Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Sunday 31 August 2014

பேனா இல்லாத பாக்கெட்....!! [ புதுக்கவிதை ]


*
அலுவலகம் கதவுகளைத் திறந்து
விழிப்போடு வரவேற்கின்றன
வாடிக்கையாளர்களை அன்போடு,
கண்ணாடிப் பெட்டிக்குள்ளிருக்கும்
அலுவலர்கள் தலைத் தொங்க
இமைகள் கணினியின்மீது பதியப்
பணியாற்றுகிறார்கள் எத்தனையோ
மனஉளைச்சலோடு,
*
உள்ளே வருவதும்
வெளியே போவதுமான
வாடிக்கையாளர்கள்
கவுண்டர் கவுண்டராய்
கால்கள் கடுக்க நின்று
அவசரஅவசரமாய் தன்
பணிகளை முடிக்கடிவெனப்
பரபரப்பான மனஉணர்வோடு,
*
வேலைமுடிந்தவர்கள்
புன்சிரிப்போடும்
வேலைமுடியாதவர்கள்
கடுகடுப்போடும்
வெளியேறுகின்றார்கள்
அலுவலகம் விட்டு,
*
விண்ணப்பங்களை எழுதுவதும்
தவறுகளைத் திருத்துவதுமாகப் பலர்
எழுதுபலகையின் மீது வைத்து
எழுதிக் கொண்டிருக்கிறார்கள்
தவறு நேராமல் கவனம் வைத்து,
*
அவசரஅவசரமாய்
அருகில் வந்து நின்ற ஒருவர்
குனிந்த தலைநிமிராமல்
எழுதிக் கொண்டிருந்தவரிடம்
“ சார், கொஞ்சம் பேனா
கொடுக்க முடியுமா? “ என்றார்.
நிமிர்ந்துப் பார்த்தவர்
கண்களின் வழியே
பதில் சொன்னார்.
பேனா, கேட்டவர் மீண்டும்
அடுத்த நபரை நோக்கிப் போய்க்
கேட்டு நின்றார்.
அவர் கொடுத்தவுடன்
எழுதத் தொடங்கினார்.
நன்றாக எழுதுகிறது போலும்
அந்த இரவல் பேனா.
பேனா இல்லாத பாக்கெட்டே
பாக்கெட் அல்ல
பேனா இருக்கும் பாக்கெட்டின்
தனிப் பெருங் கருணையே
தனிப்பேரழகு….!!
*


Saturday 30 August 2014

புரியாமல்...!! [ ஹைக்கூ ]

*
NA.GA. THURAIVAN'S HAIKU.
*
புரிந்துக் கொண்டிருப்பாய் என
நினைத்தேன் எப்படியின்னும்
புரிந்துக்கொள்ளாமல் அனிச்சப்பூவே…!!
*
புரிந்துக் கொள்வது கடினம்
புரியாமலிருப்பது எளிது
கவலைப்படாமல் போகிறது சிட்டு.
*
புரிந்தால் தலைக் கவிழும்
புன்னகைப் புரியும் உதடுகள்
உரசி எம்பிப் பறக்கிறது தும்பிகள்.
*   

குழப்பமாய்...!! [ சென்ரியு ]


*
மனம் எங்கெங்கோ வெளியில்
உள்ளே கனன்றெரிகிறது
சொல்ல முடியாத குழப்பம்.
*
யாரோ விதைத்தக் குழப்பம்
குழம்பித் தவிக்கிறது மனம்
குழப்பம் விழுப்பம் தரலாம்
*
வலையில்லாமல் பிடிக்கிறார்கள்
குழம்பிய குட்டையில்
நிறைய நெளிகிறது மீன்கள்.

*

Thursday 28 August 2014

வரவேற்பு.....!! [ சென்ரியு ]

*
NA.GA. THURAIVAN'S SENRYU.
*
ஒன்றை ஒன்று மோதாமல்
குறித்தப் பாதையில்
பயணிக்கின்றன பறவைகள்.
*
வாசல்கேட்டில் அமர்ந்து
கத்திக்கத்தி ஏதோவொரு
தகவலைச் சொல்கிறது காக்கை.
*
வெளிநாட்டிலிருந்து வருகிறான் மகன்
உறவினர்களோடு பயணித்தது
வரவேற்க செல்ல நாய்க்குட்டி.
*
  

கவிதை எழுதுவேன்....!!


