Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Sunday 30 April 2017

விளைவுகள்...!!




1.
உலகத்தில் காரணம் இல்லாத சம்பவங்கள் கிடையாது. எல்லாச் சம்பவங்ளும் திட்டவட்டமான காரணங்களின் விளைவுகளே.
2.
அபிப்பிராயம் என்பது சிந்தனையின் ஒரு வடிவம்.
3.
பரிசோதனை என்பது ஒரு அறிதல் முறை.

ஆதாரம் ; இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?  - நூல்

தொகுப்பு ; ந.க.துறைவன்.

விடுப்பு...!! ( கட்டுரை )




ஒரு நாள் விடுப்பு வேண்டுமென்று கடிதம் எழுதி என் தலைமை எழுத்தரிடம் கொடுத்தேன்
அவர் கடிதம் வாங்கி படித்து விட்டு “ May be granted “ என்று எழுதி, தன் மேலதிகாரிக்கு அனுப்பினார்.
அவர் அக்கடிதத்தில் ” Not granted “ என்று எழுதி அனுப்பி விட்டார்.
மீண்டும் கடிதம் தலைமை எழுத்தரிடம் வந்தது.
அவர் என்னை அழைத்து உங்கள் விடுமுறை Grant – ஆக வில்லை என்று சொன்னார்.
“ என்னுடைய விடுமுறை Grant ஆக வில்லையா? ” ஏன்? என்று கோபமாகக் கேட்டேன்
அதற்காக சற்று நேரம் விவாதித்தேன். பிறகு
நான் தொழிற்சங்கச் செயலரிடம் தெரிவித்தேன்.
அவரும் அதிகாரியிடம் விவாதித்து. ” அவரின் ஒரு நாள் விடுப்பு நிராகரிக்க முகாந்தரமே இல்லையே ” என்று பேசி, அந்த விடுமுறையை பெற்று தந்தார்.
அதில் வேடிக்கை என்னவென்றால் “ Not Granted “ என்று எழுதிய அதிகாரி, அக்கடிதத்தை வாங்கி “ Not “ என்பதை அழுத்தி விட்டு, ‘ Granted “ என்ற வார்த்தையை டிக் செய்து கொடுத்தார்.
விடுமுறை கேட்ட நான் வருத்தமாய் அறைகுறை மனதோடு வெளியில் வந்தேன்.
அரசாங்கம் ஊழியர்களுக்கு கொடுக்கின்ற விடுமுறையை கூட இப்படி நிராகரி்த்து, ஊழியர்களை  வஞ்சிக்கிறார்களே  என்று மிகவும் வருத்தப்பட்டேன்.
இப்படித்தான் இன்னும் கூட பல அலுவலகங்களில் நடைப் பெற்று வருகிறது என்பதை அறியலாம். இதுதான் இன்றைக்கும் தொழிலாளர்களின் அவல நிலை.
குறிப்பு :
இது பொய்யல்ல. என் பணிக் காலத்தில் எனக்கு நடந்த மறக்க முடியாத ஒரு உண்மை சம்பவம். அவரும் இருக்கிறார். நானும் இருக்கிறேன். இன்று இருவருமே ஒய்வு பெற்று விட்டோம்.
ந.க.துறைவன்.

*

மே தினம்...!!


Saturday 29 April 2017

காயம்...!! ( கவிதை )




கல்லடிப் பட்டவளுக்கு
வெளியில் காயம்
சொல்லடிப் பட்டவளுக்கு
உள்ளில் காயம்
பொய் காயம் ஆறாது
மெய் காயம் ஆறும்
ந.க.துறைவன்.


சிக்கல்...!! ( கவிதை )




1.
உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசி
பழகி சிரித்து
கள்ள உறவாடினாள்
நூலறந்தப் பட்டமாய்
சிதைந்து வீழ்ந்ததொரு நாள்
மரக்கிளையில் சிக்கி….!!

ந.க.துறைவன். 

நம்பிக்கை...!!

