Labels

Haiku (3) photo (2) Thought (4) Thoughts (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருள் உரை. (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (18) கலை (1) கவிதை (331) கவிதை. (7) கவிதைகள். (6) கஜல் (17) கிராமியக் கதை (2) குறுங்கவிதை (1) குறுங்கவிதைகள் (10) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர்பாடல் (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (5) செனரியு (24) சென்ரியு (38) சென்ரியு. (14) சென்ரியூ (99) துணுக்கு (96) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நல்வாக்கு. (1) நன்னெறி. (3) நீதிநெறி (1) படம் (64) பரேகு ஹைக்கூ (4) பழமொழி (2) பாடல் (1) புதுக்கவிதை (231) பொது அறிவு (12) மரபு (18) முல்லா கதை (11) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (21) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துக்கள் (35) விமர்சனம் (2) ஜென் (1) ஜென் கதை (12) ஹைக்கூ (342) ஹைக்கூ. (48) ஹைபுன் (48)

Monday, 25 January 2016

குடியரசு தினம்...!! ( கட்டுரை )

குடியரசு தினம்….!!
*.
இந்திய குடியரசு தினம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். குடியரசு நமக்கு கற்றுக் கொடுத்ததென்ன? நாடு வளர்ச்சி பெற்றிருக்கிறதா? பெற்றிருக்கிறது. விஞ்ஞான முன்னேற்றம். உணவு, தொழில், பொருளாதார வளர்ச்சி பெற்றிருக்கிறோம். அரசியல் சாசனங்கள் நமக்கு வகுத்துக் கொடுத்த வழிமுறைகள் என்ன? இன்று அதன் செயல்பாட்டுத் தன்மைகள் என்ன? உலகநாடுகள் நம்மைப் பார்த்து வியக்கின்ற அளவிற்கு சாதனைகள் புரிந்து வருகின்றோம். ஆனால் மனவியல்ரீதியாகவும் பண்பாட்டு கலாச்சார ரீதியாகவும் மொழி இனம் சாதி வேறுபாடுகளால் இங்கு இன்னும் வளர்ச்சிப் பெறாமல் இருக்கின்ற தன்மைகள் நிலவுகின்றதே? இதற்கென்ன காரணம்? காரணங்கள் எல்லோருக்கும் தெரிந்தாலும் அரசியல் ராஜதந்திரச் சூழ்ச்சிகள் மக்களைப் பிளவுபடுத்தி வைத்து வேடிக்கைப் பார்க்கின்றன.. ஆதாயம் தேடும் சக்திகளால் அப்பொழுதுதான் தான் நினைத்த காரியத்தில் வெற்றி பெறமுடியும். வாக்குகள் மட்டுமே அவர்களின் வெற்றிக்களுக்கான வங்கி சேமிப்புகளாகும். மக்களின் உரிமைகள் கோரிக்கைகள் அவர்களின் உதாசீனமாகும். வசீகரமான வாக்குறுதிகள் கொடுத்து விட்டு நிறைவேற்றாமல் சாக்குபோக்குகள் சொல்கின்ற வாக்கு சாதுர்யம் படைத்தவர்கள். அரசுவரிப் பணத்தில் இலவசங்களைக் கொடுத்து இதயங்களைக் கவரும் இலட்சியவாதிகள் மக்களை சொர்க்கத்திற்கே கொண்டு சென்று வாழவைப்போம் என்று வாக்குறுதிகள் அள்ளிஅள்ளி வீசுகிறார்கள். இலவசங்கள் எத்தனைபேர் மனங்களில் வெறுப்பணர்வை வளர்த்து வருகின்றன என்பது அவர்களுக்குத் தெரியுமா?  இன்னும் சொல்ல நிறையவே இருக்கின்றன. மக்களாட்சி என்பது இப்பொழுது நடைபெறகிறதா? என்றே கேள்விகள்எழுகின்றன. கடந்த சில தினங்களில் சமூக எதிர்ப்பில் தங்களைச் கடராக்கிக் கொண்டு இளம்வயதில் தற்பொலைச் செய்துக்கொண்டகல்லூரி மாணவ / மாணவிகள் 1. ரோஹித் 2. பிரியங்கா 3. மோனிஷா 4. சரண்யா போன்று, மற்றுள்ள, எந்தவொரு குடிமக்களுக்கம் தக்கப் பாதுகாப்கமில்லை என்பதற்கு இச்சம்பவங்கள் சரியான உதாரணமாகவே திகழ்கின்றன.
மக்களாட்சி என்பது மாறி கட்சிகளின் தன்னாதிக்க ஆட்சியே நடைபெறகின்ற அவலநிலையினை இப்பொழுது காண்கின்றோம். வெளிநாட்டினர் இந்தியாவை வல்லரசு நாடாகப் பார்க்கிறார்கள். உள்நாட்டு மக்களோ நல்லரசு நாடாக காண ஆசைப்படுகிறார்கள். இந்திய மக்களின் கனவுகள் மெய்ப்பட வேண்டும். சாத்தியமாகுமா?     

*

No comments:

Post a Comment