Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Tuesday 31 January 2017

காதல்...!! ( சென்ரியு )


TEA TIME - டீ டைம்.


மூன்று டீ சொன்னார்
நின்றுக் கொண்டே பேசினார்கள்
காதல் தகராறு.

Sunday 29 January 2017

செம்பருத்திப்பூ...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
செம்பருத்தி பூவின்
வசீகர அழகில் மயங்குகிறது
வண்ணத்துப்பூச்சிகள்.
*                                 
Hibiscus flower
Enticements, beauty deceived
Butterflies.
*

இயற்கை விவசாயி பூங்கோதை.




இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டு விவசாய உற்பத்தியில் சாதனைப் படைத்துள்ள பூங்கோதை தமிழ்நாட்டுப் பெண்மணி ” கிரிஷி கர்மான் விருது பெற்றுள்ளார். டெல்லியில் நடைபெற்ற விழாவில் பிரதாமர் மோடி, அந்த விருதை வழங்கினார். இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் கிடைத்துள்ளது.
“ பெண்களால் முடியாதது எதுவுமில்லை. விடாமுயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் இருந்தால் யாரும் சாதனை படைக்கலாம். நான் வீட்ல இருந்ததைவிட வயல்ல இருந்ததுதான் அதிகம். காலைல ஆறுமணிக்கு வயலுக்குப் போனா பொழுதுசாஞ்ச பிறகுதான் வீட்க்கு வருவேன். மக்காசோள உற்பத்தியில் சாதனை படைச்ச என் வயல்ல கடந்த ரெண்டு வருஷமா விளைச்சல் இல்லை. போன வருஷம் மழை அதிகமாக பெய்து பயிர்களை அழிச்சிடுச்சி. இந்த வருஷம் மழையும் இல்லை.கிணத்துலே தண்ணியும் இல்லை. அதனால பயிர் எல்லாம் கருகிப்போச்சு. அதுக்காக நான் இடிஞ்சி போயிடலை, விவசாயிங்க பாடுபட்டாதானே நகரத்துல இருக்கிறவங்க வீட்லயும் அடுப்பு எரியும்? இவ்ளோ நாளா என்னை வாழவைச்ச இயற்கை, இடையிலே கொஞ்சம் சோதிச்சுப் பார்க்குது. ஆனா என்னைக் கைவிடாதுங்கற  நம்பிக்கையில காத்துக்கிட்டு இருக்கேன் ” என்கிறார் விவசாயி பூங்கோதை
ஆதாரம் ; தி இந்து – ஞாயிறு நாளிதழ் – பெண் இன்று - 29-01-2017.

தகவல் ; ந.க.துறைவன். 

இதழ்கள் சொல்லும் இனிய செய்திகள்...!!



*
1.
இங்குள்ள தலித் இயக்கங்கள் இது தொடர்பாகக் காட்டும் மௌனத்தை நான் மிகப்பெரிய ஆபத்தாகப் பார்க்கிறேன்.
2.
இந்துமதத்திலும் என்னைப் பொறுத்தமட்டில் சிறப்பான கூறுகளும் உண்டு. ஒர் இறுக்கமான புனித நூல் அதில் கிடையாது. என்பதே அதன் சிறப்புகளில் ஒன்று என்பது என் கருத்து.
3.
இராமச்சந்திர ராயரால் எழுதப்பட்ட “ இந்து பாகசாஸ்திரம் ” என்கின்ற புத்தகம் 400 பக்கங்களைக் கொண்டது. 1891 –ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.

ஆதாரம் ; விகடன் தடம் – ஜனவரி – 2017 இதழ்.

தகவல் ; ந.க.துறைவன். 

Saturday 28 January 2017

செய்திகள் என்ன சொல்லுது?