ஆடு கசாப்பு கடைக்காரனை நம்புகிறது. 

நழுவல்...!! ( கவிதை )



அவள் நம்பிக்கை தான்
கை பிடிக்க வைக்கிறது
அதே கை தான்
என்றேனுமொரு நாள்
விலகி நழுவிப் போகிறது!

*

Wednesday 26 April 2017

“ நீரா ” பானம்....!! ( கட்டுரை )




தென்னை மரத்திலிருந்து கள் இறக்கி சாப்பிடுவதை இன்றைக்கும் கிராமங்களில் காணலாம். கள் இறக்கும் தொழிலில் பல கிராம மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அதொரு குடிசைத் தொழிலாக கருதப்பட்டு வருகின்றன.
தற்போது, அதே தென்னை மரத்திலிருந்து ” நீரா ” பானம் தயாரிக்க தமிழகஅரசு அனுமதி வழங்கியுள்ளது. இன்னும் மூன்று மாதங்களில் இப்பானம் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போதைப் பொருள் கிடையாது. சர்க்கரைச் சத்துக் குறைவானது. மக்கள் அனைவரும்
அருந்தக்கூடிய சிறந்த நீர்ப் பானமாக பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னை விவசாயிகளுக்கு பொருள் ஈட்டித் தரும் தொழிலாகவும் வளர்ச்சி பெறுவதற்கு பெரிதும் துணை செய்யும் என்று நம்புகிறார்கள்.  தொழில் வளர்ச்சிக்கு எது உதவியாக இருந்தாலும் அதனை வரவேற்கலாம்..

ந.க.துறைவன். 

தலைக்கு வந்நதது...!! ( கவிதை )



1.
குடியை எதிர்க்கிறார்கள் மக்கள்
குடியை ஆதரிக்கிறது மக்கள் அரசு.  
2.
உதிர்ந்த இலைகள்
ஒன்று சேருமா?
3.
தலைக்கு வந்த தொப்பி
தலைக்குள் மாட்டிகிட்டது.
4.
பல ஆண்டு காலமாக வேலியே
பயிர்களை மேய்ந்து வருகின்றன.
5.
எல்லா துறையும் தூய துறையல்ல
வல்லமை பெற்ற ஊழல் துறையே!
ந.க.துறைவன்.

*

Tuesday 25 April 2017

ஜோதிடம்...!! ( துணுக்கு )



தமிழக மக்கள் இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்கு இப்படியே தான் சகித்துக் கொள்ள வேண்டி வரும். அதற்குப் பிறகு அதிர்ச்சி தரும். அதற்கும் பிறகு தான் தேர்தல் வரும். மக்கள் என்ன புதுமையாக மாற்றம் செய்து விட போகிறார்கள் மீண்டும் குண்டு சட்டியில் குதிரை ஓடப் போகிறது?
குரங்கு ஜோதிடர் குல்லாசாமி.


Saturday 22 April 2017

வாசித்ததில் வசீகரித்தது...!! ( துணுக்குகள் )




1.
விழித்தெழுந்தால் வேறு ஒரு நாள்!
விழித்தெழாவிட்டால், அது எந்தத் தேசத்தில் எந்தக் காலத்தில்  எந்த நாள் என்று இன்னும் யாரும் கண்டு சொல்லி விடவில்லை.
2.          
மனிதத் தன்மையை இழக்காமல் சரித்திர சோதனைகளுக்குக் கெல்லாம் ஈடுகொடுத்துக் கொண்டு ஓர் இந்தியா நிற்கிறது. நூற்றுக்கணக்கான மாறுதல்களை, உருவம் அழியாமல ஏற்றுக் கொண்டு மீள்கிறது.
3.
மனிதன் பேச்சால் தான் வாழ்கிறான்.
4.
மனிதன் மனிதத்தன்மையை .இழக்காத எந்த இடமுமே புனிதமானது.
ஆதாரம் ; எழுத்தாளர் க.நா.சு – வின் – ஒரு நாள் – நாவல்.
தொகுப்பு ; ந.க.துறைவன்.  

