Labels

Haiku (2) photo (2) Thought (4) Thoughts (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருள் உரை. (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (1) கருத்து (10) கலை (1) கவிதை (315) கவிதை. (6) கவிதைகள். (2) கஜல் (17) கிராமியக் கதை (2) குறுங்கவிதை (1) குறுங்கவிதைகள் (1) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சுற்றுலா (1) சூபி கதை (1) செய்தி (2) செனரியு (24) சென்ரியு (38) சென்ரியு. (14) சென்ரியூ (99) துணுக்கு (93) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நல்வாக்கு. (1) நன்னெறி. (3) படம் (54) பரேகு ஹைக்கூ (4) பழமொழி (2) பாடல் (1) புதுக்கவிதை (231) பொது அறிவு (12) மரபு (18) முல்லா கதை (11) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (21) வணக்கம் (1) வாழ்த்துக்கள் (35) விமர்சனம் (2) ஜென் (1) ஜென் கதை (12) ஹைக்கூ (338) ஹைக்கூ. (6) ஹைபுன் (48)

Friday, 9 May 2014

ஊரில் திருவிழா...!! { கவிதை }.


*
உங்க ஊரு
திருவிழாவுக்கு
அழைத்துப் போ
தம்பி !.
*
தீமிதி வைபவத்தை
கிட்ட நின்னுப் பார்க்கணும்
திரௌபதி கூந்தல்
முடித்து அக்னி
மடியேந்தும் காட்சியை
அருகிருந்துப் பார்க்கணும்
எனைக் கரம்பிடித்து
அழைத்துச் சென்று
அத்தனையும் காட்டு தம்பி.!.
*
வாணவேடிக்கை
கொஞ்சம்
தொலைவிலிருந்துக் 
காட்டு தம்பி !.
*
வெப்பம், புழுக்கம்
போக்கிடவே
சில்லுன்னுக்
கோலி சோடா ஒண்ணு
வாங்கி கொடு தம்பி !.
*
பஞ்சு மிட்டாய் பொரிகடலை
சவ்வு மிட்டாய் கரும்பு சாறு
வாங்கி கொடு தம்பி !.
*
பாம்புத் தலைப்
பெண் அழகைப் பார்க்கணும்
எங்கிருக்கோ அங்கே
அழைத்துப் போ தம்பி !.
*
ரங்கராட்டினம் ஏறி
குதிரையிலே
சவாரிப் போகணும்
ஏற்றிவிடு தம்பி !
*
இராத்திரிக்குக்
கரகாட்டம் மயிலாட்டம்
பார்ப்பதற்குத்
துணையிருப்பாய் தம்பி !.
*
திரௌபதி சபதம்
முடிச்ச கடைசித்
தெருக்கூத்துப்
பார்த்துக் களிக்கணும்
பாட்டைக் கேட்டு
ரசி்க்கணும் தம்பி.
கட்டியங்காரன்
நகைச்சுவையைக்
கேட்டு சிரிக்கணும்
தம்பி.!..
*
ஆகா, விடிய விடிய
கூத்துப் பார்த்து
அசந்துத் தூங்கிட்டேன்
ஊருக்குப் போவதற்கு
எத்தனை மணிக்கு
பஸ் தம்பி !.
*
- { தம்பி கவியருவி. ம. இரமேசுக்கு.}

*

1 comment:

  1. திருவிழாவுக்கு கூப்பிட்டுக்கொண்டு போகவில்லை என்பதை இப்படியா வெளிப்படையா சொல்றது... அடுத்த வருஷம் கூப்பிட்டுக்கிட்டு போயிடறேன்... கவலைப்படாதீங்க...

    ReplyDelete