Labels

Friday, 30 June 2017

கரு.

எழுத நினைத்த
கதை உருவான
கரு கலைந்தது.

ந.க. துறைவன்.

எழுத்துக்கள்.

நல்ல கவிதையில் என்ன இருக்கும்?
கெட்ட கவிதையில் என்ன இருக்கும்?
எல்லாவற்றிலும் கூச்சப்பட்டு எழுத்து வரிகள் இருக்கும்.

. க. துறைவன்.

Wednesday, 28 June 2017

Zen proverb.


கனி...!! ( துணுக்கு )
நீங்கள் கனி உண்ணும்போது உங்கள் எண்ணங்களின் வழியே அக்கனி விளைந்த மரம் உங்களுக்குள் நுழைகிறது. ஒருநாள் நீங்கள் இறந்து போவீர்கள். உங்களை மண்ணில் புதைப்பார்கள். மரங்கள் உங்களை உறிஞ்சிக் கொள்ளும். நீங்கள் கனியாக மாறுவீர்கள். உங்கள் குழந்தைகள் உங்களை உண்பார்கள். இப்போது நீங்கள் உங்களுடைய முன்னோர்களை உண்டு கொண்டிருக்கிறீர்கள். மரங்கள் அவர்களைக் கனியாக மாற்றி வைத்திருக்கின்றன. நான் சைவ உணவு உண்பவன் என்று உங்களைக் பற்றி எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? வெளித் தோற்றம் கண்டு ஏமாந்து விடாதீர்கள். நாம் எல்லோரும் தன் இனத்தைத் தானே உண்ணும் நரமாமிச ( Cannibals ) மனிதர்கள்.

ஆதாரம் ; “ சத்தமில்லாத சப்தம் ” – ஓஷோ – நூல் -  பக்கம் – 66 – 67.

தகவல் ; ந. க. துறைவன். 

Tuesday, 27 June 2017

செய்திகள் என்ன சொல்லுது? ( துணுக்குகள் )


*
1.
அமிலத்தன்மையைக் குறைக்க காஸ்டிக் சோடா கலப்படம். கெட்டுப் போன பாலில் பவுடர் தயாரிப்பு. தனியார் நிறுவனங்கள் மீது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பகிரங்க குற்றச்சாட்டு.
இப்பாவாச்சும் பாலில் கலப்படம்னு ஒத்துக்கிறாரே அமைச்சர். இது பலகால நடந்து வருகிறதே அப்பவெல்லாம் தெரியாமையா போச்சு? எல்லாம் காதிலே பூச்சுத்தல்


2.
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களது
குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்காதது ஏன்?
20 கேள்விகளுக்கு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.
காலம் கடந்த ஞானம். இந்தக் கேள்வி தனியார் பள்ளிகளுக்கு அரசு உரிமம் வழங்குவதற்கு முன்பாகவே, அரசு சட்டம் நிறைவே.ற்றி செய்திருக்க வேண்டும்.
ஆசிரியர்கள் மட்டுமல்ல. அனைத்து அரசு ஊழியர்களுக்கு பொருந்தும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
3
எழுத்தாளர் கழனியூரன் காலமானார்.

     அவருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலி.
4.
உ.பி. புந்தேல்கண்ட் பகுதியில் குளம் கிணறுகள் தூர்வாரும் “ நீர்த் தோழிகள் ” பெண்கள் அமைப்பு.
     தமிழ்நாட்டில் இதுபோன்று செயல்படும் பெண்கள் உள்ளதா?
ஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 28-06-2017.
தகவல் ; ந.க. துறைவன்.

*

துளிகள்.

மனம்.

Saturday, 17 June 2017

வன்கொடுமை.

மகன், மருமகள், மாமியார்கள் தொடர்ந்து மகள்களாலும் முதியோர்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிறார் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். இக்குடும்ப உறவுகளின் வன்கொடுமைகளுக்கு சமூகம் என்ன தீர்வு காணப்போகிறது?

. க. துறைவன்.

Thursday, 15 June 2017

காதல்

வண்ணத்துப்பூச்சியாய்
என்னுள் நுழைந்தாய்
இப்பொழுது
தேளாய்கொட்டி
இம்சிக்கிறாயே!

ந. க. துறைவன்.

Wednesday, 14 June 2017

விழிப்புணர்வு

இன்று உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம்.

ந.க. துறைவன்.

Friday, 9 June 2017

மகிழ்ச்சி

அக்கா.

ரசம்
நன்றாக இருக்கிறது
என்று மனைவியைப்
பாராட்டினான்.
அருகில் இருந்த
அக்காவின் முகம்
சுருங்கி வாடியது.

ந. க. துறைவன்.

எங்கோ நினைவு?

புல்வெளி :

எங்கோ நினைவு?

எல்லா வேலைகளும்
நன்றாகவே நடந்தது
ஒன்றை தவிர
பூ வாங்க
மறந்து போனாள்?

ந. க. துறைவன்.

