Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Sunday 21 April 2019

விழிப்பு

விழிப்பு 1. உபதேசமற்ற மௌனம் ஆழ்ந்த விழிகளில் விழிப்பு சூன்யவெளிக்கு அப்பால் மனம். 2. அரச இலைகள் அசைந்து அசைந்து பௌர்ணமி நிலவொளி நிழல் புத்தனின் மௌனம் எங்கும் வியாபித்து... 3. யாருமில்லாத குகைக்குள் யாரோ இருந்தார்கள் இன்றுவரை அங்கு யாருமில்லை. 4. நேற்று என்னைக் காண வந்தார் அப்பொழுது அங்கில்லை நான் இன்று வருவாரோ புத்தன். ந க துறைவன்.

Friday 19 April 2019

பௌர்ணமி

சித்திரா பௌர்ணமி நாளில்
சித்ரகுப்தன் சந்நதியில் ஆஜராகி
மக்கள் தரிசனம்.

இன்று சித்ரகுப்தன் ஓய்வாய்
கணக்கு எழுதுவதை நிறுத்திவிட்டு
மக்களை ஆசிர்வாதிக்கிறார் மௌனமாய்...

ந க துறைவன்.

Tuesday 9 April 2019

மனுஷி

மனுஷி 1. சாந்தமான முகத்தில் ஒளி வனதுர்க்கையின் ராகு கால தரிசனம் அக்கணம் அழியுமோ ஆணவம். 2. ஆண்மைத் திமிரில் அட்டகாசம் நெருங்கிய காமுகர்களைத் தனித்து வதம் செய்தாள் மகிஷாசுரமர்த்தினி. 3. காமவெறி பிடித்த மிருகங்கள் போரில் வென்று வீழ்த்தினாள் உக்கிர மகரிஷியின் சூலத்தின் கீழ் அசுர பிணம். 4. அசுர ஆணவத்தை அழித்தாள் பெண் குலத்தைக் காத்தாள் கற்பு காத்த கனகதுர்க்கை. 5. துஷ்டர்களை அழித்த கை துக்கத்தை ஒழித்த கை பெண்மை காத்த துர்க் கை. 6. வானுக்கு அப்பால் பூமிக்கு அப்பால் உள்ளவளே என்னுள் நீயே ஆன்மாவாய்... 7. ரத்த பீஜர்கள் சிந்திய ரத்தத் துளிகள் பட்டுத் தெறித்த ஈரம் துர்க்கையின் சிவப்பு ஆடை. 8. வன்கோபம் தணித்து மோனம் அடையாளமாய் ரத்தத்துளிகள் அணிந்தாள் நெற்றி திலகம். 9. அசுர கணங்களுக்கு அவள் உக்கிரதேவி உபாசகர்களுக்கு அவள் வாக்தேவி எனக்கு அவளே இஷ்ட தேவி. 10. அசுர கணங்களுக்கு அவள் மகிஷி மங்கையர் குலத்திற்கு அவள் மனுஷி. ந க துறைவன்.

Friday 5 April 2019

தனிமை

மூன்று தலைமுறையாய் ஏரிக்கரையில் கம்பீரமாய் நிற்கிறது ஒற்றை பனைமரம். ந க துறைவன்.

வரவேற்பு

பூ, காய், பழமென

வேம்பு பூத்துக்குலுங்குகிறது

தமிழ் புத்தாண்டு வரவேற்று...

ந க துறைவன்.

பாதை

இன்றைய எட்டு வழிச் சாலைகள்
கடந்த கால மனிதன் நடந்து
பழகிய ஒற்றையடி பாதை.

ந க துறைவன்.