Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Wednesday 30 April 2014

ஈச்சங்குலை...!!. { ஹைக்கூ/ HAIKU } .



புத்தரிடமிருந்து புத்தம்
என்னுள் ஒளிர்கிறது புத்தம்
விழிப்புணர்வு புத்தம்.
*
அள்ளி எடுத்தேன்
உள்ளங்கை நிறைய
முக்கடல் நீர்.
*
வார்த்தை இலைகள்
மௌனமாய் உதிர்த்தது
பேசாத மரங்கள். 
*
இரவில் பேசுகிறது என்னிடம்
கோடி மைல்களுக்கப்பால் இருந்து
ஒளிரும் நட்சத்திரங்கள்.
*
உலுக்கி எழுப்பியது கனவு
விழித்துப் பார்க்கிறேன்
கேலியாய் சிரிக்கிறது இருட்டு.

***

“ மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!.

*
உலக“மே” வியக்கு“மே”
வியர்வைத் துளிகளில்
உதித்தது உழைப்பாளர் தின“மே”.
*
வாழ்த்துவோ “ மே ”.

***

Monday 28 April 2014

கடுகு சிரிக்கிறது..!!

*
வேர்க்கடலை…!! { கவிதைகள் }.
*
எவருக்கேனும் உதவுகிறது
மரத்தடியின் நிழல்.
*
.சந்தோஷமாய்ச் சிரித்தாள்
கணவன் சொன்ன ரகசியம் கேட்.டு….!
*
பூரிக்கட்டையில் சப்பாத்தி
தேய்த்துப் பழகுகிறது குழந்தை.
*
சமையல் அறையில்
கடுகு சிரிக்கிறது
.*
வைத்த இடத்திலேயே இருக்கிறது
தேடியப் பொருள்.
****


பயந்திருக்குமோ மரம்...!! { புதுக்கவிதை }


*
மரத்தை
வெட்டிக் கொண்டிருந்தார்கள்
அருகிலிருந்த மரம்
எந்த அசைவுமின்றி
மௌனமாகக் கொஞ்ச நேரம்
பார்த்துக் கொண்டிருந்தது.
என்றேனு மொரு நாள்
நமக்கும்
இந்த கதி தானோ? என்று
சிந்தித்திருக்குமோ?
என்னவோ அப்பொழுது
மரத்தை
வெட்டியவர்கள்
அதனருகில் வந்து
நின்றனர்.
மரம் பயந்திருக்கும் ?
*


Saturday 26 April 2014

எல்லாம் அணுவுக்குள்.. !

அர்த்தநாரி...!! { பரேகு / BAREKU. }
*
சக்தி சிவனுக்குள்
சிவன் சக்திக்குள்
எல்லாமே அணுவுக்குள்…!.
*
மாம்பழம் கையில் வைத்து
பால் குடிக்கிறது
அழுகிற குழந்தை.
*
 “ நெருங்கி வராதே ” என்று
வண்ணத்துப்பூச்சிக்கு
கையசைக்கிறது மலர்கள்.
*
மனம் குளிர்ந்ததோ?
மௌனமாய் சிரிக்கிறான்
அபிஷேகப் பிரியன் சிவன்.
*
சிறகை உதிர்த்துப் போனது
அடையாளத்திற்காக
இணையைத் தேடிய பறவை.
***




Friday 25 April 2014

கேழ்வரகு கூழ்...!! { சென்ரியு ] / SENRYU.

கோடை கவிதைகள் 
*
தள்ளு வண்டி அருகில் கூட்டம்
ருசித்துக் குடிக்கிறார்கள்
கேழ்வரகுக் கூழ்.
*
பேரூந்து நிழற் குடையின் கீழ்
படுத்து ஓய்வெடுக்கிறாள்
அனாதைக் கிழவி.
*
அம்மன் தீமிதி விழா
தீச்சூவாலைக் கனிந்திருந்தது
திடீரென வந்தது கோடைமழை.
*
வாலிபர்கள் கிரிக்கெட் விளையாடும்
மைதானமாகி விட்டது
நீரில்லாத ஏரி.
*
மாதம் மும் மாரி
குடிநீர் விநியோகித்து
சாதனைப் புரிகிறது மாநகராட்சி.
*****



Thursday 24 April 2014

குளவிகள்...!! { சென்ரியு / SENRYU }


*
வண்டுகளின் இம்சை
பொறுக்காமல் முணுமுணுக்கிறது
அன்றலர்ந்த மலர்கள்.
*
வீரத்திற்கு பெருமை சேர்த்தது
வரலாற்று சின்னமாய்
வன்னிப் பூக்கள்.
*
தோப்பில் திருட வந்தவனை
துரத்தி துரத்திக்
கொட்டியது குளவிகள்.
*
ஐந்து ரூபாய் விலை
கோலி குண்டுப் போல
எலுமிச்சம் பழம்.



