Labels

Haiku (3) photo (2) Thought (4) Thoughts (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருள் உரை. (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (20) கலை (1) கவிதை (332) கவிதை. (7) கவிதைகள். (7) கஜல் (17) கிராமியக் கதை (2) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (2) குறுங்கவிதைகள் (12) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர்பாடல் (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (5) செனரியு (24) சென்ரியு (38) சென்ரியு. (14) சென்ரியூ (99) துணுக்கு (96) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நல்வாக்கு. (1) நன்னெறி. (3) நீதிநெறி (1) படம் (66) பரேகு ஹைக்கூ (4) பழமொழி (2) பாடல் (1) புதுக்கவிதை (231) பொது அறிவு (12) மரபு (18) முல்லா கதை (11) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (21) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துக்கள் (36) விமர்சனம் (2) ஜென் (1) ஜென் கதை (12) ஹைக்கூ (342) ஹைக்கூ. (55) ஹைபுன் (48)

Saturday, 31 May 2014

எல்லாமே ஒரே நிறம்...!! [ ஹைக்கூ ].


*
Na.Ga. Thuraivan's Haiku.
*
அச்சுறுத்துகிறது அச்சம்
விடுதலைப் பெற துடிக்கிறது
சாதுர்யமாய் மனம்.
*
வேண்டுவது வேண்டாமென
பொய்யாய் உரைக்கிறது
சஞ்சலமாய் சபலம்.
*
பார்ப்பதெல்லாம் நிறமல்ல
நிறம் பலவாயினும்
எல்லாமே ஒரே நிறம்.
*

   

Friday, 30 May 2014

பெருந்தன்மை...!! [ கவிதை ].


*
அம்மாவை மீறி
அப்பா எதையும் செய்வதில்லை
அப்படியே செய்தாலும்,
அம்மாவிடம்
பக்குவமாய்ச் சொல்லிச்
சமாளித்துக் கொள்வார்.
சமாளிப்பது
அப்பாவின் சாதுர்யம்.
விட்டுக் கொடுத்துப் போவது
அம்மாவின் பெருந்தன்மை.

*

கோபம்...!! [ ஜென் கதை ].

*
பாங்கே [ BANKEI ] என்ற ஜென் மாஸ்டரிடம் ஒரு ஜென் மாணவன் வந்து ” மாஸ்டர், என்னிடம் அடக்க முடியாத கோப உணர்வு இருக்கிறது. அதை நான் எப்படிச் சரி செய்வது?” என்று கேட்டான்.
அதற்குப் பாங்கே, “ உன்னிடம் ஏதோ மிகவும் வித்தியாசமான ஒன்று இருக்கிறது. அதுதான் கோபம்! எங்கே அதைச் சற்று என்னிடம் காட்டு பார்க்கலாம்.” என்றார்.
” இப்பொழுது என்னால் அதை உங்களுக்குக் காட்ட முடியாது் ”
“ எப்பொழுது அதை என்னிடம் காட்டமுடியும்? ”
“ அது தானே எதிர்பாராது மேலே கிளம்பும். ”
“ அது உண்மையானது என்றால்,  அது இயல்பானது என்றால், எந்தச் சமயத்திலும் அதை என்னிடம் உன்னால் காட்ட முடியும். நீ பிறந்த போது, அது உன்னிடம் இருந்தது இல்லை. அதே சமயம் அதை உன்னுடைய பெற்றோர்களும் உன்னிடம் கொடுத்தது இல்லை. நன்றாக யோசனைப் பண்ணிப்பார். ” என்றார்.
கோபம் என்பது எதிர்ப்பார்ப்பதில்லை. ஏமாற்றத்தில் விளைந்த ஒரு பின்செயல் [ REACTION ]. எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிகிறது. ஏமாற்றத்திலிருந்து கோபம் உண்டாகிறது.
*\
ஆதாரம் :-  “ 100 ஜென் கவிதைகள் ” – என்ற நூலிலிருந்து.
*   .      


