சர்வதேச குழந்தைகள்
புத்தகத் தினம்.
*
இணைய உறவுகள் அனைவருக்கும்
{இன்று 02-04-2014}
இனிய “ சர்வதேசக்
குழந்தைகள் புத்தகத் தினம்”
நல்வாழ்த்துக்கள்.
*
சின்னச் சின்னக்
குழந்தைகள்
சிரித்து சிரித்துப்
படிக்கணும்
சிந்தனைக்கு விருந்தாகும்
சித்திரப் புத்தகம்
எழுதுங்கள்
*
குடும்ப உறவை வளர்த்திடும்
பண்பு நெறிகள்
பழகணும்
மனஇயல்பைப் பேணிடும்
உளவியல் புத்தகம்
எழுதுங்கள்.
*
அறிவியல் தகவல்
தொழில்நுட்பம்
கணினிக் கல்விக்
கற்கணும்
சிலிர்க்க வைக்கும்
சாதனைகள்
விளக்கும் புத்தகம்
எழுதுங்கள்
*
அறிவை மெல்ல தூண்டிடும்
விளையாட்டுக் கல்விப்
படிக்கணும்
ஆடிப்பாடிக் களி்க்க
வைக்கும்
மன வளர்ச்சிப்
புத்தகம் எழுதுங்கள்
*
கவிதை, கதை,நாவல்,
இலக்கியம்
தேடித் தேடிப்
படிக்கணும், புதிய
கற்பனைவளம் ஊக்கப்
படுத்தும்
சிறந்த சிறுவர்
புத்தகம் எழுதுங்கள்
*
குழந்தைகளின் வளர்ப்பிலே
நல்ல கவனம் செலுத்துங்கள்
சர்வதேசக் குழந்தைகளைப்
புத்தகத் தினத்தில்
வாழ்த்துவோம்…!!
*
.
No comments:
Post a Comment