*
கவிதை எழுதுவேன் – புதுக்
கவிதை எழுதுவேன்.
எதுகை மோனை வைச்சி
கவிதை எழுதுவேன்.

கதிரவனின் கருத்தைக் கேட்டுச்
சமூகக் கவிதை எழுதுவேன்.
காற்றின் இசை உணர்ந்து
ஆன்மீகக் கவிதை எழுதுவேன்.
*
பண்பாட்டின் சூழல் கேட்டை
புதுக் கவிதையில் எழுதுவேன்.
பனிக் குளிரின் அமைதியிலே
ஹைக்கூ கவிதை எழுதுவேன்.  
*
தும்பிகள் விளையாட்டு ரசித்து
சிறுவர் பாடல் எழுதுவேன்
அகம் புறம் வெளிச்சமிடும் – தமிழ்
மரபுக் கவிதை எழுதுவேன்.
*
நிலவு வெட்கப்படாலிருக்கும்
காதல் கவிதை எழுதுவேன்.
வெள்ளை இருட்டில் நடக்கும்
உண்மைக் கவிதை எழுதுவேன்.
*
வண்டுகளின் வன்கொடுமையினை
வன்மையாக எழுதுவேன்.
மலர்களின் அழகைப் போற்றி
பெண்ணியக் கவிதை எழுதுவேன்.
*
மரத்தின் அடிவேராகியே – இம்
மண்ணின் கவிதை எழுதுவேன்.
மனிதனின் உள்ளத் தவிப்பை – என்
மரணம் வரை எழுதுவேன்.!!.

Wednesday 27 August 2014

வினைத் தீர்த்தான்...!!


*
மூத்தவனே, விநாயகா…
உலகை வலம் வந்து
நீதான் வெற்றிப் பெற்று
பழத்தைப் பெற்றாய்.
உன் தம்பி
கோபித்துக் கொண்டு
எங்கோ போகிறேன் என்று
மிரட்டுகிறான் பார்.
அவன் அழலாமா? போகலாமா,
உனக்கு கஷ்டமில்லையா?
அந்தப் பழத்தை
அவனிடம் கொடுத்துச்
சமாதானமாகப் போ…!
உங்களுக்குள்
தகராறு வேண்டாம்?
தாய் சொல் மிக்க
மந்திரமில்லை.
வினைத் தீர்த்தான்
விநாயகன்.

*.

ஜல்லிக்கட்டு...!! [ லிமரைக்கூ ]

*
NA.GA. THURAIVAN'S LIMARAIKU.
*
எல்லோர் கையில் இருக்கணும் காசு
மனம் கலகலப்பாக்க வேண்டுமானால்
சிரிக்க சிரிக்க நீ பேசு.
*
கைகால் முறிந்தது காயம்பட்டு
தமிழரின் வீரவிளையாட்டு பார்க்கலாம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.
*
சமையலறையில் இருந்துக் கேட்டது ஓசை
சுகந்தமணமனமாய் நாசிக்குள் நுழைந்தது
அம்மா சுட்டுக் கொண்டிருந்தத் தோசை.
*
சின்னத்திரைத் தொடரில் பரபரப்பு
திடீரென மின்தடை
மாமியார் முகத்தில் புன்சிரிப்பு.
*
திருமணவிருந்தில் ருசித்துண்டான் பாயாசம்
உறவினர்கனளுடன் கலந்துப் பேசி மகிழ்ந்தவன்
கண்கள் சொருகியது தூக்கமாய் ஆயாசம்.
*


Tuesday 26 August 2014

நினைவுகள்...!! [ கவிதை ]


*
அழுக்கு நீங்கச் சுத்தம் செய்கிறோம்
சுத்தம் செய்யசெய்ய அழுக்கு சேர்கிறது.
*
மனமெல்லாம் காதல் நினைவுகள்
மரம் நிறையச் செம்பருத்திப் பூக்கள்.
*
சிரித்தவன் வாய் துர்நாற்றம்
வெண்பற்கள் பான்பராக் நிறமாற்றம்.
*
என்ன சும்மா இருக்கீங்க?
சும்மா இருக்கத்துானே சொன்னாங்க….
*
செல்லக் குழந்தைக்குப் பாராட்டு
தாய்ப்பாடி மகிழ்வாள் தாலாட்டு.
*
நெஞ்சுருக அம்பாளின் பாசுரம்
பாடினாள் தருவாள் வேண்டும் வரம்.

