*
அவள்
சாக விரும்பவில்லை
சாவும்
அவளை நெருங்கவில்லை.
*.
அவனுக்கு
நாக்கிலே சனி
அடுத்தவனுக்கு மூக்கிலே முனி
*
ஆறாதது
ரணம்
ஆறுவது
சினம்.
*
ஆள்
காட்டி விரலில் மை.
வாக்காளர்
உரிமை
*
சிக்கலைத்
தீர்த்து வைத்தவன்
சிக்கலின்
மாட்டிக் கொண்டான்.
*
காற்றே
வரவில்லை என்றான்
பொய்
சொல்லாதே என்றது காற்று.
*
எது
பிடிக்குமென்று கேட்டான்?
உன்னைப்
பிடிக்குமென்றாள்.
*
No comments:
Post a Comment