*

Thursday 20 April 2017

சம்பந்தம்...!! ( கவிதை )



சம்பந்தம் இல்லாதவர்
சம்பந்தம் இல்லாததைப் பேசினார்
சம்பந்தம் உள்ளவர் அருகில்  
இல்லாமலேயே அவரைப் பற்றி பேசுவது
எனக்கு சம்பந்தம் இல்லையென்று சொன்னார்.
யாருக்கு எது சம்பந்தம் என தெரியாது?
இருவருமே. எந்த சம்பந்தம்
இல்லாத ஒன்றைப் பற்றி பேசினார்கள்.
சம்பந்தம் இருந்தவரை அவரைப் பற்றி
சம்பந்தப்பட்டவர்கள் இவ்வளவு
விளாவாரியாகப் பேசியது கிடையாது என்று
சம்பந்தப்பட்டவர் சொன்னார்.
சம்பந்தம் இன்றில்லை நேற்று இருந்தார்.
அது சம்பந்தமாகவே
அவர்கள் பேசினார்கள் என்று
சம்பந்தப்பட்டவர் சொன்னபோது தான்
சம்பந்தம் உள்ளது எல்லாமே புரிந்தது.
ந.க.துறைவன்.


Wednesday 19 April 2017

கார்ட்டூன்.


வாசித்ததில் வசீகரித்தது...!!



1.
உலகெங்கும் ஒரே மாதிரியான பதில் சொல்ல முடியாது. வென்றவர்கள் ஒன்று சொல்வார்கள். தோல்வியுற்றர்கள் வேறு சொல்வார்கள்.
க.நா.சு – ஒரு நாள் – நாவல் – பக்கம் – 17.
2.
ஏழாவது உடை.

“ உடல் உடையைப் போல, உயிர் அதை மாற்றி அணியத் தவிக்கிறது. ஒவ்வொரு முறையும் ஓர் உடை. இந்திய நம்பிக்கையின்படி ஏழு உடைகள். ஏழு முறை மாற்றி அணியப்படும் உடை. உடையைப் பற்றி மட்டும் அறிந்தவர்கள் உடையை அணியும் உயிரை அறிவதில்லை. உயிரின் ரகசியம் புரிந்தவர்கள் உடையைப் பற்றி கவலை கொள்வதில்லை ”.
-பிரேம் – ரமேஷ் – மகாமுனி – பக்கம் – 144.

Monday 17 April 2017

கண்கள்...!! ( கவிதை )




வெயில் படாமலிருக்க முகத்தை
மூடிக் கொண்டு பாதையைப் பார்த்து
வாகனத்தில் பறக்கிறாள்.
அவள் யாரென்று தெரியவில்லை
அவளாகத் தானிருக்குமோ? என்ற
சந்தேகம் வேறு மனதில் வலுத்தது.
கண்களை வைத்து எப்படிக் கண்டுபிடித்து
அழைப்பதென்று மனக் குழப்பம்.
பயத்தை நீக்கி தைரியமாய்
பெயர் சொல்லி அழைத்தான்.
அவள் சட்டென திரும்பி பார்த்தாள்.
அப்போதுதான் தெரிந்தது அவனுக்கு
கண்களுக்கு அழகை மறைக்கத்
தெரியாது என்கின்ற ரகசியம்.
ந.க.துறைவன்.

*

அஞ்சலி...!!

மறைந்த எழுத்தாளர் மா. அரங்கநாதன் அவர்கள்.

எனது அஞ்சலி.

ந.க.துறைவன்.

Sunday 16 April 2017

அஞ்சலி...!!



எழுத்தாளர் மா அரங்கநாதன் அவர்கள்
காலமானார் என்ற செய்தி அறிந்து 
வருந்தினேன்.அவருக்கு எனது ஆழ்ந்த 
இரங்கல் உரித்தாக்குகிறேன்.


ந.க.துறைவன்.

