Labels

Haiku (2) photo (2) Thought (4) Thoughts (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருள் உரை. (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) எண்ணங்கள் (1) எண்ணம் (3) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (1) கருத்து (12) கலை (1) கவிதை (325) கவிதை. (7) கவிதைகள். (4) கஜல் (17) கிராமியக் கதை (2) குறுங்கவிதை (1) குறுங்கவிதைகள் (1) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (5) செனரியு (24) சென்ரியு (38) சென்ரியு. (14) சென்ரியூ (99) துணுக்கு (95) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நல்வாக்கு. (1) நன்னெறி. (3) படம் (59) பரேகு ஹைக்கூ (4) பழமொழி (2) பாடல் (1) புதுக்கவிதை (231) பொது அறிவு (12) மரபு (18) முல்லா கதை (11) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (21) வணக்கம் (1) வாழ்த்து. (3) வாழ்த்துக்கள் (35) விமர்சனம் (2) ஜென் (1) ஜென் கதை (12) ஹைக்கூ (342) ஹைக்கூ. (27) ஹைபுன் (48)

Wednesday, 31 December 2014

மன அமைதி...!! [ ஹைக்கூ ]

*
N.G. THURAIVAN'S HAIKU.
*
உள்ளே வைத்துக் கொண்டு
எங்கெங்கோ தேடியலைகிறார்கள்
மன அமைதி.
*

ஏகாந்த வெளி...!! [ ஹைக்கூ ]

*
N.G.THURAIVAN'S HAIKU.
*
யாருமற்ற சூன்ய வெளி
அமைதி நிரம்பிய
துணிச்சலானப் பறவைகள்
*
ஏகாந்த வெளியில்
கவனிப்பாரற்ற
ஏராளமான புல்பூண்டுகள்
*
குக்கூ, பொய்க்கூ, போலிக்கூ
எல்லாமே இன்று
மெய்க்கூ ஹைக்கூ கவிதைகள்.

*

நல்வாழ்த்துக்கள்...!!

*
WISH YOU A HAPPY NEW YEAR.
அன்பு நண்பர்கள்
அனைவருக்கும்
ஆங்கிலப் புத்தாண்டு
இனிய நல்வாழ்த்துக்கள்
காலை வணக்கம்
வாழ்க வளமுடன்.
*

Tuesday, 30 December 2014

கண் “ மை ” ....!! [ கஜல் ]


*
உனது கண்கள்
கலங்கக் கூடாதென்று
எவ்வளவு
கவலைப்படுகிறேன்
தெரியுமா?
இன்று எதற்காக,?
உன் மையிட்ட
கண்களிலிருந்து
கரு “மை” யாகக்
கொட்டுகிறது
கண்ணீர்…?.

*

Monday, 29 December 2014

இருக்க விடு...!! [ கஜல் ]


*
நீ
சிரித்ததைப் பார்த்து
நானும் சிரிக்க
முயன்றபோது
உன்
குழி விழுந்தக்
கன்னப் பள்ளத்தில்
தவறி
விழுந்து விட்டேன்
அதிலேயே இருக்க விடு
அல்லது
வெளியே எடுத்து விடு….!!
*

Sunday, 28 December 2014

வளம்...!! [ சென்ரியு ]

*
N.G.THURAIVAN'S SENRYU. 
*
ஆதித் தமிழ்நாட்டு வளம்
அழித்தவர்கள் செழித்தார்கள்
கிராமங்கள் மலைகள் அழிப்பு.
*
ஆறுகள் நதிகள் அழித்தான்
விவசாயம் அழிந்தான்
இயற்கையின் எதிரி மனிதன்

*

அ [ செ ] ழிப்பு...!! [ கவிதை ]


*
கிரானைட் கற்கள் வெட்டி
எடுக்கப்பட்டதில்
மதுரையில்
பொக்கிஷ மலை அழிப்பு
கிராமங்கள் அழிப்பு
அழித்தவர்கள் செழித்தார்கள்
அடடா,
இன்னும் கொஞ்ச நாளில்
செந்தமிழ்நாடே
காணாமல் போய்விடுமோ?
*

சமரசம்...!! [ கஜல் ]


*
எனக்குக் காட்டிய
காதல் சமாதானக்
கொடியென்று
கவனிக்கிறேன்.
நீ
கூந்தலில் சூடியுள்ள
மல்லிகைப் பூ…!!.
*

Saturday, 27 December 2014

சாத்வீகம்...!! [ கவிதை ]

வீட்டிலே ஆத்திகன்
வெளியிலே நாத்திகன்
பேசுவதோ முற்போக்கு
சாத்வீகம்.
*
இருளின் அணைப்பில்
இரகசிய பேச்சு
கேட்டு சிரிக்கிறது பல்லி. 


Monday, 22 December 2014

உருமாற்றம்....!! [ சென்ரியு ]

*
N.G. THURAIVAN'S SENRYU.
*
உருமாற்றம் பெறுகின்றன
காய்கறிகள்
மாற்று மரபணுப் பயிர்கள்.

கீரை அலசிய தண்ணீரில்
துடித்து தவிக்கின்றன
சின்னச் சின்னப் புழுக்கள்.
*
இன்னும் பல் துலக்குகிறார்கள்
உமிக் கரியால் பகட்டில்லாமல்
கிராமத்து மனுசர்கள்

*

Sunday, 21 December 2014

தும்பிகள்...!! [ ஹைக்கூ ]

*
N.G. THRAIVAN'S HAIKU.
*
தும்பைப் பூவின் மீது
அமைந்து எதையோ?
ஆராய்கிறது தும்பிகள்.
*
வரலாற்று சின்னமாய்
பாஷோவின்
தவளை குதித்த குளம்.
*
துவங்கிய இடத்திலேயே
முடிந்தது
ஓட்டப் பந்தயம்.
*

ஏமாற்றம்...!! [ கஜல் ]

உன்னைக் கைப் பிடித்தால்
வாழ்க்கையில்
மாற்றம் ஏற்படுமென்று
எதிர்ப்பார்த்தேன்.
ஆனால், நீயோ
இப்படி
ஏமாற்றி விட்டாயே?
ஏமாற்றம் என்பது கூட
மாற்றத்திற்கான
மார்க்கமென்று
இப்பொழுது தான்
புரிந்துக் கொண்டேன்…!!

*

Friday, 19 December 2014

திறப்பு...!! கஜல் ]


*
இதயக் கதவை
உனக்காகத் திறந்து
வைத்திருக்கிறேன் என்று
சொன்னாய்?
திடீரென்று
உனக்கென்னவாயிற்று?
இன்னும்
திறக்கப்படாமல்
சாத்தியே
வைத்திருக்கிறாய்?
ந.க. ததுறைவன்.

Thursday, 18 December 2014

சாதுர்யம்...!! [ கவிதை ]குடும்பத்திற்கு விளக்கேற்ற
வந்தவளென்று
உன்னை எல்லோரும்
வரவேற்கிறார்கள்.
ஆனால், நீயோ
பேசும் சொற்களின்
ஸ்விச் ஆப் – பில்
எல்லோரும்
அடங்கிவிடுகிறார்கள்.
நல்ல வேளை
ஆன் – ஆப் எப்பொழுதுச
எங்கே எப்படி
உபயோகிப்பது என்று
சரியாகவே கற்றிருக்கிறாய்.
*

Wednesday, 17 December 2014

ஆயிரங் காலத்து உயிர்கள்...!! [ கவிதை ]


