*
NA.GA. THURAIVAN'S HAIKU.
*
அரசமரத்தடியின்
கீழ்
வரிசையாகயிருக்கின்றன
எண்ணெய்யில்லாத
அகல்விளக்குகள்
*
ஏதோவொரு
நம்பிக்கையில்
தினமும்
நடந்தேறுகிறது
நம்பிக்கை
இழந்தவன் வாழ்க்கை.
*
தேடுகின்றவனுக்கு
கிடைக்கவில்லை
தேடாமல்
நினைத்திருப்பவனுக்கு
தேடாமல்
கிடைக்கிறது மெஞ்ஞானம்.
*
No comments:
Post a Comment