Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Wednesday 31 January 2018

Sunday 28 January 2018

தும்பிகள்

தும்பிகள்

குறைந்த வெப்ப நிலை
பூவின் அழகு
தும்பிகள் பறக்கிறது நெருங்கி.

Low temperature with
the beauty of flowers
Dragonflies flies closer.

Thuraivan NG


பூவின் அழகு


Friday 26 January 2018

அதிஷ்டம்


பத்து ரூபாய் நாணயம் கையில்
என் அதிஷ்டம்
முழுநிலா.

ந க துறைவன்.


கையில் நாணயம்


Wednesday 24 January 2018

இடைவெளி

இடைவெளி

நிறைவான குடும்ப வாழ்க்கை
நிகழ்ந்த மரணம்
மீண்டும் தலைமுறை இடைவெளி.

ந க துறைவன்.


தலைமுறை இடைவெளி


ஒற்றை பூ...!!

ஒற்றை பூ

உன் தலையை அலங்கரித்து
அழகால் கவரும் பலரை
அந்த ஒற்றை பூ.

Decorate your head
Many attracted by the
Beautiful of the single flower.

Thuraivan NG.


தலையில் பூ.


Monday 22 January 2018

கயாவின் ஆலமரம்.

கயாவின் ஆலமரம்.

கயாவின் ஆலமரம் அப்போதும் அசையாமல் நின்று கொண்டிருந்தது. சித்தார்த்தன் ஓரிரு கணம் ஆலமரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
" நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் எனக்குப் புகலிடம் தந்த அன்னையே!"
அவன் அழுதான், " இன்று நீ எனக்கு வேண்டாம். நான் தேர்ந்தெடுத்த பாதை சரியில்லை. மனிதன் இன்னும் துயரில் உழன்று கொண்டிருக்கிறான்."
பின்னர் சித்தார்த்தன் தோளிலிருந்த கோடாரியை எடுத்து கயாவின் ஆலமரத்தின் அடிப்பகுதியை வெட்டத் தொடங்கினான்.

ஆதாரம்: யாழ்ப்பாணம் புகையிலை - காக்கநாடன் நாவல். தமிழில்: நிர்மால்யா. பக்கம்: 112.
தகவல்: ந க துறைவன்.


புத்தர் நினைவாக...


Thursday 18 January 2018

தடயங்கள்

நூற்றாண்டுகள் கழிந்தது
அழியாமல் இருக்கிறது
புத்தர் கால் தடயங்கள்.

ந க துறைவன்.


புத்தர் கால் தடயங்கள்


Wednesday 17 January 2018

ஊர் பெயர்.

ரயில் தடங்கள் இரைச்சல்
எதிர் திசையில் மரங்கள்
மறைந்தது ஊர் பெயர்.

ந க துறைவன்.


எதிர் திசையில்


ஊர் பெயர்.

ரயில் தடங்கள் இரைச்சல்
எதிர் திசையில் மரங்கள்
மறைந்தது ஊர் பெயர்.

ந க துறைவன்.


எதிர் திசையில்


Monday 15 January 2018

பனி காற்று

மனம் அசைந்தது


சுகம்.

சுகமில்லை என்று
சொன்னாள்
எந்த சுகம்?
உடல் சுகமா?
உணர்வு சுகமா?
சொல் சுகமா?
எந்த சுகம்?

ந க துறைவன்.


சுகம் என்பது....


வாழ்த்துக்கள்

உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.


Saturday 13 January 2018

உழவர்கள்

காணி நிலமெல்லாம்
களவாடப்பட்டு விட்டது
இப்பொழுது
விவசாயிகள் கட்டிடக்
கூலிகளாக
உருமாறி விட்டார்கள்
கலப்பை ஏந்திய
கைகளில்
செங்கல் சுமைகள்.

ந க துறைவன்.


உழவர்கள்


வாழ்த்துக்கள்

பொங்கல் விழா


Thursday 11 January 2018

ஆ ( வ) ன் மீகம்

ஆண்டாள் பாவம்
ஒரு மூச்சு
அழுது தீர்த்து விட்டாள்
இந்த 
மார்கழி மாதம்
பேச்செல்லாம் கொச்சை
ஊரெல்லாம் சர்ச்சை
முடிவில்லா போக்கில்
பண்பாட்டு கட்டுடைப்பு
ஆன்மீகம் என்பது
வன்மீகம் என
உருமாறி வருகிறது
கவலை 
கடவுளுக்கில்லலை
மனிதர்களுக்கு
மட்டுமேயானது
கடந்து போவதற்கு
மனம்
சிறகு விரிக்க வேண்டும்.
சிறகு ஒடிந்தால் பறவைகள்
என்ன செய்யும்?