Saturday 15 April 2017

செயல்பாடுகள்...!! ( கவிதை )




1.
அத்தனைக்கும் ஆசைபடு
அதிகமானால் வேதனைபடு.
2.                       
உளறுபவன் என்று பெயரெடுத்தவனிடம்
உண்மை அறிய முடியாது.
3.
என்றேனும் ஒருநாள் நடந்து விடுகிறது
தள்ளிப் போன முக்கிய காரியங்கள்.
4.
செயல்படாதவர்கள் என்று எவருமில்லை
எல்லோரும் திறனோடு செயல்படுபவர்களே!
5.
எழுதுவதெல்லாம் விமர்சனத்திற்குட்பட்டது
எழுதாதெல்லாம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது.
6.
முற்றுப் பெறுவதில்லை
முரண்படாத வாழ்க்கை
ந.க.துறைவன்.


இங்கு தான் கொஞ்சம் குளிர்ச்சி தெரிகிறது.




Monday 10 April 2017

மாதுளம்பூ


தலைநகரில் விவசாயிகள்...!! ( செய்தி )



தமிழ்நாட்டு விவசாயிகள் டில்லியில் பல நாள்களாகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகளின் இந்தப் போராட்டம் வடமாநில விவசாயிகளின் காதுகளுக்கு எட்டவில்லையா? . அவர்களுக்கும் இதுபோன்ற பிரச்சினைகள் இருக்கத்தானே செய்கின்றன. அங்கிருக்கும் விவசாயிகள் சங்கம் என்ன செய்கின்றன? இது எதோவொரு மாநில விவசாயிகளின் பிரச்சினையாகப் பார்க்காமல் ஒட்டு மொத்த இந்திய விவசாயிகளின் பிரச்சினைகள் என்று ஏன் உணர்ந்துக் கொள்ள மறுக்கிறார்கள்? இதில் அரசும் இவ்வளவு பிடிவாதமாக இருப்பது என்பது வாக்களிக்கும் மக்களுக்கு செய்கின்ற துரோகமாகும் அல்லவா! இன்னும் எத்தனை நாளைக்கு விவசாயிகள் இப்படியே போராடுவார்கள்? தலைநகரிலிருந்து வேடிக்கைப் பார்க்கிறது இரக்கமில்லாத மத்திய அரசு

ந.க.துறைவன். 

Sunday 9 April 2017

நம்பிக்கை...!! கட்டுரை )




நம்பிக்கை என்பது எல்லோருக்குள்ளும் புதையல் போன்று குவிந்து கிடக்கிறது. அதன் வெளிப்பாடுகள் வெளியில் தெரிவதில்லை. அதனைப் புரிந்துக் கொள்வதிலும் மிகுந்த சிரமங்கள் இருக்கின்றன என்றும், அதனை நாம்தான் புரிந்து தேடிக் கண்டடைந்து செயல்படுத்துவற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் உளவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். மனிதர்களும் அதனைப் புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், ஏதோவொரு விதமான தயக்கம், முயற்சியின்மை ஆகின தடுத்து வைத்து மனவேதனைப் படுத்துகிறது. ‘ நம்பிக்கையோடு செயல்படு உன்னால் முடியும் ‘ என்று மேலாண்திறன் அறிஞர்கள் பலரும் பல்வேறு வழிகளில் மனிதர்களிடம் கூறி தன்னம்பிக்கையை விதைத்து உற்சாகப்படுத்துகிறார்கள்.


ந.க.துறைவன். 

Friday 7 April 2017

பிரபஞ்சமே கருப்பு தான்...!! ( துணுக்கு )



திருக்குறள் பரப்புவதாகவும், திருவள்ளுவருக்கு சிலை திறப்பதாகவும் அலைகழிக்க வைத்து எங்கோ ஓரிடத்தில் திறந்து வைத்து நாடகமாடிய தருண்விஜய், தமிழர்களையே கருப்பு என்று சொல்ல வைத்தது எது? எப்பொழுதும் ஆத்திரமூட்டும் பேச்சுக்கள் பேசுவதற்கு அனுமதிப்பது யார்? வட இந்தியாவில் வாழும்  எல்லோருமே வெள்ளையா? வெள்ளையன் எங்கே பிறப்பான்? கருப்பன் எங்கே பிறப்பான் என்று, புவியியல் படிக்காதவன் கூட சொல்வான். இதை கூட அறியாத ஒருவர் மத்தியில் அமைச்சராக இருக்கிறார். எப்படியோ தமிழர்களை அவமானப்படுத்தி குளிர் காய்கிறார்கள். ஆதாயம் தேட முற்படுகின்றார்கள்.

ந.க.துறைவன்.

வெயில் ஊரிலிருந்து...!! ( கட்டுரை )


*
கோடைக் காலத்தில் வேலூர் என்பதை வெய்யிலூர் என்றே அழைக்கப்படுகின்றது. அந்த அளவுக்கு வெப்பநிலை கடுமையாக இருக்கின்றது. ஒவ்வொரு வருடமும் வெப்பநிலைக் குறைந்தபாடில்லை. அதற்கேற்ற வகையில் இயற்கைச் சுற்றுச்சூழல் அமைந்திருக்க வேண்டும். பசுமையான மரங்கள், நீர்நிலைகள் அவற்றை ஓரளவுக்கு சமப்படுத்தும். இங்குள்ள பரந்த பாலாறு கடுமையாக வறண்டு காணப்படுகின்றது. நகரைச் சுற்றியுள்ள இடங்களில் ஏரிகள், குளங்கள் கூட மிக மோசமாக வறண்டுக் கிடக்கின்றது.
மேலும், கோடைகாலம் துவக்கத் தொடங்குவதற்கு முன்னரே, வெயில் தன் கோரமுகத்தை காட்டத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் சில நாள்களுக்கு முன்னர் சத்துவாச்சாரியில் உள்ள டபுல் ரோட்டில் உள்ள மரங்களை வேலூர் மாநகராட்சி ஊழியர்கள் வெட்டியெறிய ஆயத்தமான செய்தி அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக ஒன்று திரண்டு அம்மரங்களை வெட்டக்கூடாது என்று
முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர், அங்குள்ள மரங்களை வெட்டுவது தவிர்க்கப்பட்டது. நிறுத்தப்பட்டது.
பாதைகளிலும், வீடுகளின் முன்பும் இருக்கின்ற பசுமையான மரங்கள் தான் தற்போதைய வெப்பநிலைக் குறைப்பிற்கு சற்று ஆறுதல் தரக்கூடியதாக அமைந்துள்ளன. மரங்களை வளர்ப்போம் என்று விளம்பரம் போர்டுகள் ஒவ்வொரு அலுவலகத்திலும் வைத்திருக்கிறார்கள். ஆனால், அதே இடத்திலிருந்து தான் மரங்களை வெட்டியெறி என்கின்ற ஆணையும் வெளி வருகின்றன. என்னவொரு முரண்பாடான அரசின் நிலைப்பாடு. மனிதர்களுக்கு எதிரான செயல்பாடுகளில் மனிதர்களே ஈடுபட்டு வாழ்வதென்பது மிகக் கேவலமானதொரு செயல்பாடுகள். மரங்கள் உரம் தரும். உயிர் தரும் வளம் வரும் காப்போம். வாழவைப்போம்!!
ந.க.துறைவன்.

*

Thursday 6 April 2017

தொப்புள் கொடி...!! ( துணுக்கு )


*
தொப்புள் கொடி.

இந்த அறைக்குப் பக்கத்தில் உள்ள அறையில்தான் அவளது தலைப்பிரசவம் நடந்தது. அதோ அந்த மூலையில்தான் அந்த மூத்த மகளின் தொப்புள்கொடி புதைக்கப்பட்டது. முதன்முதலாக தாய்மையை உணரச் செய்த மகளைக் கையில் ஏந்தி உச்சி முகர்ந்தது இந்த அறையில்தான். ஏறக்குறைய அவளது எல்லாக் குநை்தைகளையும் இந்த அறையில்தான் பிசவித்தாள். அவளது எல்லாக் குழந்தைகளின் தொப்புள் கொடியும் இந்த அறையின் மூலைகளில் தான் புதைக்கப்பட்டு இருக்கின்றன. தன் அந்திமக் காலத்தில் ஆதரவாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் பத்துக் குழந்தைகளை, பத்து மனித உயிர்களை இந்த அறையில்தான் பெற்று எடுத்தாள். இன்று அந்த நினைவுகள் மட்டுமே சொந்தமாக, யாரும் இல்லாத தனிமரமாகப் பெற்றெடுத்த அந்தப் புனிதக் கருப்பையின் வெறுமையுடன் நிற்கிறாள்.
ஆதாரம் ; தடம் – மார்ச் – 2017 இதழ்.  -      இஸ்மத் சுக்தாய் – வேர்கள் – கதையிலிருந்து – பக்கம் – 90.

தகவல்;  ந.க.துறைவன்.  

இரவில் நீ...


இமைகள்...!! ( படம் )

உள் சோக மௌனம்
நெற்றி திலகம் புருவ இமைகள்
பளிச்சிட்டு மின்னிடும்
உ.ன் அழகின் வெளிபிரகாசம்
எனக்கான காதல் பிரதேசம்
ந.க.துறைவன்.


ஞானம்...!! ( கவிதை )



*
ஞானத்தைத் தேடி
நான் வந்தேன் என்று
வாசலில் நின்றிருந்தான்.
எந்த ஞானத்தைத் தேடி
வந்தாய் என்று கேட்டான்?
ஞானம் தெரியாது? உனக்கு
அவள் தான் ஞானம்.
எப்பொழுதும் கூடவே இருப்பாளே?
அவள் தான் ஞானம்.
இங்கே அப்படி எந்த ஞானமும்
இல்லையே? இருந்தாள்.
எனக்குத் தெரியும் அவள்
இங்கே தான் இருந்தாள்
நீங்க மறைக்கிறீங்க?
உனக்கென்ன பைத்தியமா?
பிடிச்சிருக்கு
இல்லாதவளை இருந்தாள்
என்று சொல்கிறாய்?அவள்
இங்கே எப்போது இருந்தாள்?
அவள் இருந்தாள் தானே
நீயிருக்க முடியும்?
நானிருக்க முடியும்?
அவளைப் போய் அப்பட்டமாய்
இல்லையென்று சொல்கிறாயே?
என்னுடன் எப்பொழுதுமே
உடனுறைந்திருக்கிறாள்
என் ஞானம். அவளே மோனம்.

ந.க.துறைவன்.

*

Wednesday 5 April 2017

இரவில் நீ...!! ( கவிதை )



இரவில் நீ…
வெகு மும்முரமாய் இருந்தாய்
கற்ற இவ்வுலக அறிவைத் தொலைத்துக் கொள்வதில்
வெகுதொலைவிலிருந்து
உனது விரல் வரைந்து காட்டிது
அந்த உறைபனிக்குகையை
கடல்களின் இசை வரைபடத்தை
எழுதினாய் நீ.
உன் செவியின் கூட்டில் அதன் ஸ்வரங்கள் இணநை்தன.
சொற்களைச் செங்கற்கள் போல் அடுக்கி – ஒரு பாலம்
பதிரைக் கடப்பதற்கு.
சொர்க்கமும் புவியும்
சேர்த்துகட்டிய பாலம்.
நெல்லி சாக்ஸ். – கவிதைகளின் ஆங்கிலம் வழி மொழிபெயர்ப்பு , ஆசை.
ஆதாரம் ; தி இந்து – பெண் இன்று – பகுதி – 02-04-2017.

தகவல் ; ந.க.துறைவன்.

பரிசு...!! ( படம். )