Sunday, 21 September 2014

பழைய டைரி ...!!


*                     
பரணையிலிருந்து கிடைத்தது
தாத்தாவின் பழைய டைரி
பிரித்துப் படித்தால்
பக்கமெல்லாம் எழுதியிருந்தது
கடன் கணக்கு.
*
அந்தக் காலத்துப்
பாட்டிகளெல்லாம்
குடும்பத்திற்கு
வழிகாட்டிகள்
இப்பொழுது
அனைவருக்கும்
அவர்கள் வெறும்
மூதாட்டிகள்.
*
தாத்தா நிலம்
வாங்கிப் போட்டார்.
அப்பா வீடு
கட்டி வாழ்ந்தார்.
விற்று தீர்த்தான்
குடிகார மகன்.
*

1 comment:

  1. நவீன வாழ்வின் தவிர்க்க முடியாத அவலங்கள் . அருமையான வரிகள் .- சுப்ரா .

    ReplyDelete