*
செடியின் நிழலில்
காதலர்கள் பேசுவதைக்
காது கொடுத்து
கேட்கிறது பூக்கள்.
*
உட்கார்ந்திருக்கும்
இளங் காதலர்களை
ஓரக்கண்ணால் பார்க்கிறார்
சர்வர்.
*
சுடிதார் தேர்வு
செய்கிறான் காதலன்
சிரித்தபடியே எடுத்துப்
போடுகிறார் முதியவர்.
*
பிரவுசிங் சென்டரில்
கொஞ்சம்
நேரங்கழித்தனர்
காதலர்கள்.
*
பஸ் விட்டிறங்கியதும்
பாதையில் பிரிந்தனர்
காதலர்கள்.
*
No comments:
Post a Comment