Thursday, 29 May 2014

வலியைப் பொறுத்தவர்...!! [ கவிதை ]


*  
புவியில் எங்கேனும் உண்டோ?
வலியில்லாத உயிரினங்கள்.
*
வலியை உணர்த்துகிறது
நரம்புகள் வழியே மூளை.
*
வலியைப் பொறுத்தவர்
மனதை ஆள்வார்.
*
வலி தான் இன்பம்
இன்பம் தான் வலி்
*
கிள்ளினால் வலி பொறுக்கும்
பிறகு தான் கையில் பூ கிடைக்கும்.
*
வலியைக் கட்டுப்படுத்தும் மருந்து
மனைதைக் கட்டுப்படுத்தும் அமைதி.

*  

வலியைப் பொறுத்தவர்...!! [ கவிதை ].


*
Na.Ga. Thuraivan's Haiku.

புவியில் எங்கேனும் உண்டோ?
வலியில்லாத உயிரினங்கள்.
*
வலியை உணர்த்துகிறது
நரம்புகள் வழியே மூளை.
*
வலியைப் பொறுத்தவர்
மனதை ஆள்வார்.
*
வலி தான் இன்பம்
இன்பம் தான் வலி்
*
கிள்ளினால் வலி பொறுக்கும்
பிறகு தான் கையில் பூ கிடைக்கும்.
*
வலியைக் கட்டுப்படுத்தும் மருந்து
மனைதைக் கட்டுப்படுத்தும் அமைதி.

*  

காற்றை நேசித்து...!! { ஹைக்கூ }.

*
Na.Ga.Thuraivan's Haiku.
*

காற்றை நேசித்து
உறவு கொள்கின்றன
பசுமையான மரங்கள்.
*
சுற்றுச் சூழல் மாசு
மாநாட்டில் விவாதித்தன
சிட்டுக் குருவிகள்.
*
பெட்ரோல், டீசல் கக்கும்
நச்சுப் புகை எதிர்த்து
போராடுகின்றன காற்று.
*
தடுமாறி திரிகின்றன
வழி தவறிவிட்டு
தவிக்கும் பறவைகள்.
*
அடர்வனத்தில் தேடல்
துப்பாக்கிச் சூட்டில்
புள்ளிமான்கன் மரணம்.
*Tuesday, 27 May 2014

நாய்க் குட்டி..!! { சென்ரியு }.

*
Na.Ga.Thuraivan's Senryu.
*
தாய்ப்பால் நினைவோடு
அம்மன் சிலையைப் பார்த்து
அழுகை நிறுத்தியது குழந்தை.
*
தாய்ப்பால் கேட்டு
அழுவதில்லை
பால்காரியின் குழந்தை.
*
கன்று பால் குடிப்பதை
அருகில் நின்று பார்க்கிறது
நாய்க் குட்டி.  


Monday, 26 May 2014

ஈச்சங்குலை...!! { கவிதைகள் }

*
பிரச்சினையைப் பேசினாள் மகள்
கீரையை அலசினாள் தாய்.
*
பேரம் பேசி வாங்கிளாள் வீட்டம்மா
கஷ்டத்தைக் கூறி ஆதங்கப்பட்டாள் கீரைக்காரி.
*
கலகமூட்டாமல் போவதில்லை
வெளியூரிலிருந்து வரும் உறவினர்கள்.
*
கடன் கொடுத்தவன் வாங்க அலையிறான்
கடன் வாங்கியவன் கொடுக்க திணறுகிறான்.
*
வீட்டை அழகுப் படுத்துகின்றன
தவணையில் வாங்கிய பொருட்கள்
*


Sunday, 25 May 2014

நீரில் அலையும் மீன்கள்...!! { ஹைக்கூ }.

