Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Thursday 25 July 2019

வள்ளி

வள்ளி அசுரர்கள் வென்ற மனஉளைச்சல் முருகன் கோபம் தணித்தது வள்ளியின் இக்சாசக்தி காதல். ந க துறைவன்.

Monday 15 July 2019

பல்லாங்குழி

பல்லாங்குழி 1. மதர்த்த பெருமுலை கவர்ச்சி பார்வை கவரும் சக்தி கல்தூண் சிலையழகு. 2. பாறை மீது தியானம் காற்றின் திசையில் அலைகிறது துறவியின் தாடி. 3. அந்த பசுமை புல்வெளி எனக்கு சொந்தம் அல்ல இயற்கையின் சொத்து. 4. மழைக்கு ஒதுங்கியது இலையின் பின்புறம் நனையாமல் சிறுபுழுக்கள். 5. பூங்காவில் நுழைவதற்கு பறவைகளுக்கு அனுமதி இலவசம். 6. இலையின் பின்புறம் வெண்புள்ளியாய் இருப்பது எந்த புழுவின் சினைமுட்டை? 7. இரை உண்டு பசியாறின முட்டைகள் இடுவதற்கேற்ற நீர்நிலைத் தேடின வாத்துகள். 8. இனிப்பாய் சுவைத்து ரசிப்பு அந்த குளிர்ப்பானக் கடையில் ஒலிக்கிறது கானா பாடல். 9. கோயிலில் குடியிருப்பது அசலா? போலியா? மக்கள் வணங்கும் மூலவர்கள். 10. தோல்விக்கு வருத்தப்பட்டாள் நாணித் தலை கவிழ்ந்து பல்லாங்குழி விளையாட்டு. 11. தறியில் அறுந்த நூல் இணைத்து வேலை தொடர்ந்தான் குடும்பத்தில் சிக்கல். 12.. சாமி படத்திலிருந்து விழுந்தது பூ நல்ல சகுணமென வணங்கினாள் சுவரோரமாய் நகர்ந்தது பல்லி. 13. பசியில் அலைந்த நாய்களுக்கு தெருமூலையில் கிடைத்தது திருப்தியாய் எச்சில் வாழையிலை சோறு. 14. பாலாற்றைக் கடந்து போகிறது ரயில் சென்னை நோக்கி பயணம் ஜோலார்ப்பேட்டை தண்ணீர். 15. வலிகள் சொல்லாமல் மௌனம் மலர்கள் தாங்கி சுமக்கும் மழைத்துளியின் அதிர்வுகள். 16. எருக்கம் செடி நிறைய பூக்கள் யாரும் பறிக்காமல் உதிர்ந்தன அருகில் பிள்ளையார் கோயில். 17. தனியாருக்கு தாரை வார்ப்பு எதிர்த்து வயல்வெளியில் மரவட்டை ( ரயில் பூச்சி ) கள் மறியல். 18. யாரும் நிர்பந்திக்க இயலாது இதுதான் உண்ண வேண்டுமென பூச்சிகளே பல்லிகள் உணவு. ந க துறைவன்.

Thursday 11 July 2019

நாகப் பழம்.

நாகப் பழம் 1. நான் எப்பொழுதும் நானே நான் என்பதற்குள் இருப்பாக இருக்கிறேன் நான். 2. எத்தனை வன்குணம்? உடைத்து நொறுக்கியவர் யார்? சிதைந்த புத்தர் சிலை. 3. சிலையின் பெயர் சிவன் வடித்த சிற்பி யார்? பொறிக்கப்படவில்லை பெயர். 4. ஒரு நதி என்னை அழைக்கிறது புனித நீராடுவதற்கு. 5. குருவைத் தேடுவது போன்றது நல்ல புத்தகம் தேடுவது. 6. ஆதியில் கல்வி அறிவற்ற ஆதிவாசிகள் ஆழ்ந்து படித்த புத்தகம் இயற்கை ஒன்றே. 7. பறந்து சென்று பின்னும் பட்டாம்பூச்சியின் நுண்துகள் என் விரல்களில் இன்னும்... 8. தரையெலாம் நீலவண்ணம் சிறுவன் மண் ஊதி ருசித்து தின்றான் நாகப் பழம். 9. கூடை நிறைய நாகப் பழம் டம்ளரில் அளந்து விற்கிறாள் வயது முதிர்ந்த கிழவி. 10. நாகமரத்தில் முனி வாசம் ஊர்மக்கள் நெருங்க பயம் துணிந்து இரவு உறங்கும் பறவைகள். 11. கோயிலில் குடியிருப்பது அசலா? போலியா? மக்கள் வணங்கும் மூலவர்கள் 12. பொறி தின்றவாறு என்னிடம் பேசின குருவிகள் பூங்காவின் ரகசியங்கள். ந க துறைவன்.

