இல்லை. அரசியல்கட்சிகள் தான் தேர்தல் நேரங்களில் இலவசம் வாக்குறுதிகளை அளித்து வாக்குகளைப் பெற முயற்சிக்கின்றன. இதுபோன்ற அரசின் செயல்பாடுகள் இந்தியா பொருளாதார வளர்ச்சிக்கு முன்னேற்றமாக அமையாது. இதனால் கடன் சுமையும், டாஸ்மாக் வருமானமும் தான் வீணாக்கப்பட வேண்டியதாயிருக்கும். டாஸ்மாக் வருமானம் இல்லையெனில், வேறு திட்டங்களிலிருந்து பணம் எடுத்து தானே இலவசத்திற்காகச் செலவு செய்ய வேண்டடிலயிருக்கும். இதையெல்லாம் அரசியல்கட்சிகளும் மக்களும் உணராமல் இல்லை. எதிர்காலத்தில் இப்போக்கு தொடரும் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை. மக்களும் விழிப்புணர்வு பெற்று வருகிறார்கள். எனவே, டாஸ்மாக் எதிர்த்து மக்கள் போராடுவது போன்று இன்னும் சில ஆண்டுகள் கழித்து அரசின் இலவசங்களை எதிர்த்து மக்கள் போராடும் காலம் ஒன்று கனிந்து வரும் என்றே எதிர்ப்பார்க்கலாம்.

*

No comments:

Post a Comment