*
Na.Ga. Thuraivan's Haiku.
*
நேரம் தவறாமல் தினமும்
வணங்குகிறது சூரியனை
சூரிய காந்திப் பூ.
*
தன் நிழலை நீரில்
தானே பார்க்fகிறது
தாமரைப் பூ.

*
வண்ணங்களால் அழகு செய்து
பெண்களை ஈர்க்கிறது
மருதாணி.

*
நீரைத் தூய்மை செய்கிறது
அழுக்கைத் தின்று
நீரில் அலையும் மீன்கள்.

*
திருமண மேடையை பளிச்சென
அழகு செய்கிறது
காகிதப் பூக்கள்.
*
   மஞ்சள் வெயில்...!! [ புதுக்கவிதை }


*
மழை நின்ற பின்
அழகாகவிருந்தது
அந்தி
மஞ்சள் வெயில்
*.
கூடு திரும்பின
இரைதேடி அலுத்தப்
பறவைகள்.
ஆடுகள் மாடுகள்
வீடு திரும்பின
பொழுதோடு
மேய்ந்து வயிறு
நிரம்பிய திருப்தியோடு,
*
வேலைக்குச் சென்றவர்கள்
களைப் போடுத் திரும்பினார்கள்
தேவையானப் பொருட்களை
வாங்கிச் சுமந்து
இரவு உணவு சமைப்பதற்கு,
*
மழை வரும் போல
மேகமூட்டம்
விலகவில்லை இன்னும்,
மழையில் நனைந்து
சுகிக்கலா மென்று
எதிப்பார்த்திருக்கின்ற
மௌன மரங்கள்.
*
விடிய விடிய
பெய்து தீர்த்தது
நள்ளிரவு
தொடங்கிய மழை…!!.
*


Friday, 23 May 2014

குசும்பு பேச்சு...{ ஹைக்கூ ].

*
Na.Ga. Thuraivan's Haiku,
*
நிர்மலமான பரந்த ஆகாயம்
எண்ணங்கள் கடந்த மனம்
வார்த்தைகளற்ற மௌனம்.
*
விசும்பை எட்டும்
குசும்புப் பேச்சு
கலக மொழி.
*
யார் வெறுத்தாலும் சரி
என்னைக் கவரும் அழகு நிறம்
காக்கையின் கருமை.
*
சொல்லடி படுவான் மனிதன்
கல்லடி படுவான்
கனி தரும் மாமரம்.
*
குறைந்தால் குறைபடுவார்கள்
மிகுந்தால் சபிப்பார்கள்
மண்ணில் இறங்கும் மழை.
*


ஓரக்கண்ணால் பார்க்கிறார்...!! { கவிதை }

*
செடியின் நிழலில் காதலர்கள் பேசுவதைக்
காது கொடுத்து கேட்கிறது பூக்கள்.
*
உட்கார்ந்திருக்கும் இளங் காதலர்களை
ஓரக்கண்ணால் பார்க்கிறார் சர்வர்.
*
சுடிதார் தேர்வு செய்கிறான் காதலன்
சிரித்தபடியே எடுத்துப் போடுகிறார் முதியவர்.
*
பிரவுசிங் சென்டரில் கொஞ்சம்
நேரங்கழித்தனர் காதலர்கள்.
*
பஸ் விட்டிறங்கியதும்
பாதையில் பிரிந்தனர் காதலர்கள்.

*  

புகழ்ந்து பேசினால் மனைவி...!! { சென்ரியு }

*
பூனை நாய்க்கு நுழைய
அனுமதியில்லை
வீட்டின் பூசை அறைக்குள்.
*
சமையல் அறையில் எப்பொழுதும்
காவலிருக்கிறது
கருப்புப் பூனைக் குட்டி.
*
தாத்தா பாட்டி அறைக்குள்
யாரும் செல்லக் கூடாது
தடையை மீறும் பேரன்.
*
ஜவுளிக் கடையிலிருந்து
வெளிவரவே மனசில்லை
வண்ணத்துப் பூச்சிகளுக்கு.
*
மனைவியின் சமையலைப் பாராட்டினான்
ஒட்டல் சாப்பாட்டைப்
புகழ்ந்துப் பேசினால் மனைவி.

