Labels

Haiku (3) photo (2) Thought (4) Thoughts (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருள் உரை. (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரைவீச்சு (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (23) கலை (1) கவிதை (336) கவிதை. (7) கவிதைகள். (8) கஜல் (17) கிராமியக் கதை (2) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (5) குறுங்கவிதைகள் (13) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர்பாடல் (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (5) செனரியு (24) சென்ரியு (38) சென்ரியு. (14) சென்ரியூ (99) துணுக்கு (96) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நல்வாக்கு. (1) நன்னெறி. (3) நீதிநெறி (1) படம் (66) பரேகு ஹைக்கூ (4) பழமொழி (2) பாடல் (1) புதுக்கவிதை (231) பொது அறிவு (12) மரபு (18) முல்லா கதை (11) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (21) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துக்கள் (36) விமர்சனம் (2) ஜென் (1) ஜென் கதை (12) ஹைக்கூ (342) ஹைக்கூ. (57) ஹைபுன் (48)

Tuesday, 29 March 2016

நீலத்தாமரை...!!
1.
கிரேக்கர், எகிப்தியர்கள் முதல், இந்தியர்கள் வரை நீலத்தாமரையை போதைப் பொருளாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். இதன் காய்ந்த இலைகளைச் சுருட்டி சிகரெட் போல பயன்படுத்தி யிருக்கிறார்கள். நியூசிஃபென்ரைன், அபோரின் என்ற வேதிப்பொருள் இருப்பதே, மெல்லிய தூக்கத்திற்கும் , போதைக்கும் காரணம் என்கிறது இந்திய சித்தா மற்றும் ஆயுர்வேத நூல்கள் யூஃபோரியா, குழந்தைப்பேறு இன்மை, மனம் பிறழ்தல் போன்றவற்றிற்கும், மேலும் பல நோய்ளுக்குமான மருந்துத் தயாரிப்பில் இவை முக்கிய இடம் பெறுகின்றன. மனஅமைதி தரவல்ல இந்தப் பூவின் சாறு மனநல ஊக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.
2.
வேதம், உபநிஷதம், இதிகாசப் புராணங்கள், தொடங்கி சங்க இலக்கியங்கள் வரையும், யோகம், ஆன்மீகம், தந்திர சாஸ்திரம் நூல்களிலும் இந்தப் பூக்கள் தனி இடம் பெற்றிருக்கிறது. ஆதிசங்கரர், தேவியின் அழகை வர்ணிக்கும் சௌந்தர்ய லகரியில், 57 – வது பாடலில், தேவியை, “ ஹே தேவியே! நிலா எப்படி பேதம் பார்க்காமல் எல்லோருக்காகவும் வருகிறதோ அதுபோல நீலத் தாமரை போன்ற குளிர்ந்த உன் கருணை மிகுந்த கண்களால் தகுதி பாராட்டாது என்னையும் கடாசிக்க வேண்டும் ” என்று உருகுகிறார். இந்துமதம் மட்டுமல்ல, பௌத்த மதத்தில் கூட பல நூல்களில் இந்தப் பூ பற்றி அநேகக் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. புத்தரின் காலடிச் சுவட்டில் 108 புனித குறியீடுகள் இருந்ததாகவும் அதில் ஒன்று நீலத் தாமரை என்கிறது மகாயான பௌத்தமதம்.

3.
இந்த ஏரி ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரிலிருந்து 3 மைல் தொலைவில் இருக்கிறது. உலகம் தோன்றிதன் அடையாளமாக புஷ்கர மேளா வெகு விமரிசையாக இன்றும் கொண்டாடப்படுகிறது. என்றாலும் அன்று காடுபோல் படர்ந்திருந்த அந்த ஏரியில் தற்போது ஒரு பூ கூட இல்லை. பேராசையின் காரணமாய் அனைத்தையும் அழித்தாகி விட்டது.  அபூர்வமாய், புனிதமாய்ப் போற்றப்பட்ட அவற்றின் பெயர், இப்போது ஐ.நா.சபையால் அறிவிக்கப்பட்டுள்ள அழிவிலிருக்கும் மூலிகைத் தாவரங்களின் பட்டியலில் சிவப்பு எழுத்தில் பொறிக்கப்பட்டு விட்டது.
ஆதாரம் : இருவாட்சி பொங்சல் மலர் – 2016. – பக்கம் 100 -101.
தகவல் : ந.க.துறைவன்.
*     

          

No comments:

Post a Comment