Tuesday 9 July 2019

துறவி

பாறை மீது தியானம் காற்றின் திசையில் அசைகிறது துறவின் தாடி. ந க துறைவன்.

Monday 8 July 2019

காக்கைகள்

காக்கைகள் 1. தூக்கி சென்றது காக்கை எங்கோ வைத்து படித்து மகிழ எனது ஒரு ஹைக்கூ. 2. கிழவிகளை ஏமாற்றுவதில்லை கொஞ்சம் விவேகமானது வடை திருடும் காக்கைகள். 3. பொல்லாத காக்கைகள் அதுகள் எதையும் மறைத்திட முடியாது அடுத்த வீட்டில் போட்டது எலும்புதுண்டு. 4. கூட்டமாய் சேர்ந்து ஒருமணி நேரம் நதிக் கரையில் பிரார்த்தனை மழை வேண்டி காகங்கள். 5. புத்திசாலித்தனமாக செயல் கண்டபடி நிற்பதில்லை சில வீடுகள் தான் போகிறது தன்மானக் காக்கைகள். 6. அங்கேதான் நீரருந்தும் தினம் காக்கைகள் மட்டுமே அறியும் மண்மூடி புதைக்கப்பட்டக் குளம். 7. நாளை என்னை சந்திக்க வரும் பாராட்டவோ, திட்டவோ கூட்டமாய் காக்கைகள். 8. நீரற்று வறண்டு பலவருடங்கள் கழிந்தும் குளம் மௌனமாய். 9. இளம் வாலிபர்களுக்கு இப்பொழுது வாலிபால் மைதானம் வறண்ட குளம். 10. காற்று வெளியில் எங்கும் நிஜம் தேடும் பறவைகள் கற்பனையில் கரைகிறது வாழ்க்கை. 11. மனம் லேசானது சூழலுக்கேற்ப உதிர்ந்தது நகைச்சுவைப் பேச்சு. 12. தற்செயலாய் பகிர்ந்தனர் கிண்டல் பேச்சு புன்னகையோடு உடைந்தது போனது அவன்மனம். ந க துறைவன். ***

Thursday 4 July 2019

பூக்கள்

பூக்கள் 1. எது புதிய பூ, எது பழைய பூ? இனம் அறிய இயலவில்லை கலப்படமாய் பூக்குவியல். 2. குப்பைகள் நிறைந்த தரை பூக்கடையில் மலர்கள் வாசம் மருக்கொழுந்து தவனம் எனை ஈர்த்தது கவனம். 3. பூக்கடைக்காரரிடம் இல்லை பூப்போல மனசு. 4. அழகிய காந்த கவர்ச்சி வீதியில் கொட்டினர் விற்காது தேங்கிய பூக்கள். 5. கூடை நிறைய பூக்கள் மனசு நிறைய வியாபாரம் கல்லாவில் பணத்தாள்கள். 6. பூ பொக்கை கொடுத்து பூ பொக்கை வாங்கினர் அசைந்தன இருவர் உதடுகள். 7. அழகாய் அணிந்த காட்சி சிலைகள் உணருமோ? பூக்களின் நறுமணம். 8. நாரில் அடர்ப் பூக்கள் விரோதமின்றி கூட்டணி வண்ணமலர் மாலைகள். 9. பூக்காரியின் வறுமை பேருதவி புரிகிறது நாளும் பூ வியாபாரம். 10. பறித்து எடுத்தபோது பதட்டமின்றி வீழ்ந்தது பூவின் ஆன்மா. 11. பறந்து திரிந்து வேவு பார்க்கும் வண்ணத்துப்பூச்சிகள் அறியுமோ? பூக்கள் கலவி ரகசியம். 12. பூக்களுக்கு ஏனோ இல்லை வண்ணத்துப்பூச்சிகளைத் தூரத்தி விரட்டும் துணிவு. 13. பூக்காரி மரணம் உடலைப் போர்த்தியது அஞ்சலி மலர் மாலைகள். 14. விடியல் பொழுதில் எந்த சாமத்தில் பூக்கள் இதழ் விரித்து மலர்கிறது பிரபஞ்ச வெளியில். 15. பார்க்கும் வெளியெங்கும் பூர்ண தரிசனம் எங்கெங்கும் புத்தம் பூக்கள். 16. எது? தும்பை பூக்களை விட சிறிய பூ. 17. என்றேனும் ஒருநாள் பார்க்க இயலுமோ? அழகான அத்திப் பூக்கள். 28. தும்பை பூவின் நுனியில் சுற்றி வந்து எதைத் தேடுகிறது? அந்த ஒற்றை சிற்றெறும்பு. ந க துறைவன்.