* .

Thursday, 22 May 2014

இயற்கையே வெல்கிறது...!! [ புதுக் கவிதை }


*
தாய் தந்தையரின்
உயிர்த் துளிகள் தானே
நீங்களும் நானும்
மற்றவர்களும்,
மரணம் என்பது
கரு உருவாகும்போதே
ஆயுளை நிர்ணயித்துக் கொள்கிறது.
மரணம் என்ற வார்த்தையிலேயே
வாழ்வின் பரிபூரண
மணம் இருக்கிறது.
மரணம் என்ற வார்த்தையிலேயே
உறவின் உறுத்தல்களால் ஏற்படும்
ரணம் இருக்கிறது.
மரணம் என்ற வார்தை்தையிலேயே
இயற்கைச் சார்ந்த
நீள் ஆயுளோடு வாழும்
” மரம் ”
உள்ளடங்டகியிருக்கிறது.
எத்தனை எத்தனை வார்த்தைகளை
உள்ளிணைத்துக் கொண்டு
மனித வாழ்வின் இறுதி
நாளினை நகர்த்துகிறது… மரணம்.
மரணத்திடம்
மருத்துவ விஞ்ஞானம்
தோற்றுப் போகிறது.
இறுதியில்
இயற்கையே வெல்கிறது.
நம்
அழுகுரல்
இயற்கைக்கும்
கொஞ்சமாவது புரியுமா?
*

  

Wednesday, 21 May 2014

வற்றிய அணையில்...!! [ ஹைக்கூ ].

*
கோபுரமும் சிலைகளும்
அழகாய் இருந்தன
வற்றிய அணையில்..
*
புரிந்துக் கொள்ள முடியாவிட்டாலும்
கேட்கத் தூண்டும்
பறவைகளில் கிசுகிசுப்பு.
*
பேரூந்து இரைச்சலிலும்
கேட்கத் தூண்டும்
குருடனின் குழலிசை.
*
ஆதாரம்;- கவிஞர். நா.வே. குமாரின்
“ நீ காதலாய்.. நான் கவிதையாய…. என்ற நூல்.ள

*

மரத்தில் மறைந்தது...!! { கவிதை }.

*
மரத்தில் மறைந்தது மாமதயானை
வெட்டி எறிகிறான் மாமனிதன்.
*
மனிதன் நிலை குலைகிறான்
நிலம் நடுங்கம்போது…
*
பட்டினத்தார் பாடல்கள் எல்லாம்
பாலியல் துயரப் பாடல்கள்.
*
விதியை வகுத்தவன்
விதி வலைக்குள் விழுகிறான்.
*
தத்துவம் மனிதனுக்கு
மனிதனுக்குள் தத்துவமில்லை.
*


Tuesday, 20 May 2014

நிழலைத் தேடி...!! [ சென்ரியு }.

*
Na.Ga. Thuraivan's Senryu.
*
துளி மழையில்லை
மின் விளக்கில்லை
வெறுப்பில் தெரு நாய்கள்.
*
வெயில் புழுக்கம் அனல்
நிழலைத் தேடி வெளியில் வந்தன
பயமுறுத்தும் பூரான்கள்.
*
தென்னம் பிஞ்சுகளைத் தொட்டு
விளையாடி ஓலை நிழலில்
திரிகின்றன அணில்கள்.
*


கிராமத்து வாடை...!! { லிமரைக்கூ }.

