NA.GA, THURAIVAN'S HAIBUN.
*
அவன் தன்னம்பிக்கையூட்டும்
புத்தகங்களை நிறையப் படிப்பது வழக்கம். பலரும் அவனை புத்தகப்புழு என்று கேலி பேசினாலும்,
“ ஏதோ பைய விஷயம் கொஞ்சம் தெரிஞ்சி வைச்சிருக்கான்னு ” - அறிந்தவர்கள் பாராட்டுவார்கள். பக்கத்துப் பக்கத்து வீடுகளில்
வசிப்பவர்கள் ஏதேனும் பிரச்சினை என்றால் அவனிடம் வந்து, ஆலோசனைக் கேட்பார்கள். அவனும்
உடனடியாக அதற்கான தீர்வு சொல்லி அனுப்பி வைப்பான். இதனால், அவனுக்கு நிறைய பேர் “ பட்டப்பெயர்
“ வேறு வைத்து அழைக்கத் தொடங்கினார்கள்.
இவ்வளவு அறிவா
இருக்கே…
பொழப்புக்கு வழி
தேடலையா?
பெரியவரின் பாராட்டுக்
கேள்வி.
*
No comments:
Post a Comment