*

அவனுக்கென்னவாயிற்று? [ புதுக்கவிதை ]


*
அறிவாளி, ஆற்றல், துணிவு
மனிதநேயமிக்கவன் என்று
பலராலும் பாராட்டப்பட்டவன்
சிறந்த நிர்வாகி என்று
பெயரெடுத்தவனாயிற்றே…
அவனுக்கென்னவாயிற்று?
*
ஐந்தாண்டுகளாக அவனுக்கு
நேர்ந்தக் குடும்பப் பிரச்சினையின்
மையக் கரு எது?
மனக்குழப்பமா? மனச்சிதைவா?
எது அவனுள்ளிருந்து
ஆட்டிப்படைகின்றது?
எல்லோராலும்
நேர்மையானவனென்று
மதிக்கப்பட்டவனுக்கு
என்னவாயிற்று?
*
எவரிடமும் மனம்விட்டுப்
பேசிப் பகிர்ந்துக் கொள்ளக்கூட
துணிவின்றி மனக்குகைக்குள்
அடைத்து வைத்து வைத்து
நோய்க்கு ஆளாகி விட்டவனை
எதிரிகள் கூட நல்லவனென்று
புகழ்வார்களே
அப்படிப்பட்டவனுக்கு என்னவாயிற்று?


..*
வீட்டுச் சிறைக்குள்
அடைப்பட்ட கைதியாகி
பேச்சுக் குறைந்து மௌனமாகி
கேட்பதற்குப் பதில் சொல்லி
மருந்தே உணவு
உணவே மருந்தென்று
தூங்கிக் கழிக்கிறானே
ஒவ்வொரு நாள் பொழுதும்…
எதையும் பட்டென்று
வெளிப்படையாய் பேசுவானே?
அவனுக்கென்னவாயிற்று?
*
சில நேரம் நன்றாகப் பேசுகிறான்
சில நேரம் ஆர்ப்பாட்டம் செய்கிறான்
அறையில் அமர்ந்து மெல்லிசைக்
கேட்டு ரசிக்கிறான். சன்னலின்
அருகில் வந்தமர்ந்து அழைக்கும்
சி்ட்டுக்குருவியோடு எதையோ
பேசிச் சிரிக்கிறான்.
செல்லக் குழந்தையை அழைத்து
நகைச்சுவையாய் பேசி
மகிழ்ந்துப் புன்னகை செய்கிறான்.
இப்படியெல்லாம்
எப்பொழுதும் சிரித்த முகத்தோடு
கலகலப்பாக இருப்பானே
அவனுக்கென்னவாயிற்று?
*
எந்தக் குற்றமும் அறியாத
வெள்ளந்தியானவனின்
மனதைப் பாதித்தச் சம்பவம் எது?
மனத் தெளிவாகி மனிதனாய்
மீண்டுத் திரும்பினால் போதுமென்று
காத்திருக்கிறார்களே….
குடும்பத்தில் அனைவரிடத்தும்
அன்புக் காட்டியவனுக்கு
என்னவாயிற்று?
*
எல்லோருக்கும் ஆலோசனைச்
சொல்லி வழிகாட்டியவனுக்கு
இன்று
மனநல மருத்துவ ஆலோசனை
அவனுக்கு வழிகாட்டுகிறது.
*



அவனுக்கென்னவாயிற்று? [ புதுக்கவிதை ]


