குழந்தையின் சிரிப்போ
செம்பருத்திப்
பூ சிரிப்பூ.
*
திருவிழாவுக்குப்
போய்
சிரித்து வந்தார்கள்
குழந்தைகள்.
*
எப்பொழுதும் குழந்தைகளோடு
துணையிருக்கிறாள்
பாட்டி.
*
ஓட்டலில் டீச்சரைப்
பார்த்ததும்
மெல்ல சிரித்தது
குழந்தை.
*
பாய்ந்துப் போய்ப்
பிடித்தது குழந்தை
பஸ்ஸில் சன்னலோரம்
சீட்.
No comments:
Post a Comment