*
இன்னிக்கி மதியம்
சாப்பாட்டு வேளையிலே
வீட்டு முன்புறமிருக்கிற
மரத்திலே வந்து
உட்கார்ந்து
கா… கா.. ன்னு
கத்திச்சி
காக்கா.
யாரோ உறவுக்காரங்க
வரப்போறாங்கன்னு
நினைச்சிக்கிட்டிருந்தே
வந்தது யார் தெரியுங்களா?
ஏதோ புதிய பொருள்
விளம்பரம் செய்யற
பொண்ணுங்க ரெண்டு
பேர் வந்து நின்னு
அதை வாங்கிக்கச்
சொல்லி
ஓரே நச்சரிப்பு.
என்ன பண்றது?
கடைசியா பொருள்
வாங்கின பின்னாலேதான்
எடத்தைவிட்டே
காலி பண்ணாங்கன்னா?
பார்த்துக்களேன்.
அவங்களுக்கு வருமானம்
எனக்கு சிறு இழப்பு….
*
No comments:
Post a Comment