*
Na. Ga. Thuraivan's Limaraiku.
*
கருமலையோ மிக உயரம்
அழகுப்படுத்துகிறது நெட்டையான
ஒற்றை பனைமரம்.
*
பேச்சில் கிராமத்து வாடை
வியாபாரம் செய்ய வந்தவள்
தலையில் தயிர் கூடை.
·          
யாரோ ஏற்படுத்திய சினம்
பொறுத்தக் கொண்டான். எப்படியோ?
அமைதியடைந்தது மனம்.
ஒவ்வொரு மனிதனும் ஒரு ரகம்
ருசியாய் விரும்பிக் கடித்துச் சிலர்
சாப்பிடுவதோ விரல் நகம்.
*
நடப்பதற்கு ஏனிந்தச் சிக்கல்
காலை உறுத்தியது
காலணிக்குள் சிக்கிய சிறுகல்.
*


Monday, 19 May 2014

சிரித்தார் நந்தி...!! {ஹைக்கூ }.

*
Na.Ga. Thuraivan's Haiku.
*
காதில் குசுகுசு வென்று
பிரார்த்தனையைச் சொன்னார்கள்
மௌனமாய் சிரித்தார் நந்தி.
*
புற்றில் பால் முட்டை ஊற்றி
பூசை செய்தார்கள்
குடிச்சிருக்குமோ பாம்புகள்.
*
பக்திப் பிரார்த்தனையோடு
இடுப்பில் குழந்தை
தலையில் பால்குடம்.

*

ஐ - க்கூ மின் இதழ் அறிமுகம்.


*
“ கவிச் சூரியன் ” 
மே – 16-31 – 2014.
*
இவ்விதழில், சர்வ தேச தினங்களான
1. உலகப் புகையிலை எதிர்ப்பு தினம்.
2. உலகத் தொலைத்தொடர்பு தினம்.
3. உலகத் தொழுநோயாளர் தினம்.
4. வன்முறை எதிர்ப்பு தினம்.
*
ஆகியவற்றைச் சார்ந்த ஐக்கூ கவிதைகள், கவிஞர்களின் கண்ணோட்டத்தில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அரசியல் மாற்றத்தினை வரவேற்று, தனது கருத்தினை நம்பிக்கையோடு முன் வைத்துள்ளார் ஆசிரியர்.
கவிவேந்தர். வேழவேந்தன், நூல் அறிமுகம், சுவடுகள், எண்ணக்கதிர்கள் பகுதிகள் சிறப்பாகவிருக்கின்றன. “ கவிச் சூரியன் ” –16-31- மே- 2014 ஐக்கூ மின் இதழ் தயாரிப்புப் பணி மிக மிக நேர்த்தியிருப்பது பாராட்டுக்குரியதாகும்.  
*
பாராட்டுக்கள்… வாழ்த்துக்கள்.. 
*
நன்றியுடன்,
ந.க. துறைவன், வேலூர் – 632 009.
செல் : 9442234822 / 8903905822.
*


Friday, 16 May 2014

டீச்சரைப் பார்த்ததும்...!! { கவிதை }.

குழந்தையின் சிரிப்போ
செம்பருத்திப் பூ சிரிப்பூ.
*
திருவிழாவுக்குப் போய்
சிரித்து வந்தார்கள் குழந்தைகள்.
*
எப்பொழுதும் குழந்தைகளோடு
துணையிருக்கிறாள் பாட்டி.
*
ஓட்டலில் டீச்சரைப் பார்த்ததும்
மெல்ல சிரித்தது குழந்தை.
*
பாய்ந்துப் போய்ப் பிடித்தது குழந்தை
பஸ்ஸில் சன்னலோரம் சீட்.Thursday, 15 May 2014

ஆலமரத்தடியில்...!! { சென்ரியு }.

*
Na,Ga. Thuraivan's Senryu. 
ஆலமரத்தடியில்
வெயிலுக்கு காற்றோட்டமாய்
விளையாடுகிறார்கள் தாயம்.
*
சுற்றுலா பயணிகளை
வேடிக்கைப் பார்க்கின்றன
ஊட்டி மலர்கள்.
*
தொப்பியை எடுத்துவிட்டார்
வழுக்கைத் தலை
முழுக்க வியர்வை.
*
அனல் புழுக்கம் தாங்காமல்
செடியின் புதருக்குள்
தூங்குகிறது முயல்.
*
கோடை மழைக் காற்றுக்கு
முறிந்து விழுந்தது
முருங்கை மரம்.