*
1. உலகின் மிகப் பெரிய வர்த்தக நிறுவனமான “ அமேசான் ” அதன் கனடா நாட்டுப் பிரிவு இந்தியாவின் தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள மூவர்ண நிறத்தில் கால்மிதியடிகளைத் தயாரித்தற்காகக் கடுமையாக எச்சரிக்கபட்டு, மன்னிப்புக் கேட்க வைக்கப்பட்டது.
     இந்தியாவில் யோகா குரு பாபா ராம்தேவ் நடத்தும் பதஞ்சலி நிறுவனம் கூட பதஞ்சலியின் பெயரில் கால்மிதியடிகளைத் தயாரித்து விற்பனை செய்கின்றன என்கிறார்களே உண்மையா? அதற்கென்ன செய்யப் போகிறது இந்திய அரசு.
2. கம்பளா போட்டிக்கு அவசர சட்டம். கர்நாடக முதல்வர் சித்தராமையா முடீவு.
     மற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அவர்களும் போராட்டக்களத்திற்கு விரைவில் இறங்குவார்கள் போல தெரிகின்றது.
3. பேமெண்ட் வங்கி தொடங்க தபால்துறைக்கு ரிசர்வ் வங்கி அனுமதி.
     ஆதித்யா பிர்லா நுவோ, பினோ பெடெக், எஸ்எஸ்டிஎல், ரிலையனஸ், வோடபோன் ஆகிய நிறுவனங்களுக்கு கொள்கை அளவிலான அனுமதி கிடைத்திரு்க்கிறது.
     எல்லாமே தனியார்துறைக்கு தாராளமாக அனுமதிக்கபட்டுள்ளது.
தபால்துறையை இன்னும் கொஞ்சநாளில் ஊத்தி மூடிவிடுவார்கள் போல தெரிகிறது.
ஆதாரம்  jதி இந்து – நாளிதழ் – 29-01-2017.

தகவல் ; ந.க.துறைவன். 

Wednesday 25 January 2017

செய்திகள் என்ன சொல்லுது?




1.
நாட்டின் பொருளாதாரம் சீராக ஒன்றரை ஆண்டுகள் ஆகும்
பொருளாதார நிபுணர் ஆனந்த் எஸ்.சீனிவாசன் கருத்து.

1. கறுப்பு பணம், கள்ளப் பணம் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக என்று கூறி, பணமதிப்பு நீக்க நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தது மிகவும் தவறான முடிவு.
2. உலகின் எந்த நாட்டிலும் பணமில்லாத பரிவர்த்தனை 100% சதவீத அளவுக்கு நடப்பதில்லை. வளர்ந்த நாடுகளான அமெரிக்காவில் 46 சதவீதம், பிரான்ஸ் 45%, ஜெர்மனி 86%, ஆஸ்திரேலியா 66% பணமில்லா பரிவர்த்தனை நடக்கிறது. இந்தியாவில் 100% பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்வது சாத்தியமில்லை. ஏனென்றால், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர்தான் இணையம் சேவையை பயன்படுத்துகின்றனர். உத்தரபிரதேசம், பிஹார் போன்ற மாநிலங்களில் இன்னும் முழுஅளவில் மின்சார வசதியே கிடைக்கவில்லை.
3. ரிசர்வ் வங்கி போதிய அளவு பணம் அச்சடித்து வழங்கினால் தான், பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள  பணத்தட்டுப்பாடு பிரச்சினை தீரும். பொருளாதார வளர்ச்சி சீராக இன்னும் 12 முதல் 18 மாதங்கள் ஆகும்.
     மக்கள் பாடு இன்னும் ஒன்றரை வருடத்திற்கு துயரம் தான் போல தெரியுது. நாட்டு மக்கள் மீது மோடி திணித்து பணவன்முறை இது என்றே கூறலாம்.
2.
உச்ச நீதிமன்றத்தில் பிராணிகள் நல அமைப்பு சார்பில் ஜல்லிக்கட்டு புதிய சட்டத்துக்கு எதிராக மீண்டும் வழக்கு.
     மீண்டும் வேதாளம் முருக்கை மரத்தில் ஏறுகிறது. பிரச்சினை மேலும் வளர்கிறது. தீர்வுதான் என்ன???
3. 89 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு.
     பெரும்பாலும் இந்த விருதைப் பெற்றுள்ளவர்கள். யார் எப்படிப்பட்டவர்கள் என்று யோசித்து பாருங்கள்.

ஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 26-01-2017.
தகவல் ; ந.க.துறைவன்.



Tuesday 24 January 2017

பாதுகாப்பு...!! ( ஹைக்கூ )




Haiku – Tamil / English.
*
இருட்டில்
இலைகள் பாதுகாப்பில்
கிளிகள்.
*
In the dark
Leaves in custody
Parrots.

*

சைனா டீ... ( சென்ரியு )



TEA  TIME  - டீ டைம்.

