முதல் போகம்
*
யாருடன்
எப்பொழுது
எப்படி
எங்கே
அனேகமாய்
கள்ளத்தனமாக?
பதற்றப்பட்டு?
வயசு?
மனசு?
தொடர்ந்து
இது
எத்தனாவது
இதில்
எத்தனையில்
நீயம் எதிராளியும்
இன்னும்.
*
தாம்பத்யம்
*
முதலில்
உடல் தொட்டு உடல்
பிறகு மனசறிந்து
மனசு
ஆதி
காமம்
அப்புறம்
காதல்.
*
பிறகு
*
அவள்
அந்தப்பக்கமாய்
திரும்பிப் படுக்க
இவன்
இந்தப் புறமாய்
விலகிக் கிடக்க
இடையில்
விழுந்தது
ஒரு வெளி
நடுவில்
கிடந்தது
இருமனம்.
*
ஆதாரம்:- விக்ரமாதித்யனின்-
“ தேவiதைகள் பெருந்தேவிகள்
மோகினிப் பிசாசுகள் “ – என்ற நூலிலிருந்து.
No comments:
Post a Comment