மனநல மருத்துவ நிலையத்தில் பணியாற்றும் மருத்துவர், வெளியில் வந்து
பார்த்தபோது, தன் காரின் ஒரு டயர் காற்றுப் போய் இருப்பதைக் கண்டார்.
டயரைக் கழற்றியபோது அதன் நட்டுகள் சாக்டையில் விழுந்து விட்டன.
அதனால், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது, உள்ளிருந்து வந்த ஒரு நோயாளி, அருகில் வந்து, ‘ பதிய டயரை மாட்டி, மற்ற சக்கரங்களிலிருந்து ஒவ்வொரு
நட்டைக் கழற்றி, இதில்போட்டு விடுங்கள். அப்புறம் பழுது பார்க்கும் இடம் சரி செய்து
கொள்ளலாம். அதுவரை தாங்கும் ‘ என்றான்.
டாக்டர் மகிழ்ச்சியடைந்து, அருமையான யோசனை, நீ இங்கே என்ன செய்து
கொண்டிருக்கிறாரய்? ” என்று கேட்டார்.
“ நான் பைத்தியக்காரன், ஆனால், முட்டாளில்லை, ” என்றான் அவன்.
ஆதாரம் ; ஓஷோவின் “ ஆரம்பம் நீதான்!. ” – நூல் –பக்கம் – 200.
தகவல் ; ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment