Labels

Haiku (3) photo (2) Thought (4) Thoughts (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருள் உரை. (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரைவீச்சு (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (23) கலை (1) கவிதை (336) கவிதை. (7) கவிதைகள். (8) கஜல் (17) கிராமியக் கதை (2) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (5) குறுங்கவிதைகள் (13) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர்பாடல் (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (5) செனரியு (24) சென்ரியு (38) சென்ரியு. (14) சென்ரியூ (99) துணுக்கு (96) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நல்வாக்கு. (1) நன்னெறி. (3) நீதிநெறி (1) படம் (66) பரேகு ஹைக்கூ (4) பழமொழி (2) பாடல் (1) புதுக்கவிதை (231) பொது அறிவு (12) மரபு (18) முல்லா கதை (11) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (21) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துக்கள் (36) விமர்சனம் (2) ஜென் (1) ஜென் கதை (12) ஹைக்கூ (342) ஹைக்கூ. (57) ஹைபுன் (48)

Wednesday, 3 August 2016

பதஞ்சலி பாதங்களில் மிதிபடுகிறார்...!!


*
பாஜக, ஆர்எஸ்எஸ் கட்சிகள் ஆன்மீகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கின்ற கட்சிகளாகும். தியானம் யோகம், வழிபாடு போன்றவற்றை முதன்மைப்படுத்தி செயல்படுகின்ற கட்சிகளாகும். இவர்கள் ஆன்மீகக் குருமார்களை மிகவும் போற்றி வணங்குகின்றவர்கள். சமீப காலமாக, வடஇந்தியாவின் மகாகுரு என்று போற்றப்படுகின்ற யோகி பாபா ராம்தேவ், அவர்கள் நடத்தி வரும் நிறுவனம் உற்பத்தி செய்கி்ற ஆயுர்வேத மருத்துவம் மற்றும் உணவுப் பொருள்கள் “பதஞ்சலி”  என்ற பெயரை இணைத்துக் கொண்டு பல பொருட்கள் வெளிவருகின்றன. அவைகள் வடஇந்தியாவில் மிகப் பெரிய சந்தைப் பொருட்களாகவும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகச் சொல்கிறரா்கள். பத்திரிகைகளில் அதிக அளவில் விளம்பரங்களும் வெளியாகி வருகின்றன.
அண்மையில் செருப்பு, காலணி விளம்பரம் ஒன்று தமிழ் நாளிதழில் காண நேரிட்டது. அதற்கும் ” பதஞ்சலி செருப்பு ” என்று பெயர்  வைக்கப்பட்டிருப்பதாக அந்த விளம்பரம் கூறுகிறது.
வரலாற்று சிறப்பு மிக்க தொன்மையான ஆன்மீகத்திற்கு பெரும் தொண்டாற்றிய பதஞ்சலி யோகியின் நினைவிடம் தமிழகத்திலே இருப்பதாக தலவரலாறுகள். கூறுகின்றன.
மனிதன் மெய்ஞானம் பெற்று உய்வதற்கும், அவன் உடல்நலம் பெற்று ஆரோக்கியமாக வாழ்வதற்கும் அவர் மெய்ஞானத்தால் கண்டறிந்து இயற்றி உலகிற்கு அளித்தத் தொகுப்பு நூல் தான் “ பதஞ்சலி யோகச. சூத்திரம் ” என்ற இலக்கண நூலாகும். ஆன்மீக உலகமே போற்றி புகமும் நூலாகும்.
தியானம் கற்பவர்கள் யாராயினும், ஆன்மீக ஆய்வு செய்வர்கள் யாராயினும் பதஞ்சலி தான் அவர்களுக்கு முதன்மை குருவாகத் தெரிவார். அவரிடமிரு்ந்து தான் தொடங்க வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட ஒரு மகானின் பெயரில் வியாபாரம் தொடங்கி விற்பனையில் கோடிகளைக் குவிக்கும் பாபா ராம்தேவ் தயாரிக்கும் செருப்புக்கு கூட பதஞ்சலியின் பெயரை வைத்து வெளிட்டு வருகிறார் என்றால், பதஞ்சலியை அவமானப் படுத்துவதாக, கேவலப்படுத்துவதாக அமைந்துள்ளது அவரின் செயல்பாடுகள்.
இவற்றையெல்லாம் ஆன்மீகவாதிகள் அரசியல்கட்சகள, பாஜக, ஆர்எஸ்எஸ், பாஜக மத்திய அரசு அறியாதவர்களா என்ன? அறிந்து தானே கோடிக்கணக்கான ரூபாய் செலவில் அவ்விளம்பங்கள் வெளிவருகின்றன.
இவர்களெல்லாம் பதஞ்சலி யோகியையப் போற்றுகிறார்களா? அவமானப்படுத்தி தூற்றுகிறார்களா? யோக சூத்திரம்  நூலின் வழி? யோகம் தியானம் கடவுளைக் காணுதல் போன்றவற்றைக் கற்றவர்கள் குருவையே நித்திக்கிறார்கள். என்று புரியவில்லையா?. தெரியவில்லையா?. ஆளும் கட்சியான பாஜக, “ பதஞ்சலி செருப்பு ” என்று பெயருடன் வெளிவந்தள்ள விளம்பரத்தை இன்னும் காணவில்லையா? அரசின் அங்கீகாரத்ததுடன், பொருட்கள் அனுமதியுடன், அ,ஃக் மார்க் முத்திரையுடன் தானே வெளிவர வேண்டியிருக்கும்.
யோகா குரு ராம்தேவ் அவர்களின் இச்செயல்பாடுகளை மத்திய பாஜக அரசு கவனிக்குமா? தகுந்த நடவடிக்கை எடுத்து பதஞ்சலி முனிவரின் நற்பெயகை் காப்பாற்றுமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

பதஞ்சலியின் பெயரைப் பாதங்களின் கீழ்போட்டு மிதிக்காதீர்கள்.
ந.க.துறைவன்

*                       

No comments:

Post a Comment