ந க துறைவன்.


திசை மாறும் பறவைகள்


சுயம்

சுயமாய் இருக்கிறது சுயம்
இருப்பதே சுயமாய்
சுயமே சும்மாயிருக்கிறது
சுயமென சுயம்.

ந க துறைவன்.


சுயமென...


Wednesday 10 January 2018

பனி உதிர்காலம்.

ஆட்டம் போடும் குருவிகள்
சில்லென்ற பனிஉதிர்க்கும் இலைகள் அசைந்து அசைந்து
மரத்தின் கீழ் பயணிகள் சிலர்...

ந க துறைவன்.


பனி உதிர்காலம்.


Tuesday 9 January 2018

கசடுகள்.

கண்கள் படித்தது விழிப்புடன்
சுவரில் கோளறு பதிகம்
கழியாத கசடுகள் மனதில்...

ந க துறைவன்.


கழியாத கசடுகள்.


புத்தகக் கண்காட்சி.

சென்னையில் புத்தகக் கண்காட்சி.


Sunday 7 January 2018

சாம்பிராணி...

உள்ளறை எங்கும்
சூழ்ந்திருக்கிறது
அவள் போட்டச்
சாம்பிராணி புகை
வாசம்
நாசியின் நுனியில்
குறுகுறுக்கிறது
மனசு கொஞ்சம்
துறுதுறுக்கிறது
இருள் கவிழ கவிழ...

ந க துறைவன்.


புகை வாசம்


Saturday 6 January 2018

நீர் ஒழுக...

நாய்கள் உற்றுப் பார்க்கிறது ஏக்கமாய்
நீர்ஒழுக நாக்கை நீட்டி
தொங்கும் கறிச் சதைகளை...

ந க துறைவன்.


ஊற்று நோக்கல்


விழிப்பு.

உடல் வெட்கத்தில் சிலிர்க்கிறது
காம விழிப்பின் மௌனம்
தலைநிறைய மல்லிப்பூச்சரம்.

ந க துறைவன்.


விழிப்புணர்வு


அழகு...!!

பூசணி செடி
எப்பொழுதும் விரும்புகிறது
ஏழையின் குடிசை அழகு.

ந க துறைவன்.


குடிசையின் அழகு


Tuesday 2 January 2018

வண்ணத்துப்பூச்சிகள் - சில தகவல்கள்.

வண்ணத்துப்பூச்சி- சில தகவல்கள்.

வண்ணத்துப்பூச்சிகளின் நிறம், உடல் அமைப்பு, அளவு, ஆகியவற்றின் அடிப்படையில், வால் வண்ணத்திகள்( Swallowtails), வெண்மஞ்சள் வண்ணத்திகள்( Whites and Yellows), தூரிகை கால் வண்ணத்திகள்( Brush footed Butterflies), நீலன் வண்ணத்திகள்( Blued ), துள்ளி வண்ணத்திகள்( Skippers), என பட்டாம்பூச்சிள் 5 குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அசாம், மணிப்பூர், மேற்கு வங்கம் ஆகிய வடகிழக்கு மாநிலப் பகுதிகளில் அதிக பட்டாம்பூச்சி இனங்கள் காணப்படுகின்றன.

தமிழகத்தில் கடந்த 2000 -ம் ஆண்டுகளில் டாக்டர் கிருஷ்ண மேக்ஹ் 164 வகைகளை ஆவணப்படுத்தி னார். அதன் பின்பு கடந்த சில ஆண்டுகளில் ' ஆக்ட் ஃபார் பட்டர் பிளைஸ் ' குழுவால் 132 வகைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
வனத்துறை தனியாக கணக்கெடுத்தால் இன்னும் 200- க்கும் அதிகமான வகை பட்டாம்பூச்சிகளை ஆவணம் செய்ய முடியும் என்கின்றனர் பட்டாம்பூச்சி பாதுகாவலர்கள்.

கடந்த ஆண்டில் உலகம் முழுவதும்14.6 கோடி பட்டாம்பூச்சிகள் வலசை சென்றதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆதாரம்: தி இந்து - நாளிதழ் - 03-01-2018.
தகவல்: ந க துறைவன்.


வண்ணத்துப்பூச்சிகள் பற்றிய தகவல்கள்.


மார்கழி பஜனை

மார்கழி பஜனை போகிறது
ஆண்டாள், தோழிகள் இல்லை
ஆண்கள் குழுவாய் குளிரில்...

ந க துறைவன்.


திருப்பாவை பாடி...