*
பள்ளிக்கூடத்தில் பயின்றப்
பட்டாம்பூச்சிகளை
வேட்டையாடிய வேடர்களே
நீங்கள் அழித்தது
ஆயிரங் காலத்துப் உயிர்கள்.
*
இளம் குழந்தைகளை
இரக்கமின்றி கொன்றொழித்த
கொடூர மதம் பிடித்த யானைகளே
நீங்கள் அழித்தது
செழித்து வளர வேண்டிய
ஆலவிருட்சங்கள்.
*
அன்பான குழந்தைகளின்
ஆசைக் கனவுகளைச் சிதைத்த
அகோரி அரக்கர்களே
நீங்கள் துண்டாய் வெட்டியெறிந்தது
பறவைகளில் பட்டுச் சிறகுகள்.
*   
மனசாட்சிகளை மதங்களிடம்
அடகு வைத்து விட்டு
மண்ணில் பிறந்த குழந்தைகளை
அழித்தக் கம்சர்களே
கல்விக் கண்திறக்கும் முன்னெ
காலனின் நரக எல்லை   
மரணத்திற்குள் தள்ளிவிட்டீர்களே…?
*
அன்பு வழிமுறையை கைவிட்டு
வன்முறையினை பின்பற்றும்
வழிப் போக்கர்களே
நீங்கள் அழிக்க நினைத்தது
பள்ளியில் பயிலும் இளம்
மாணவத் தும்பிகளை அல்ல
உலகில் உன்னதமாய் வாழும்
உயிர்களைப் பறிப்பதே
உங்கள் லட்சிய இலக்கு
*
பட்டு ரோஜாப் பூக்களைக் கிள்ளிப்
பறித்துவிடுவது எளிது
பதியம்போட்டு வளர்ப்பது தான்
பெரும் இஷ்டம் மிகக் கஷ்டம்.
உங்கள் பதினொராவது விரல் கொண்டு
உயிர்களைப் பறிக்காதீர்கள்
நாளை உங்களுக்காகக்
காத்திருக்கின்றன….??.
[ டிசம்பர் – 2014 -  பாகிஸ்தான் பெஷாவர் நகரில்
உயிர் இழந்தப் பள்ளிக் குழந்தைகள் நினைவாக… ]  

*

ஆயிரங் காலத்து உயிர்கள்...!!


*
பள்ளிக்கூடத்தில் பயின்றப்
பட்டாம்பூச்சிகளை
வேட்டையாடிய வேடர்களே
நீங்கள் அழித்தது
ஆயிரங் காலத்துப் உயிர்கள்.
*
இளம் குழந்தைகளை
இரக்கமின்றி கொன்றொழித்த
கொடூர மதம் பிடித்த யானைகளே
நீங்கள் அழித்தது
செழித்து வளர வேண்டிய
ஆலவிருட்சங்கள்.
*
அன்பான குழந்தைகளின்
ஆசைக் கனவுகளைச் சிதைத்த
அகோரி அரக்கர்களே
நீங்கள் துண்டாய் வெட்டியெறிந்தது
பறவைகளில் பட்டுச் சிறகுகள்.
*   
மனசாட்சிகளை மதங்களிடம்
அடகு வைத்து விட்டு
மண்ணில் பிறந்த குழந்தைகளை
அழித்தக் கம்சர்களே
கல்விக் கண்திறக்கும் முன்னெ
காலனின் நரக எல்லை   
மரணத்திற்குள் தள்ளிவிட்டீர்களே…?
*
அன்பு வழிமுறையை கைவிட்டு
வன்முறையினை பின்பற்றும்
வழிப் போக்கர்களே
நீங்கள் அழிக்க நினைத்தது
பள்ளியில் பயிலும் இளம்
மாணவத் தும்பிகளை அல்ல
உலகில் உன்னதமாய் வாழும்
உயிர்களைப் பறிப்பதே
உங்கள் லட்சிய இலக்கு
*
பட்டு ரோஜாப் பூக்களைக் கிள்ளிப்
பறித்துவிடுவது எளிது
பதியம்போட்டு வளர்ப்பது தான்
பெரும் இஷ்டம் மிகக் கஷ்டம்.
உங்கள் பதினொராவது விரல் கொண்டு
உயிர்களைப் பறிக்காதீர்கள்
நாளை உங்களுக்காகக்

காத்திருக்கின்றன….??.

Monday, 8 December 2014

பரிகாரம்...!! [ கவிதை ]

*
பதவி கோரிக்கை வைத்து
பிரார்த்திக்கிறார் பக்தர்.
*
புரிந்த வன்செயலுக்கு
பரிகாரம் தேடுகிறார் பக்தர்.
கொடூரமானவர்க்கும் தரிசனம்
கொடுக்கிறார் கோவிந்தன்.
*
ந.க. துறைவன்.
*


வந்தே மாதரம்...!! [ கவிதை ]

*
பாலியல் வன்கொடுமை
நகரமாகி விட்டது டெல்லி
இந்தியத் தலைநகரில்
மட்டுமல்ல
எல்லா மாநிலத்
தலைநகர்களிலும்,  அப்
பெண்ணின் ரத்தக்கரையில்
உறைந்தப் புடவையை
அரைக் கொடிக் கம்பத்தில்
பறக்கவிடுங்கள்.
வந்தே மாதரம் மா தரம்.