*
அறிவாளி, ஆற்றல், துணிவு
மனிதநேயமிக்கவன் என்று
பலராலும் பாராட்டப்பட்டவன்
சிறந்த நிர்வாகி என்று
பெயரெடுத்தவனாயிற்றே…
அவனுக்கென்னவாயிற்று?
*
ஐந்தாண்டுகளாக அவனுக்கு
நேர்ந்தக் குடும்பப் பிரச்சினையின்
மையக் கரு எது?
மனக்குழப்பமா? மனச்சிதைவா?
எது அவனுள்ளிருந்து
ஆட்டிப்படைகின்றது?
எல்லோராலும்
நேர்மையானவனென்று
மதிக்கப்பட்டவனுக்கு
என்னவாயிற்று?
*
எவரிடமும் மனம்விட்டுப்
பேசிப் பகிர்ந்துக் கொள்ளக்கூட
துணிவின்றி மனக்குகைக்குள்
அடைத்து வைத்து வைத்து
நோய்க்கு ஆளாகி விட்டவனை
எதிரிகள் கூட நல்லவனென்று
புகழ்வார்களே
அப்படிப்பட்டவனுக்கு என்னவாயிற்று?



Monday 25 August 2014

எளிது... எளிது...!! [ கவிதை ]


*
எது விரும்புகின்றோமோ
அது எளிதில் கிடைப்பதில்லை.
எது விருப்பமில்லையோ
அது எளிதில் கிடைத்துவிடுகிறது.
இது மனசின்
விளையாட்டா? விசித்திரமா?
உங்கள் அனுபவம் எப்படி?

*

பசுமை தங்கம்...!! [ ஹைக்கூ ]

*
NA.GA. THURAIVAN'S HAIKU.
*
ஏகாந்த வெளியில் பறந்துத் திரியும்
பறவைக்குத் தெரியுமா?
பால்வெளியின் ரகசியம்.
*
முதல் வாஸ்து விஞ்ஞானி
தென்னாட்டுக் கலைஞன்
சிற்பி மயன்.
*
வீட்டிற்கு அழகு செய்கிறது
காட்டின் பசுமைத் தங்கம்
தேவதாரு மரங்கள்.
*
வீட்டில் யாருமில்லை
விளையாடுகிறது ஏறிஇறங்கி
ஊஞ்சலில் எலிகள்.
*
வெளிநாட்டில் கணவன்
உள்நாட்டில் மனைவி
உறவை இணைக்கிறது செல்போன்.
*


வண்டுகள்...!! [ ஹைக்கூ ]

*
NA.GA. THURAIVAN'S HAIKU.
*
பூமியின் இரகசியங்கள்
புலன்களால் உணர்ந்திடும்
மண்வளம் புரிந்த வண்டுகள்.
*
பொன் வண்டின் உலகப்
பொதுமொழி
இன்னிசை கீதம் “ ரீங்காரம் ”.
*
சைவமா? அசைவமா? சொல்
வீட்டிற்குள் வந்த என்
விருந்தாளி வண்டே…!!
*
உறங்கும் குழந்தையை
எதற்காகக் கடித்தாய்?
வண்டின் வன்குணம்.
*
பயிருக்கு உரம் போட
மலஉருண்டை
உருட்டி வரும் வண்டுகள்.
*


Sunday 24 August 2014

இலை உதிர்காலம்...!!! [ ஹைபுன் ]

*
NA.GA. THURAIVAN'S HAIBUN.
*
அவன் எதற்காகத் தற்கொலை செய்துக் கொண்டான் என்று பலரும் பலவிதமான கற்பனைக் கேள்விளைப் புனைந்துப் பேசிக் கொண்டனர். உண்மையான நிலவரம் அவனுக்கோ, அவனது நேசிப்பிற்குரியவர்களுக்கோ மட்டும் தெரிந்தோ, தெரியாமலோ கூட இருக்கலாம். உறுதியற்ற மனம், நம்பிக்கையற்றப் போக்கு, எப்பிரச்சினையிலும் தெளிவின்மை, வாழ்வின் சரியானப் புரிதலின்மை ஆகியன அவனின் பலவீனமோ? மட்டுமல்ல, அரை நொடிக்குள் எடுக்கின்ற அவசரமுடிவே அவனின் தற்கொலைக்கான முடிவாகி, எத்தனைப் பேரை சிக்கலுக்குள்ளாக்கி விடுகிறது?
நீ போய்விட்டாய்
நான் வாழ்கிறேன். இன்று
பிறந்தது இலைஉதிர்காலம்.
- ந.க. துறைவன் ஹைபுன் கவிதை.

சிரிப்பு...அழுகை...!! [ சென்ரியு ]

NA.GA. THURAIVAN'S SENRYU.
*
எதையோ தேடியபோது கிடைத்தது
தட்டுமுட்டுச் சாமான்கள் அறையில்
அக்கா விளையாடிய பொம்மைகள்.
*
வாங்கியவர் கட்டியதோ?
அடையாளம் தெரியவில்லை
குடியிருந்தப் பழையவீடு.
*
பாறை நிழலில்
வளரும் புல்லாய்
வயோதிகத் தனிமை.
*
அழவேண்டிய சமயம் சிரிப்பு
சிரிக்க வேண்டிய சமயம் அழுகை
சதா ‘ உம் ‘ என்ற முகம்.
*
ஆழ்ந்த உறக்கம்
கூர்க்காவின் விசில் சத்தங்கேட்டு
விழித்துக் கொண்டது நாய்.

*

Thursday 21 August 2014

சென்னை பிறந்த நாள்...!! [ சென்ரியு ]

NA.GA. THURAIVAN'S SENRYU.
*
சின்னக் கிராமம்
பெரிய நகரமானது
தலைநகரம் சென்னை.
*
பழமையைப் பிரதிபலிக்கிறது
ஆங்கிலேயரின் ஆதிக்கம்
செயின்ட்ஜார்ஜ் கோட்டை.
*
மெரினா கடற்கரை நோக்கி
கூட்டத்தைப் பார்க்கக் கூட்டமாய்
வருகிறது கடல் அலைகள்.
*
பட்டினத்தார் துக்கத்தில்
கண்ணகி கோபத்தில்
மக்கள் நெருக்கத்தில் சென்னை.
*
ஊருக்கு அழகு நதி
திட்டுக்கனைச் சமாளிக்கிறது
கூவம்.. பாவம்… ?
*
பழமையான கடை வியாபாரம்
நடந்த இடம் காணவேயில்லை
நெரிசல் நிறைந்த மூர்மார்கெட்.
*
யானையுமில்லை பாரதியுமில்லை
இன்னுமிருக்கிறது அங்கேயே
பார்த்தசாதி கோயில்.
*
உயிரியல், விலங்கியல் அறிவியல்
அருங்காட்சியகங்கள்
முன்னேற்றச் சிகரங்கள்.
*
வள்ளுவர் வாழ்ந்த இடமா?
மயில்கள் வசித்த இடமா?
மைலாப்பூரில் எங்கே காண்பது?
*
சென்னை பிறந்த நாள்
வாழ்த்துக்கூற குவிந்துள்ளன
சரணாலயத்துப் பறவைகள்.

*

குண்டுமல்லிப்பூக்கள்...!! [ சென்ரியு ]

*
NA.GA. THURAIVAN'S SENRYU.
*
பளபளவென்று இருந்தது
கைப்பட்டவுடன் சுருங்கியது
பட்டுரோஸ் பூக்கள்
*

குண்டாகயிருந்தாலும்
அழகாகவே இருக்கிறது

குண்டுமல்லிப்பூக்கள்….!!

மனச் சலிப்பு...!! [ கவிதை ]


*
பெண்வீட்டாருக்கு மாப்பிள்ளைப்
பிடித்திருந்தது.
மாப்பிள்ளை வீட்டாருக்கு
பெண்வீட்டாரின் குடும்பப்
பின்னணிப் பிடிக்கவில்லை
பிடிப்பதும் பிடிக்காததும்
அவரவர்கள் விருப்பம்
பெண் மனம் சலித்தாள்
மாப்பிள்ளை மனம் அலுத்தான்.

*

Tuesday 19 August 2014

உறவுப்பாலம்...!! [ சென்ரியு ]

NA.GA. THURAIVAN'S SENRYU.
*
வெளியில் கேட்டது இனியகுரல்
வந்துப் பார்ப்பதற்குள்
பறந்துவிட்டது சிட்டுக்குருவிகள்
*
உயரமான செல்டவர்கள்
அதிர்வலைகளை உணர்ந்து
பாதுகாத்துக் கொண்டன பறவைகள்.
*
நீரில்லாத நதிகள், ஆறுகள்
கரைகளை இணைக்கின்றன
போக்குவரத்துப் பாலங்கள்.
*
,

.