Wednesday, 7 June 2017

இடைவெளி

சொற்களின் இடைவெளி மௌனத்தின்
உள்ளமைதியே ஹைக்கூ.

ந. க. துறைவன்.

Tuesday, 6 June 2017

அஞ்சலி.

அஞ்சலி.

மூத்த அரசியல்வாதியும், சிறந்த அரசியல்
விமர்சகருமான திரு. இரா. செழியன் அவர்கள்
காலமானார்.
அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்
கொள்கிறேன்.

ந.க.துறைவன்.     


Sunday, 4 June 2017

செய்தி.
*
கடந்த மூன்று ஆண்டுகளில் ( பாஜக ஆட்சியில் ) மக்களவைக்கு ஐந்து எம்.பி.க்கள் மட்டுமே 100% வருகை.
தி இந்து – 05-06-2017
1.
மற்றவர்கள் என்னாவானார்கள் என்று கேள்விக் கேட்க முடியாது?
2.
இவர்கள் தான் இந்தியாவை ஆட்சியதிகாரம் செய்பவர்கள்.
3.
மக்களுக்கான சட்டம் இயற்றுபவர்கள்.
4.
அதிகபட்சமான உச்ச சம்பளம் மற்றும் இதர சலுகைள் ஏராளமாகப் பெறுபவர்கள்.
5.
ஐந்தாண்டு மட்டுமே எம்.பி, எம்.எல்.ஏ – வாக இருந்து வாழ்நாள் முழுக்க ஓய்வூதியம் பெறுபவர்கள்.
தகவல் ; ந.க.துறைவன்.
           


வாழ்த்துக்கள்

இன்று உலக சுற்றுச்சூழல் தினம்

நல்வாழ்த்துக்கள்

ந. க. துறைவன்.

Saturday, 3 June 2017

அகந்தை...!! ( துணுக்கு )வாசித்ததில் வசீகரித்தது.
*
கற்றுக் கொள்ளத் தயாராக இல்லாதபோது மனம் முதிர்ச்சியற்றுப் போகிறது. யாரிடமிருந்தும் எதையும் கற்றுக்கொள்ள அவசியமில்லை என்று நினைக்கும்போது மனதில் அகந்தை குடிகொண்டு விடுகிறது. தனக்கு ஏற்கனவே எல்லாம் தெரியும் என்ற எண்ணம் ஏற்படும்போது அகந்தை அதிகரித்து விடுகிறது. 
ஆதாரம் ; சத்தமில்லாத சத்தம் – ஓஷோ – நூல் – பக்கம் – 43.

தகவல் ; ந.க.துறைவன். 

சிட்டுக்கள்.

Friday, 2 June 2017

ஞானம்

பிரச்சினை எதுவுமில்லை என்ற உணர்வே ஞானமாகும். ஓஷோ. 👌

முல்லா கதை.
*
முல்லா நஸ்ருதீன் ஒருமுறை என்னிடம் “ பல மாதங்களாக இந்த கெட்ட நாளுக்காக நான் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்திருந்தேன். நான் போக வேண்டிய தருணம் வந்துவிட்டது. ” என்றார்.
“ மருத்துவரிடமா, பல் வைத்தியரிடமா – யாரிடம் போகிறீர்கள்? ”என்று கேட்டேன்.
“ இரண்டும் இல்லை. நான் திருமணம் செய்துக்கொள்ளப் போகிறேன் ” என்றார் முல்லா.
ஆதாரம் ;“ சத்தமில்லாத சப்தம் ” – ஓஷோ – நூல் – பக்கம் – 19.
தகவல் ; ந.க.துறைவன்.

*

Thursday, 1 June 2017

அஞ்சலி.

கவிக்கோவுக்காக.

சோக கீதம்
இசைக்கிறது
கஜல்.

ந. க. துறைவன்.

மகரந்த சிறகு...!!
கவிக்கோ. அப்துல்ரகுமான் மகரந்தச் சிறகு.
கஜல் கவிதைகள்.
1,
இறந்த பிறகும்
என் கண்கள்
திறந்தே இருந்தன
எல்லாம் பழக்கம் தான்
இப்போதும் உனக்காகக்
காத்திருக்கிறேன்.
2.
இறைவா!
எங்கெங்கோ
தேடிப் பார்த்து விட்டேன்
நீ கிடைத்து விடுகிறாய்,
மனிதன் தான் கிடைப்பதில்லை.
3.
சோகத்தில் ஏன்
சிரிக்கிறாய் என்கிறாய்?
இருள் சூழும்போது தான்
விளக்ளேற்ற வேண்டும்.
4.
மரணத்தைப் பற்றிய உண்மையை
வாழ்கிறவர்களிடம் கேள்.
பயணிக்கு ஒரு சத்திரத்தின் முகவரி
மற்றொரு சத்திரத்தில் கிடைக்கிறது.
தொகுப்பு ; ந.க.துறைவன்.

*

அஞ்சலி.