*
1.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ
கார்பன் எரிவாயு எடுக்க மத்திய அரசு அளித்துள்ள அனுமதியை ரத்து செய்யக்கோரி தீவிரமடைந்து
வரும் போராட்டங்கள்.
இயற்கை
வளங்களையும், விளைநிலங்களையும் சீரழித்து வருகின்றன அரசும், கார்பரேட் நிறுவனங்களும்,
,இவர்களை விட உயிர்வாழும் விலங்ககள் பிராணிகள்
எவ்வளவோ மேல் என்றே தோன்றுகிறது. .
2.
169 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்ட, சாதனை
மனிதர் “ நெல் ” ஜெயராமன் புற்றுநோயால் அவதிப்படும் பரிதாபம்.
விவசாயத்தைப்
பின்னுக்கு தள்ளிவிட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தையும் அழித்து வரும் அரசுகள். விவசாயிகளின்
உயிரோடு விளையாடுகிறது இன்று அவர்களின் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமுமில்லை.
3.
சீனாவில் வாராக்கடன் 22, 000 கோடி டாலர்.
இந்தியாவுக்கு
சரிநிகர் சமமாய் தான் சீனாவும் திகழ்கிறது. எல்லா ஆட்சியாளர்களும் கார்பரேட்டுக்களின்
கைகளைக் குலுக்கிக் கொண்டு தான் ஆட்சி புரிகிறார்கள்.
4.
உ.பி. 5 – ம் கட்ட தேர்தலில் போட்டியிடும்
வேட்பாளர்களில் 168 பேர் கோட்டீஸ்வரர்கள். 117 பேர் குற்றப் பின்னணி உடையவர்கள்.
இந்திய
ஜனநாயகமே குற்றவாளிகளின் ஆட்சியதிகாரத்தால் கட்டமைப்பட்டு வருகின்றது. இது எதிர்காலத்திற்கு
மிகப் பெரிய ஆபத்தாக திகழும் என்பதை அதிகார வர்க்கத்தினர் உணர வேண்டும். இது மிகப்
பெரிய எச்சரிக்கையாகவும் கருதி பரிசீலனைச் செய்ய வேண்டும்.
ஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 26-02-2017.
தொகுப்பு ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment