தென்னை
மரத்திலிருந்து கள் இறக்கி சாப்பிடுவதை இன்றைக்கும் கிராமங்களில் காணலாம். கள் இறக்கும்
தொழிலில் பல கிராம மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அதொரு குடிசைத் தொழிலாக கருதப்பட்டு
வருகின்றன.
தற்போது,
அதே தென்னை மரத்திலிருந்து ” நீரா ” பானம் தயாரிக்க தமிழகஅரசு அனுமதி வழங்கியுள்ளது.
இன்னும் மூன்று மாதங்களில் இப்பானம் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போதைப் பொருள் கிடையாது. சர்க்கரைச் சத்துக் குறைவானது. மக்கள் அனைவரும்
அருந்தக்கூடிய
சிறந்த நீர்ப் பானமாக பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னை விவசாயிகளுக்கு
பொருள் ஈட்டித் தரும் தொழிலாகவும் வளர்ச்சி பெறுவதற்கு பெரிதும் துணை செய்யும் என்று
நம்புகிறார்கள். தொழில் வளர்ச்சிக்கு எது உதவியாக
இருந்தாலும் அதனை வரவேற்கலாம்..
ந.க.துறைவன்.
அருமை
ReplyDelete