*
அப்பா சொல் கேட்கும் மகன்
எப்பொழுதும் விரும்பி குடிக்கிறான்
சைனா டீ.
 
Father asks son to tell
Always liked the drink
China tea.

N.G.Thuraivan.

பார்வையற்ற வழிகாட்டி...!!




சூபி கதை.



“ ஞானத்தைத் தேடும் ஒருவர், லுக்மான் எனும் சூபி குருவிடம் கேட்டார்
“ நீங்கள் யாரிடம் ஞானத்தைப் பெற்றுக் கொண்டீர்கள்? ”
அவர் சற்றும் யோசிக்காமல் பதில் சொன்னார்
“ பார்வையற்ற ஒருவரிடமிருந்து. பார்வையற்ற எவரும் முன்கூட்டியே கவனிக்காமல் ஒரு அடி முன்னால் வைப்பதில்லை. அவர்கள் எங்கும் விழுவதில்லை. பெரும்பாலும், கண்ணுள்ளவர்கள் தான் விழுகிறார்கள். அதையறிந்த போது என் கவனம் அதிகரித்தது. வழியும் தெரிந்தது ”.

ஆதாரம் ; சூபி கதைகள் – தமிழில் : யூமா வாசுகி. பக்கம் – 31.

தகவல் ; ந.க.துறைவன்.             

Saturday 21 January 2017

ஹைக்கூ


ஜென்...!!






எதைப் பார்க்கிறாயோ அதை மட்டுமே பார்;
எதைக் கேட்கிறாயோ அதை மட்டுமே கேள்:
எதைப் புலன்களால் உணர்கிறாயோ அதை மட்டுமே உணர்:
எதை யோசிக்கிறாயோ அதை மட்டுமே யோசி.
ஆதாரம் ; ஜென் – நூல் – பக்கபம் – 148.

தகவல் ; ந.க.துறைவன். 

Thursday 19 January 2017

தவளை...!!




ஜென்   ஹைக்கூ.

ஒரு சிறு தவளை
வாழையில் பயணம் செய்கிறது
நடுங்கியபாடி.

ஜென் – நூல் – பக்கம் – 130.

Wednesday 18 January 2017

வரலாறு பேசும்...!! ( துணுக்கு )




1.
தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்குப் பிறகு தமிழர் கலாச்சார விளையாட்டான ஜல்லிக்கட்டிற்காக மாணவர்கள் தன்னெழுச்சியாக சினந்தெழுந்து போராடுவது இதுதான் முதல் முறையாகும்.
2.
தமிழர் கலாச்சார விளையாட்டான ஜல்லிக்கட்டிற்காகப் போராடும் அலங்காநல்லூர் மக்கள் பாராட்டுக்குரியவர்கள்.
மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசாத மக்கள் பிரதிநிதிகளான MP, MLA –க்களைக் கண்டித்து அலங்காநல்லூர் கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள்.  
இந்திய சுதந்திர்த்திற்குப் பிறகான வரலாற்றில் இப்படியொரு தீர்மானம் நிறைவேற்றி இருப்பது இதுவே முதன்முறையாகும்.
இத்தீர்மானம் மக்களின் அரசியல் வளர்ச்சியை, முதர்ச்சியைக் காட்டுகிறதென்றே கருதலாம்.
அதே நேரத்தில் இத்தீர்மான்ம் குறித்து அரசியல் கட்சிகள் பரிசீலனைச் செய்வது காலத்தின் அவசியாகும். எதிர்காலத்திற்கான எச்சரிக்கையாகும் இத்தீர்மானம் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

*

Tuesday 17 January 2017

எங்கே போகிறாய்...?

ஜென்
*
“ எங்கே போகிறாய்? ”

“ எங்கே மாற்றமில்லையோ எங்கே போகிறேன். ”

“ மாற்றமில்லைாத இடத்துக்கு எப்படி நீ போக முடியும்? ”

“ நான் போவது மாற்றம் இல்லாதது ”.

 ஆதாரம் ; ஜென் – நூல் பக்கம் – 106.

தகவல் ; ந.க.துறைவன்.

இரகசியப் பேச்சு...!! ( சென்ரியு )




TEA TIME  - டீ டைம்.

15.
இடையில் வந்து அமர்ந்தவரால்
சட்டென நிறுத்திக் கொண்டனர்
ரகசியப் பேச்சு.
*
Come and sit down
between the Dropped
Secret talks quickly.

