மனமாற வாழ்த்தியது
வேப்ப மரம்நிழல்
நின்றிருந்த என்னை
பூக்கள் உதிர்த்து
இன்பம் கண்டு மகிழும்
துன்பம் கண்டு துவளும்
நிலையான மனம்.
காற்று, மழை, பெரும் சத்தம்
கண்ணைப் பறிக்கும் மின்னல்,
எங்கோவிழுந்திருக்கணும் இடி.
உள்ளே சூன்ய தரிசனம்
தில்லை வெளியில் பாதுகாப்பாய்
பொன் வேய்ந்த கூரை.
தண்டவாளம் இல்லாத பாதையில்
வேகமாய் ஒடுகின்றன...
இரயில் பூச்சிகள்.
No comments:
Post a Comment