காதல்
மலர்களின்
மன்மத ரகசியம்
விலங்குகள் பறவைகள்
புரிந்திடும் அவசியம்
வாலிபத்தின்
நெஞ்சில் உதயம்
முதுமை
வயதினர் நினைவுக்
களஞ்சியம்
காதல் மானுட
உளவியல்-இனிய
குடும்ப வாழ்வியல்.
-கவிதை உறவு
பிப்ரவரி-1989.
காதலில்
தோல்வியுற்றால்
கவிஞனாவீர்களா?
என் காதலி
ஒரு நாள் என்னிடம்
கேட்டாள்
கண்டிப்பாக
முழு நேரக் கவிஞனாக
மாட்டேன்
ஏனென்றால்
கவிதை வருமானமில்லாதத்
தொழில் என்றேன்.
No comments:
Post a Comment