*

Monday 16 January 2017

ஜென் கவிதை



நான் தனியே வந்தேன்
தனியே இறப்பேன்;
பகலிலும் இரவிலும்
தனியே உள்ளேன்.


  - குரு சென்கை.

Sunday 15 January 2017

பணம்...!! சூபி கதை )



ஒரு சூபி ஞானிக்குக் கொஞ்சம் பணம் கொடுப்பதற்காக செல்வந்தர் ஒருவர் வந்தார். ஆனால் ஞானி அதை வாங்கிக் கொள்ளவில்லை.
அவர் சொன்னார்.
“ எனக்கு உங்கள் பணம் தேவையில்லை. என்னிடம் ஒரே ஒரு நாணயம் இருக்கிறது ”.
செல்வந்தர் சொன்னார்.
“ அந்த ஒரு நாணயம் உங்களுக்கு எத்தனை நாளைக்கு வரும். அது மிகவும் அற்பமான தொகை ”.
ஞானி பதில் சொன்னார்.
“ என்னிடம் இருக்கும் இந்த ஒரு நாணயம் தீரும்வரை நான் உயிருடன் இருப்பேன் என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா? அப்படி உங்களால்  சொல்ல முடிந்தால் நீங்கள் கொடுக்கும் இந்தப் பணத்தை நான் வாங்கிக் கொள்கிறேன் ”.

ஆதாரம் ; சூபி கதைகள் – தமிழில் – யூமா வாசுகி – பக்கம் – 105 – 106.
தகவல்; ந.க.துறைவன்.

*

Saturday 14 January 2017

தமிழரின் அவலம்...!!



தமிழ்மொழி, தமிழர் கலாச்சாரம், பண்பாடு, தொன்மைங்கள், வரலாறு, என பல்வேறு தளத்தை அழித்தொழிப்பதென்றும், தமிழர்களின் முன்னேற்றத்தை அடக்கியாள்வதென்றும், அவனின் உணர்வுகளை துச்சமென தூக்கியெறிந்து ஊதாசீனப்படுத்தி, தடுத்து, தங்களுடைய கொள்கைக் கோட்பாடுகளை ஏற்கச் செய்வதென்றும் கங்கணம் கட்டிக் கொண்டு, தீவிரமாக இயங்கி வருகிறார்கள் என்பது .தெளிவாக உணர்ந்துக் கொள்ள முடிகின்றது.  சீரிய கொள்ளைக் கோட்பாடுகளற்ற அரசியல், ஆட்சியாளர்களின் சிந்தனைத் தெளிவின்மை,  மெத்தனப் போக்கே.  தமிழர்களின் இந்த அவலநிலைக்கு காரணம் என்று சொல்லலாமா?   எங்கு குறைபாடுகள் இருக்கின்றன என்று சிந்தித்துப் பார்க்க வேண்டிய தருணமல்லவா இது. இனி என்னதான் நடக்கப் போகிறது? நடக்கும்?.


ந.க.துறைவன்

Friday 13 January 2017

விடியல் ஒளி பிறந்தது...!! ( கவிதை )

விடியல் ஒளி பிறந்தது…!!


தைப் பொங்கல் பிறந்தது
மகிழ்ச்சி பொங்கி வழிந்து
புதிய ஆடைகள் வந்தது
குழந்தைகள் குலுங்கி சிரித்தது

போகியில் குப்பை எரிந்தது
மேளம் சத்தம் அதிர்ந்தது
துள்ளித் துள்ளி ஆட்டம் போட்டு
சிறுவர்கள் கூட்டம மகிழ்ந்தது.

உழவர் திருநாள் உதித்தது
உழைப்பின் பெருமை தெரிந்தது
நெல் மணிகள் அசைந்தது – புதிய
பானையில் பொங்கி வழிந்தது.

மாடு கன்று குளித்தது
ஆவாரம் மாலை அணிந்தது
கரும்பு கெடை நின்றது
உள்ளம் களித்து மிதந்தது.

இல்லம் எல்லாம் மணந்தது
பொங்கல் சோறு ருசித்தது
உறவுகள் ஒன்று சேர்ந்தது
உற்சாகம் பொங்கி மலர்ந்தது.

மரம் செடிகொடிகள் பூத்தது
காடு மலைகள் ஜொலித்தது
நாட்டு மக்கள் முகத்திலே - புதிய
விடியல் ஒளி பிறந்தது!!

விதையானவன்...!!


பொங்கல் நல்வாழ்த்துக்கள்...!!




தை  முதல்நாள் காலை வணக்கம் நண்பர்களே

அனைவருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்தக்கள்.

வாழ்க வளமுடன்.   -   ந.க. துறைவன்.

*

Thursday 12 January 2017

வாழ்க்கை...!!



1.
வாழ்க்கை என்பது முடிவற்ற தொடர்ந்து நடைபெறும் புதிய படைப்புச் செயல்பாடாகும். வாழ்க்கை என்பது இடைவிடாத புதிய படைப்புகளை உருவாக்கும் சக்தியாகும்.
2.
மனநிறைவு என்பது கொடுப்பதிலிருந்தும், பங்கிட்டுக் கொள்வதிலிருந்தும் கிடைக்கிறது. பறித்துக் கொள்வதிலிருந்து கிடைக்காது.
3.
மனிதர்கள் எப்பொழுதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள். எதிர்காலத்திலும் அப்படியே தான் இருப்பார்கள்.   
ஆதாரம் ; ஓஷோ வின் – காமம்…காமம்…என்ப  - நூல்.

தகவல்  ; ந.க.துறைவன். 

Wednesday 11 January 2017

புத்தகங்கள்...!!




1.
புத்தகத்தைப் பரட்டிப் புரட்டிப் பார்த்தாள் ஒரு வரி படித்துவிட்டு
உதடு விரித்து சிரித்தாள்.
2.
புத்தகங்கள் வாங்கி படிப்பதில் சுவாரஸ்யமில்லை. இரவல் வாங்கி படிப்பதில்தான் சுவாரஸ்யம் என்றாள்.
3.
அவள் படித்த இடத்தில் அடையாளமாக வைத்தாள். காதலன் போட்டோ.
4.
முக்கியமான கருத்தை கோடிட்டு படித்தாள். தோழிகளுக்குக் காட்டி சிரித்தாள்.
5.
புத்தக அடுக்கில் முக்கியமான புத்தகம் மட்டும் உட்புறம் வைத்தாள்.
6.
தேடிய புத்தகம் கிடைக்காமல் போனதால் தோழிகளைக் கேட்டு நச்சரித்தாள்.
7.
அவள் விரும்பி படிப்பது அவளுக்கு மட்டுமே தெரியும்.
8.
அவளொரு அழகிய புத்தகம்…!!


*

Tuesday 10 January 2017

புத்தகங்க்ள்...!!




1.
உணர்வுப் பூர்வமானது புத்தகங்களின் தொடு உணர்வு.

2.
புத்தகங்களை நான் பார்த்தேன்.
புத்தகங்கள் என்னைப் பார்த்தன
வாங்கியதைப் பார்த்துச் சிரித்தன.

3.
கூச்சப்படாமல் விரும்பித் தொட்டுப் பார்க்க அதிக
உரிமைக் கொடுப்பது புத்தகங்கள் மட்டுமே.

4.
குழந்தையைப் போல அவள் மார்பில் அணைத்துச் செல்கிறாள் புத்தகங்கள்.

5.

விரித்து வைத்து புத்தகங்களின் எழுத்தின் மீது ஆழ்ந்த விழிகள்  

6.

புத்தகங்கள் தருவது அறிவின் வழி ஆழ்ந்த மௌனம்.

ந.க.துறைவன்.

*

Sunday 8 January 2017

நீர்த்துளிகள் முத்தாட...!! ( ஹைபுன் )



பனிநீரில் இலையாட, குருவிகள் சிலிர்த்தாட. காற்றில் மலராட, நீர்த்துளிகள் முத்தாட, பசுக்கள் நடைபோட, கன்றுகள் பின் துள்ளாட, நடுங்கும் குளிரில் விடியற்காலை வெள்ளென வெளுக்கும் பொழுதில் விழித்தெழுந்தாயே மார்கழியே, உனை ஆண்டாள் துதிபாட, பக்தர்கள் பின்பாட, பனிசூழ்ந்த வெளியெங்கும் சூரியன் ஒளி பரப்ப, பறவைகள் படபடத்து எழுந்து பறக்க, பால்கறக்கும் பசுக்கள் நின்று புல்தின்று பால்சுரக்க, மாடுகள் வயலில் உழுது மணியசைக்க, உழவன் வயல் உழுது மனம்சலிக்க, பகல்போது துவங்கியது. கிராமம் தன்பணிகள் நிறைவேற்றிடவே விழிப்புற்று விழித்தெழுந்ததுவோ!!                            

குடிசைகளை நேசிக்கும்
கருணை உள்ளம் படைத்தவைகள்
மார்கழியில் மலரும் பூசணிகள்.

Friday 6 January 2017

உணர்வுகள்...!! ( சென்ரியு )

TEA TIME  -  டீ டைம்.
14.
ஒவ்வொரு மனிதனின்
ருசி உணர்வின்  வெளிப்பாடு
லைட்,  ஸ்ட்ராங் டீ
*
Each man Expression of
the sense of taste
Light, Strong Tea

*

Thursday 5 January 2017

நெருங்குகிறது அறுபதாவது நாள்...!!



நவீன டிஜிட்டில் பணப்பரிமாற்றத்திற்கு மாறுங்கள் மாறுங்கள் என்று நாளுமொரு அறிக்கை அழகாகச் சட்டையை மாற்றுவது போல வந்துக் கொண்டிருக்கின்றன. மக்கள் நிலைமையோ வங்கி வாசல்களில் பசியோடும் பட்டினியோடும் தினமும் நிற்கின்ற அவலநிலையே தொடர்கின்றன. ஐம்பது நாளில் தீரும் என்றார்கள் அறுபது நாளை நெருங்கிவிட்டது. இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கும் இதே நிலைதான் தொடருமோ ? அதற்கு மேலும் தொடருமோ, மக்களின் இந்த அவதி / இன்னல்கள் அந்த ராமனுக்கு தெரியுமோ? இல்லை ராவணனுக்கு தெரியுமோ?  தெரியாது. இந்திய சுதந்திரத்திற்கு பிறகு இவ்வளவு பெரிய பணநெருக்கடி நிலையை மக்கள் சந்தித்ததில்லை என்று பல பொருளியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். தற்போது, மக்கள் கொடூரமான பணவன்முறைக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதே உண்மையென நடைபெற்று வரும் சம்பவங்கள்  தெளிவாக எடுத்துரைக்கின்றன.
*

Sunday 1 January 2017

புதுவழி...!! ( கவிதை )




1.
மார்கழியில் எல்லாம் கழி
தையில் வரும் புதுவழி.
2.
வாழ்க்கைக்கு பணப் பரிமாற்றம்
காதலுக்கு மனப் பரிமாற்றம்.
3.
சாப்பிடும்போது பொறை ஏறியது
நினைத்தவள் யாராகயிருக்கும்?
4.
ஆதாரமாக எடுத்துக் கொள்வதில்லை
கொழுக்கட்டையின்  விரல்ரேகை
5.
பணமற்ற இந்தியா
அட்டைக்குள் முடங்கப் போகிறது

6.
சில்லறை இல்லை என்றுதான் சொல்கிறார்கள்
இருக்கிறதென்று யாரும் சொல்வதில்லை.
*
இருப்பவனுக்கு நெருக்கடி இல்லை
இல்லாதவனுக்குத் தான் நெரு்க்கடி.                
*

அட்டைகள் காலம்...!! ( துணுக்குகள் )




1.
கற்காலம் பொற்காலம்
இரும்பு காலம் சங்ககாலம்
இப்பொழுது
அட்டைகள் காலம்.
2.
1. Family Card 2. ID card
3. Voter card 4. Aadhaar card
5. Pan card 6. Debit card
7. Credit card 8. Visa Card
9. Passport Card. 10. Hospitai Card
11. Med.Card
( விடுபட்டிருந்தால் சேர்க்கலாம். )
அட்டைகள் ஆதிக்கம் செய்கின்ற காலம்.
3.
அட்டையிலிருந்து தான் பணம் சட்டைப் பைக்கு வரும்.
4.
பணம் பற்றாக்குறையால் திருமணங்கள் தள்ளி வைக்கப்படுகின்றன.
5.
இனி திருமணங்களில. உறவினர்கள் நண்பர்கள் ஸ்வைப்பிங் மிஷனில் மொய் பதிவு செய்வார்கள் / செய்தார்கள்.

*