*.
எங்கோ மின்னுகிறது?
மழையில்லை இங்கே…
*
இளையராஜாவைப் பாராட்டி
ஈ மெயில் அனுப்பியது
குயில“.
*
ஐஸ்கிரீம் சாப்பிட்ட
குழந்தையின்
உதடெல்லாம் வெண்மை.
*
குடிநீர் விற்பனையில்
உலக சாதனை.
*
பாதையில் போனவர்கள்
வேடிக்கைப்
பார்த்தார்கள்
சவ ஊர்வலம்.
No comments:
Post a Comment