சுக்கு காப்பிக் குடித்தால்
நன்றாய்ச் சீரணமாகும்
வெண்ணெய் நீக்கி
மோர்க் குடித்தால்
உடலோ குளிர்ச்சியாகும்
தென்னை இளநீரைக் குடித்தால்
வெப்ப நோய்கள் நீங்கும்
எலுமிச்சம் பழ நீரைக் குடித்தால்
உடல் நஞ்சுகள் நீங்கும்
காய்ச்சி வடிகட்டிய நீர் குடித்தால்
தொற்றுநோய்க்குத் தடுப்பாகும்
செயற்கையானக் குளிர் பானங்கள்
உயிரைக் கொல்லும் நஞ்சாகும்
இயற்கையான பானங்கள் - நம்
உயிரைக் காக்கும் மருந்தாகும்.
No comments:
Post a Comment