கவிதை எழுதுவேன்...!! { புதுக்கவிதை }


*
கவிதை எழுதுவேன் – புதுக்
கவிதை எழுதுவேன்.
எதுகை மோனை வைச்சி
கவிதை எழுதுவேன்.

கதிரவனின் கருத்தைக் கேட்டுச்
சமூகக் கவிதை எழுதுவேன்.
காற்றின் இசை உணர்ந்து
ஆன்மீகக் கவிதை எழுதுவேன்.
*
பண்பாட்டின் சூழல் கேட்டை
புதுக் கவிதையில் எழுதுவேன்.
பனிக் குளிரின் அமைதியிலே
ஹைக்கூ கவிதை எழுதுவேன்.  
*
தும்பிகள் விளையாட்டு ரசித்து
சிறுவர் பாடல் எழுதுவேன்
அகம் புறம் வெளிச்சமிடும் – தமிழ்
மரபுக் கவிதை எழுதுவேன்.
*
நிலவு வெட்கப்படாலிருக்கும்
காதல் கவிதை எழுதுவேன்.
வெள்ளை இருட்டில் நடக்கும்
உண்மைக் கவிதை எழுதுவேன்.
*
வண்டுகளின் வன்கொடுமையினை
வன்மையாக எழுதுவேன்.
மலர்களின் அழகைப் போற்றி
பெண்ணியக் கவிதை எழுதுவேன்.
*
மரத்தின் அடிவேராகியே – இம்
மண்ணின் கவிதை எழுதுவேன்.
மனிதனின் உள்ளத் தவிப்பை – என்
மரணம் வரை எழுதுவேன்.!!.
*


Wednesday 23 April 2014

இங்கிதமான...!! { ஹைபுன் }

NA. GA. THURAIVAN'S HAIBUN.
*
உறவுக்காரங்க வீட்டுக்குப் போனா, பூ, பழம், மிக்சர்
வாங்கிட்டுப் போகணும். நோயாளியைப் பார்க்க
மருத்துவமனைக்குப் போனா, பழம், பூஸ்ட், ஆர்லிக்ஸ்
வாங்கிட்டுப் போகணும். துக்கம் விசாரிக்க சாவு வீட்டுக்குப்
போனா, மாலை வாங்கிட்டுப் போகணும். எங்கே போனாலும்
சம்பிரதாயமாக ஏதேனும் ஒன்றை வாங்கிப் போனால் அந்த
மரியாதையே தனி.
*
இங்கிதமான வரவேற்பு
இங்கிதமான விசாரிப்பு
இங்கிதமான உபசரிப்பு.

*** 

Tuesday 22 April 2014

பந்து { முலாம் } பழம்...!! { சென்ரியு }

SUMMER SENRYU.
*
மனமோ வக்ரமாய்
வெளியில் தெரிவதில்லை
மாம்பழத்தில் வண்டு.
*
மண் குளிர்ந்தது
வெப்ப சலன மழை
மரங்கள் சிரித்தன.
*
விளையாட முடியாது
குண்டு குண்டான
பந்து {முலாம்} பழம்.
*
தள்ளு வண்டி நிறைய
மண்ணுளிப் பாம்புகளாய்
குளிர்ந்தக் கீரைக்காய்கள்.
*
சுகந்தமணம் குளிர்ச்சியானது
நரம்புக்கு வலிமை தருவது
நாட்டு மருந்து நன்னாரி சர்பத்.
*** 

கூழாங்கற்கள் { புதுக்கவிதைகள் }


*
1.
அருகில் எவரும் இல்லை
கண்கள் மூடியிருந்தார்
கண்கள்
திறந்துப் பார்த்தார்
அருகில் எவரும் இல்லை.!!.
*
2
கண்டிப்பாக இன்று
வருவதாகத்தான்
சொன்னார்.
கண்டிப்பாக
வருவாறென்று தான்
காத்திருக்கிறேன்.
கண்டிப்பாக
வருகிறேனென்று
சொன்னவர்
வரவேயில்லை
கண்டிப்பாக…!!.
3.
நண்பரைத் தேடி
அவர் வீட்டற்குச் சென்றேன்.
கேட்டிலிருந்த நாய்
அன்னியரென்று
என்னைப் பார்த்து
பலமாய் குரைத்தது.
நாய் குரைத்தலின்
குரல் கேட்டு
வெளியில் வந்த
நண்பர் சொன்னார்.
“ டேய், போடா
நம்ம சாருடா ” என்றார்.
சட்டென்று குரைப்பதை
நிறுத்தியது நாய்..!!
***
.


Monday 21 April 2014

முதியோர் வாழ்க...!! { கட்டுரை }


*
Tamil Essay
*
முதுமைக் காலத்தை, முதியோர் பூரணமாக உணர்ந்து
அனுபவித்து தன் இறுதி நாட்களைக் கழித்து வர வேண்டி
இருக்கிறது. அவ்வப்போது ஏற்படும் இன்பத் துன்பங்களைக்
கடந்து, உறவுகள் வெறுக்கும் சூழலைக் கடந்து முன்னேற
வேண்டியிருக்கிறது. முதியோர்களின் உள்ளக் கிடங்கில்
எத்தனை எத்தனையோ மனச் சுமைப் புதையல்கள் மண்டிக்
கிடக்கின்றன. அவைகளையெல்லாம் மறந்து கொஞ்சமேனும்
முதியோர் குறித்த செய்திகள். விவரங்கள், நல்ல இலக்கியங்கள்
படித்தறிந்து மன ஆறுதல் பெற்று வாழ்ந்திடல் அவசியம்.
முதுமை, வாழ்வில் நாம் வாழ்ந்துக் கழித்த நாட்களின் வளமை
யான இறுதி பருவக் காலமாகும்.
*
இன்றைய, தமிழ் ஹைக்கூக் கவிதைகளில், முதியோர்களைப்
பற்றி கவிஞர்கள் எவ்வாறெல்லாம் சிந்திக்கிறார்கள், சித்தரிக்
கிறார்கள் என்பதனைச் சற்றுப் பார்ப்போமா?    
*
இளமையில், வாலிபத்தில் உடலின் ரோமங்கள் மிகக் கருப்பாகிப்
பளபளப்பாக மின்னும் அதே நேரத்தில் வயது ஏற ஏற கருப்பு
நிறம் மெல்ல மெல்ல மாறி வெண்மைப் படரத் துவங்கும்.
அதையே வெண்நரை என்கிறோம். ஆக, நிறங்களே வயதினை
உணர்த்துகின்றன என்பதை கவிஞர். ந.க. துறைவன் தன்
ஹைக்கூக் கவிதையில் இப்படிச் சொல்கிறார்
    இளமையில் கருமை
    முதுமையில் வெண்நரை
    வயதினை உணர்த்தும் வண்ணங்கள். {உப்பு பொம்மைகள்-நூல்}
                                           பக்கம் – 12.
ஒரு மரத்தின் வயதினை எத்தனை ஆண்டுகள் என்று கணக்கிடுவது
மிகச் சிரமமானதேயாகும். அதைத் தோராயமாகத் தான் மதிப்பிடுவர்
தாவரவியல் வல்லுநர்கள். அம்மரத்தின் இலைகள் பருவக் காலத்தில
பழுத்து பொன்னிறமாக பூமியில் உதிர்க்கும். அவைகள் பார்ப்பதற்கு
ரொம்ப அழகாகவிருக்கும். அதனையே சருகுகள் என்கிறோம். அச்
சருகுகளை முதுமைக் கவிதைகள் என்று வர்ணிக்கிறார் கவிஞர்.
மித்ரா. 
காலம் எழுதும்
முதுமைக் கவிதைகள்
சருகுகள்.            { மித்ரா – புல் நுனி வைரங்கள்-
                      நூல் – பக்கம் – 159 }



சருகுகள் போன்று இம்மனித உடல் இறுதியில் பூமியில் உதிர்ந்து
விடுகின்றன. என்பதை உணர்த்துகின்ற அழகியல் ஹைக்கூவாகத்
திகழ்கிறது.
*
எந்தவொரு சங்கதியையும் நல்லதாகப் பார்ப்பது என்பது நேர்மையான
சிந்தனையாகும். சில நேரங்களில் முரணாகத் தீய எண்ணங்களை
மனம் தோற்றுவிக்கும். புத்தாண்டு தினத்தில் தன் வயதான
காலத்தில் அவருக்கு இப்படித் தோன்றுகிறது.
       அது நல்லது இதுவும் நல்லது     
       புத்தாண்டு தினம்
       என் வயதான காலத்தில்
-    ரையாட்மோ.
தமிழில்: பரிமளம்சுந்தர்- ” கசிகிறது மழைநீர் ”
என்ற நூல் – பக்கம் – 10.

ரையாட்டோவின் இந்த ஜப்பானிய ஹைக்கூ பலப்பலப்
பரிமாணங்களில் சிந்திக்க வைக்கிறது என்பதை அறியலாம்..
*
பொம்மைகளில் முக அழகு செய்கையாக இருந்தாலும்,
பார்ப்பதற்கு ரசிக்கவே தோன்றுமல்லவா! குழந்தைகள் விரும்பி
விளையாடும் பொம்மைகளுக்கு முதுமை என்பதில்லை. அவைகள்
வயதானவைகள் என்று யாரும் உத்தேசிப்பதில்லை. பிள்ளைப்
பருவம் முதல் பல்வேறு தோற்றங்களில் வடிவமைக்கப்படும்.
அவ்வவ் வடிவங்களிலே பார்த்துக் களித்து இன்புறலாம்.. இருப்பினும்
அவைகளை விட நான். முதுமையடைந்து விட்டேன் என்று
பறைசாற்றுகின்றார் செய்பூ என்ற ஜப்பானியக் கவிஞர்.
     பொம்மைகளின் முகங்கள்
     நான் ஒரு போதும் உத்தேசிக்கவில்லை
     என்றாலும் முதுமையடைந்து விட்டேன்.
-    - செய்பூ.
-    - தமிழில் “ பரிமளம்சுந்தர். மேலது-பக்கம்-22..
நான் முதுமையடைந்து விட்டேன் என்ற ஜப்பானிய கவிஞரின்
பெருமிதம் போன்று, ஒவ்வொரு மனிதரிடம் இருக்க வேண்டியது
அவசியமாகும். இயற்கை மனிதனுக்குக் கொடுத்தச் சிறந்த பரிசே
முதுமையாகும். முதியோர்களாகிய நம்மில் ஒவ்வொருவரும்
தனது உடலைப் பேணிப் பாதுகாத்து பிரச்சனைகளின்றி அமைதியாய்,
ஆரோ்க்கியமாய் வாழ்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள
வேண்டும். நூறாண்டு வாழ்வதற்கான மருத்துவர்கள் கூறும்
ஆலோசனைகளைக் கவனத்தில் வைத்துக் கடைப்பிடிக்க வேண்டும்.
முதியோர்களை அவமதிக்கும் புல்லர்களின் செயல்களை வென்று,
இச்கமூகத்தில் இந்திய உயர்குடிமகன் என்ற உன்னதநிலை எட்டி,
ஏற்றமுடன் வாழ்ந்துக் காட்டுவோம்…!!.
*
அன்புடன்
ந.க. துறைவன்
வேலூர் – 632 009.
செல் :- 9442234822 / 8903905822

  
     
-                                         







.


எவருமில்லை அங்கே...!!

*
Tamil Senryu.
*
மழை பெய்து ஒய்ந்தது
மண் ஈரமாக வில்லை
வேட்பாளர்கள் வெற்றிப் பேச்சு.
*
ஊரே அமைதியாகி விட்டது
ஊர் திரும்பி விட்டார்கள்
வேட்பாளர்கள்.
*
எறும்பு போல வரிசையில்
வாக்காளர்கள்
விரலில் “ மை”.
*
வாக்களித்து விட்டு
வெளியில் வந்தேன்
எவருமில்லை அங்கே.
*
விடை பெறுகிறேன்
நண்பர்களே சந்திப்போம்
அடுத்த தேர்தல்.

*

தண்ணீர் யுத்தம்...!!

*
குடிநீரின்றித் தவித்தனர்
சுவாமி தரிசனம் முடித்தவர்கள்
பௌர்ணமி இரவு.
*
சேவை நிறுவனம் அமைத்தத்
தண்ணீர் பந்தலில் நீரின்றி
காலியாக இருக்கிறது பானைகள்.
*
எப்பொழுது வரும் என்று
விழித்திருந்தார்கள் ?
மாநகராட்சி குடிநீர் லாரி.
*
குடிநீர் வருவதில்லை
வருடந் தோறும் தண்டம்
குழாய் இணைப்பு வரி்
*
இப்பொழுது நடப்பது
அணு ஆயுத யுத்தமல்ல
குடி தண்ணீர் யுத்தம்.

***

Saturday 19 April 2014

யானை வருது ஓரம்போ...!!{ புதுக்கவிதை}


*
புதிய அறிவுத் திறன்
புதிய சிந்தனை
புதிய கார்ப்பரேட்
அணுகுமறையோடு
சுறுசுறுப்பாகச்
செயல்படுகின்றன.
புத்துணர்வு முகாமில்
பயிற்சிப் பெற்ற
கோயில் யானைகள்.
*
நமக்கும்
இப்பயிற்சியினைத்
தர மாட்டார்களா? என்று
அரசுக்கு விண்ணப்பித்தன
யானைகள்
புத்துணர்வு முகாமில்
வேடிக்கைப் பார்த்து
வியந்த
வனவிலங்குகள்.
*
முகாமின் இறுதி நாள்
ஓவ்வொரு யானையும்
தத்தமது
அனுபவங்களைப்
பகிர்ந்துக் கொண்டன
“ நாங்கள்
கற்றது குன்றளவு
கல்லாதது காடு அளவு ”.
*



Friday 18 April 2014

கூழாங்கற்கள்...!! { புதுக்கவிதைகள் }


*
நேசிப்பவர்கள்
எப்பொழுதேனும்
எப்பிரச்சினையாலோ
பிரிந்து விடுகிறார்கள்
எந்தத் தயக்கமு மின்றி
பிரிந்தவர்கள்
எப்பொழுதேனும்
சந்திக்க நேர்கையில்
பேசிக்
கொள்பவர்களும் உண்டு.
பேசாமல்
முகத்தைத் திருப்பிக்
கொள்வாரும் உண்டு.
நேசிப்பது உறவு
பிரிவது துறவு.

2
நேசிப்பவர்கள்
இருவருமே
நேர்மையாகவே
நேசிக்கிறார்கள்
நேசிப்பவர்களுக்குள் தான்
எப்படியோ?
அந்த நேசிப்பில்
முரண் வந்து
முன் நிற்கிறது
முரண்களில்
முகிழ்வது தான்
காதலோ?.
3.
குழந்தைகளின்
நேசிப்பில்
எந்தக் கல்மிஷமும்
இருப்பதில்லை.
கூளமாய் மண்டிக்
கடக்கிறது
மனிதர்களின்
நேசிப்பில்
ஆயிரமாயிரம்
கல்மிஷங்கள்…!!

காந்தி சிரித்தார்...!!.


*
தேர்தல் திருவிழாவில்
காணாமல் போனது
உண்மை, நேர்மை, வாய்மை.
*
குற்றச்சாட்டுக்கள் கேட்டார்கள்
தீர்ப்பளிப்பார்கள்
விவேகமான வேட்பாளர்கள்.
*
ஊழல் செய்தவர்களைக்
காரித் துப்புகிறது
சுடுகாட்டுப் பிணங்கள்.
*
வீட்டுக்கு வீடு வாசலில்
கருப்புக் கொடி, தேர்தலைப்
புறக்கணித்ததுக் கிராமம்.
*
வேட்பாளர் சிரித்தார்
வாக்காளர் சிரித்தார்
மறைவில் காந்தி சிரித்தார்.

*

Thursday 17 April 2014

கோடைக் கவிதைகள்.

வெள்ளரிப் பிஞ்சுகள் { சென்ரியு }
*
கூட்டமாய் இருக்கிறது
குளிர் பானக் கடையில்
சில்லென்று நனைந்த மனம்.
*
தர்பூசணிக்கு
சிறுவன் வைத்தப் பெயர்
“ தொப்பைப் பழம் “.
*
குளிர்ச்சியாகத் தின்ன ஆசை
கையில் வைத்துச் சிரித்தான்
வெள்ளரிப் பிஞ்சுகள்.
*
சித்தப்பாவிற்குப் பிடித்தக்
குளிர்ப் பானம்
நீர்மோர் பானகம்.
*
மனிதன் எப்பொழுதும்
குளிர்ச்சியாக இருப்பதில்லை
குளுமைக் கொடுக்கிறது பழங்கள்.
*