ந.க. துறைவன்  

Friday, 5 December 2014

அணுக்கதிர்கள்....!! [ சென்ரியு ]

*
N.G. THURAIVAN'S SENRYU.
*
அணுக்கதிர் அழுக்கு நீரில்
நீந்தி விளையாடுகின்றன
கடல் மீன்கள்.
*
கடல் மீன்கள் வயிற்றில்
கலந்திருக்கின்றது
அணுக்கதிர் வீச்சுகள்.
*
அணுநீரை மீன்கள் குடிக்கின்றன
மீன்களை மனிதன் உண்கின்றான்
மனிதனை உண்கிறது மண்.
*
அன்னிய நாடுகள் அணுக்கழிவுகள்
அள்ளி வந்துக் கொட்டும்
குப்பைத் தொட்டி இந்தியா.
*
அன்னியநாடுகள் மூடுகின்றன
இந்தியா திறக்கின்றது
அணுஉலைக் கூடங்கள்.

உயிர்ஜோதி...!! [ ஹைக்கூ ]

*
N.G. THURAIVAN'S HAIKU. 
*
அணுவுக்குள் அணுவாய்
எங்கே தொடங்கியது?
இன்றும் அணையாத ஜோதி்
*
இரத்தமாய் எண்ணெய்
திரி நரம்பில்
பிரகாசிக்கின்றது தீபம்.
*
உயர் மலையில் சுடர்கிறது
எல்லோரும் தரிசிக்கின்றனர்
எனக்குள் ஒரு ஜீவஜோதி.
*
ஜோதிக்குள் ஜோதியாய்
ஜோதியுள் ஐக்கியமாகிறது
மானுடத்தின் உயிர்ஜோதி.
*
உணர்த்துவது என்ன?
உயிர்த் தத்துவமாய்…
ஒளிர்கின்றது கார்த்திகை தீபம்.
*  

Thursday, 4 December 2014

இலைவரிகள்…!!


*
மரங்களுக்கு எப்பொழுதும்
எதிர்மறை எண்ணங்களில்லை
அப் பச்சை இலைகளின்
மென்மையானச் சிரிப்பின்
சலசலப்புப் பேச்சுக்கள்
இரகசியமற்றவைகள்.
இதமானக் காற்றை
இலவசமாக வழங்கும்
வள்ளல் மனம்
படைத்தவைகள் மரங்கள்.
நிழலுக்கு
ஒதுங்குகின்றவர்களைக் கூட
யார் என்ன நிறமென்று
பார்ப்பதில்லை மரங்கள்.
மரத்திடமிருந்து
மனிதர்கள் கற்பதற்கு
எத்தனையோ இலைவரிகள்
உதிர்ந்துக் கிடக்கின்றன.
ஒவ்வொருவரின் இதயத்திலும்
மரம் என்பது மனிதமே என்ற
மனம் விரிய வேண்டும்.
அப்பொழுது தான்
அனைவருக்கும் சித்திக்கும்
ஞான விருட்சத்தின்
பிரபஞ்ச மௌனம்…!!
*.


Wednesday, 3 December 2014

பனிக் குளிர்...!! [ கவிதை ]

*
மகிழ்ச்சிகள் வருகின்றன
அனுபவிக்கவிடுவதில்லை ஜனங்கள்
*
எவருக்கேனும் சித்திக்குமா?
சிக்கல் இல்லாத வாழ்க்கை.
*
அரைத் தூக்கத்தில் படிக்கிறேன்
கனவு – இரவு புத்தகம்.
*
நினைவுக்கு வரவில்லை இன்னும்
படித்துவிட்ட பக்கத்தின் எண்.
*
எழுந்திருக்க நினைக்க முயன்றால்
எழுந்திருக்க விடுவதில்லை பனிக்குளிர்.
*

Tuesday, 2 December 2014

பாதுகாப்பு...!! [ சென்ரியு ]

*
N.G. THURAIVAN'S SENRYU. 
*
வானில் பிரகாசிக்கின்றன
எங்கே என்று கண்டுபடிப்பது?
கார்த்திகை நட்சத்திரப் பெண்கள்
*
.மழை வெள்ளப் பெருக்கு
மண்ணே தெரியவில்லை
வெடித்து கிடந்த வயற்காடு.
*
சுதந்திரமாய் பாயும் தண்ணீர்
பாதுகாப்பு வளையத்திற்குள்
முல்லை பெரியார் அணை.