*

Wednesday, 14 May 2014

அலைகிறான் கருடன்...!! { ஹைக்கூ }

*
எவற்றோடும் எவரிடமும்
தொடர்பு கொள்கிறேன்
டெலிபதியில் நினைத்த போது….!
*
அங்கு வாழ்கின்ற பல்லி
வௌவால்களுக்குத் தெரியம்?
கோயிலின் நூற்றாண்டு ரகசியம்.
*
அடியும் முடியும் இன்னும்
காணாமல் தேடித் தேடி
அலைகிறான் கருடன்.
*
தேவர்களுக்கு மனக் கலக்கம்
என்ன நிகழுமோ வென்ற பயம்?
நாரதன் வருகை அறியும் போதே….!.

*

Monday, 12 May 2014

இளையராஜாவுக்கு ஈ மெயில்...!! { கவிதை }.


*.
எங்கோ மின்னுகிறது?
மழையில்லை இங்கே…
*
இளையராஜாவைப் பாராட்டி
ஈ மெயில் அனுப்பியது குயில“.
*
ஐஸ்கிரீம் சாப்பிட்ட குழந்தையின்
உதடெல்லாம் வெண்மை.
*
குடிநீர் விற்பனையில்
உலக சாதனை.
*
பாதையில் போனவர்கள் வேடிக்கைப்

பார்த்தார்கள் சவ  ஊர்வலம்.

Friday, 9 May 2014

ஊரில் திருவிழா...!! { கவிதை }.


*
உங்க ஊரு
திருவிழாவுக்கு
அழைத்துப் போ
தம்பி !.
*
தீமிதி வைபவத்தை
கிட்ட நின்னுப் பார்க்கணும்
திரௌபதி கூந்தல்
முடித்து அக்னி
மடியேந்தும் காட்சியை
அருகிருந்துப் பார்க்கணும்
எனைக் கரம்பிடித்து
அழைத்துச் சென்று
அத்தனையும் காட்டு தம்பி.!.
*
வாணவேடிக்கை
கொஞ்சம்
தொலைவிலிருந்துக் 
காட்டு தம்பி !.
*
வெப்பம், புழுக்கம்
போக்கிடவே
சில்லுன்னுக்
கோலி சோடா ஒண்ணு
வாங்கி கொடு தம்பி !.
*
பஞ்சு மிட்டாய் பொரிகடலை
சவ்வு மிட்டாய் கரும்பு சாறு
வாங்கி கொடு தம்பி !.
*
பாம்புத் தலைப்
பெண் அழகைப் பார்க்கணும்
எங்கிருக்கோ அங்கே
அழைத்துப் போ தம்பி !.
*
ரங்கராட்டினம் ஏறி
குதிரையிலே
சவாரிப் போகணும்
ஏற்றிவிடு தம்பி !
*
இராத்திரிக்குக்
கரகாட்டம் மயிலாட்டம்
பார்ப்பதற்குத்
துணையிருப்பாய் தம்பி !.
*
திரௌபதி சபதம்
முடிச்ச கடைசித்
தெருக்கூத்துப்
பார்த்துக் களிக்கணும்
பாட்டைக் கேட்டு
ரசி்க்கணும் தம்பி.
கட்டியங்காரன்
நகைச்சுவையைக்
கேட்டு சிரிக்கணும்
தம்பி.!..
*
ஆகா, விடிய விடிய
கூத்துப் பார்த்து
அசந்துத் தூங்கிட்டேன்
ஊருக்குப் போவதற்கு
எத்தனை மணிக்கு
பஸ் தம்பி !.
*
- { தம்பி கவியருவி. ம. இரமேசுக்கு.}

*