*உலகில் வாழும் மானுடத்தின்
உண்மை ரகசிய
மெல்லாம்உனக்குத் தெரியுமா?
தெரியுமென்றால்,
அது அகந்தை
தெரியாது என்றால்,
அது தன்னடக்கம்
பிரபஞ்ச ரகசியம்
உணர்வது அவசியம்!
** எது, எதை,
எப்படி
எடைபோட
வேண்டுமென்றுநிர்ணயித்துள்ளவன் நீ
தங்கத்தை எடைபோட
குன்றிமணியை அல்லவா
பயன்படுத்த வைத்தாய்
இப்பொழுதோ
தங்கம் விலை உயர்வானது
குன்றி மணி விலை குறைவானது!
***எது தீட்டானது?
உங்கள்உடலா? ஆன்மாவா?
பாதையோரம் ஒதுங்கி நின்று
புலையன் கேட்டக் கேள்வி
ஆதிசங்கரரை அதிர வைத்தது
இவர்களில்
யார் ஞானி?
யார் அஞ்ஞானி?
நாமே
அழிகிறோம்
அக்டோபர் 2012.
No comments:
Post a Comment