*

அவலம்...!! [ கவிதை ]

*
தண்ணீரும் மதுவும்
தென்மாநிலங்களின்
அரசியல் நீரோட்டம்.
குடிநீரும் கண்ணீரும்
தமிழ்நாட்டு மக்களின்
அவலநிலைப் புலம்பாட்டம்.
*

Monday, 1 December 2014

இசைபட...!! [ கவிதை ]

1. 
இசைபட வாழ்ந்தவன்
வசைபட வீழ்ந்தான்.
*
2.
நெஞ்சில் குத்தி விட்டாள்
கையில் 
பச்சைக் குத்திக் கொண்டவள்.
*

Sunday, 30 November 2014

ரசிகன்...!! [ கவிதை ]


*
சபா மண்டபத்தில்
நாட்டிய திருவிழாவில்
காலில் சலங்கைக் கட்டி
நாட்டியம் ஆடினாய்.
உன் அலங்கார அழகும்
அபிநய நளினமும்
ஆடிய ஓயிலும் இன்னும்
என் இதயக் கணினியில்
பதிவாகியிருக்குதடி…!.
பாடலுக்கு ஒலித்த – உன்
பாதச் சலங்கையொலி
சல்… சல்… என்று ஒலித்துக்
கொண்டேயிருக்குதடி…!.
மறக்க முடியாதது
இசைக்கேற்ற உதடசைவுகள்
அங்க அசைவுகள்
தாளத் துள்ளல்கள்
பார்வையின் துடிப்புகள்
உன் ரசிகனாகயிருந்து
அனுபவித்தேனடி…!.
வாழ்நாளெல்லாம்
மறக்கவே முடியாததாய்
வரலாற்றின் ஏடுகளில்
பதிவாகி விட்டதடி
இசையாய் இணைந்த
நம் காதல் நினைவலைகள்.

Thursday, 27 November 2014

சுகம்...!! [ கவிதை ]


*
அகவெளி சூன்யம்
சுகமளிக்கும் சூன்யம்.
*
சுகமிருந்தால் திருப்தி
சகமில்லையேல் விரக்தி.
*
பேசிக் கொள்வது இன்பம்
பேசாமலிருப்பது வன்மம்.
*
மண உறவு நெருக்கமானது
மன இறுக்கம் மோசமானது.

Wednesday, 26 November 2014

கட்டிப்பிடி வைத்தியம்...!!


*
அமெரிக்காவில் ஒரிகன் மாகாணத்தில் வசிக்கிறார் சமந்தா, ‘ கட்டிப்பிடி வைத்தியம் ‘ என்ற புதிய பிஸினஸை ஆரம்பித்திருக்கிறார். ஆரம்பித்த ஒரு வாரத்துக்குள் சுமார் 10 ஆயிரம் பேர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துக் கொண்டார்கள். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் இங்கே அனமதி உண்டு. ஒரு நிமிடத்துக்கு 1 டாலர் பணம் வசூலிக்கமிறார் சமந்தா. 15 நிமிடங்களில் இருந்து 5 மணி நேரம் வரை அவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். சுத்தமாக வரவேண்டும்., நன்றாக உடை அணிந்திருக்க வேண்டும், தீய எண்ணங்களுடன் வரக்கூடாது. என்று வாடிக்கையாளர்களிடம் எழுதி வாங்கி வைத்துக் கொள்கிறார். வாடிக்கையாளர்களைப் பொறுத்து சிலரைக் கட்டிப் பிடித்து வைத்தியம் செய்கிறார். சிலரிடம் அருகில் அமர்ந்து படிக்கிறார். சிலரிடம் ஆறுதலாகப் பேசுகிறார், தனிமையில் இருப்பவர்கள், துணையை இழந்தவர்கள், மனம் விட்டுப் பேச நினைப்பவர்கள் எல்லாம் இவரின் முக்கியமான வாடிக்கையாளர்கள். எல்லோரும் நல்லவர்களாக இருந்துவிடுவதில்லை என்ற காரணத்தால் பாதுகாப்புக்காக, சிகிச்சையளிக்கும் அறைகளில் மேராவைப் பொருத்தியிருக்கிறார். ஒருநாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்யும் சமந்தாவிடம், ஒரு வாரத்துக்கு முன்பே அனுமதி வாங்கிவிட வேண்டும்.

*ஆதாரம் ;- தி இந்து – நாளிதழ் – ஞாயிறு நவம்பர் 23 – 2014.           

Tuesday, 25 November 2014

நித்திய வாழ்க்கை...!! [புதுக் கவிதை ]


*
நல்ல காலம் பிறந்து விட்டதென்று
அவசர அவசரமாய் கல்யாணப்
பொறுப்புகளைப் படபடவென்று
பார்க்கத் தொடங்கினர்.
ஜாதகம் பார்ப்பதில் தொடங்கியது
ஒன்பது பொருத்தம் பார்த்தனர்.
இலட்சங்களை வாரி இரைத்து
இறுமாப்போடு ஊர்ப் போற்றும்
சீர்வரிசையோடு
திருமணம் செய்து முடித்தனர்.
எத்தனை நொடிகள்? நிமிடங்கள்?
எத்தனை நாள்கள்? மாதங்கள்?
எத்தனை வருடங்கள்?
தாம்பத்ய வாழ்க்கையில்
திருப்தியோடு வாழ்ந்தாய்.
சின்னச் சின்னச் சிணுங்களின்
சிக்கல்களில் விழுந்தாய்.
சிந்தைத் தடுமாறினாய்
மனஇறுக்கமானாய்
மனமுறிவு கேட்கும்
முயற்சிக்கு ஆளானாய்.
இப்பொழுது, இருவருமே
எந்த மனப் பொருத்தமும்
பொருந்தி வரவில்லையென்று
வருந்தி விலகியிருக்க
வழக்குத் தொடுத்து
வாங்கிக் கொண்டீர்கள்
விவாகரத்து.
விவாகரத்தில் இல்லை
மணவாழ்க்கை
விவேகத்தில் மட்டுமே
விதிக்கப்பட்டிருக்கிறது
நித்திய வாழ்க்கை…!!
*

Monday, 24 November 2014

பழமொழி...!! [ கவிதை ]

*
நாட்டுப்புறத்தானுக்கு நாகரீகம் இருக்கு
நகர்ப்புறத்தானுக்கு நாகரீகம் இல்லை.
பாட்டி சொன்ன பழமொழி.
*இன்புறு....!! [கவிதை ]

*
காதலர்களைக் காதலர்களே
காமுறுவர்
மற்றவரெல்லாம் சோகமுறுவர்
பொறாமைப் பட்டு.

*

யார்...? [ கவிதை ]

யாருக்கும்
கஷ்டங்கள் கொடுப்பதில்லை
எங்கோ இருக்கும்
கடவுள்.
கஷ்டங்களைக்
கொடுப்பவனாக
இங்கே நம்மிடையே
உறவாடி இருக்கின்றான்
மனிதன்
*

கடைசி...!! [ சென்ரியு ]

*
கடைசி தோல்வியில் 
தானிருந்தது
என் முதல் காதல்.
*

Sunday, 23 November 2014

பசலை நோய்...!! [ கவிதை ]


*
உன்னை மனநோயாளி என்று
முத்திரைக் குத்தி
மனசாட்சியில்லாமல்
உறவுகள் இம்சை செய்வதைப்
பார்க்க மனம்
வேதனைப்படுகின்றது.
உன் காதலைப் பிரிக்க
எதையோ சொல்லி
நம்ப வைக்க
முயற்சிப்பவர்களின்
கட்டுக்கதை தானே இது.
உன்னை எப்படி
நம்ப வைப்பதென்று
காதலன் துடிக்கிறான்.
உன்னைச் சேர்த்து விடாமல்
தடுக்க ஊர் துடிக்கிறது.
யார் அறிகிறார்களோ? இல்லையோ?
உன் காதலன் மட்டுமே அறிவான்.
உன் பசலை நோய்க்கு மருந்து.

*