இசையில்தான் எத்தனை உணர்வுகள்
ரசனையோடு கேட்டு இன்புற்றான் மெல்ல
நீங்கி விடுகிறது மன தளர்வுகள்
எல்லோர்
கையில் இருக்கனும் காசு
மனம்
கலகலப்பாக்க வேண்டுமானால்
சிரிக்க
சிரிக்க நீ பேசு
ஆனந்த நடனம் ஆடுகிறது வயலில் நாற்று
கட்டிலில் படுத்து ஓய்வெடுக்கிறார் அப்பா
சுகமாய் வீசுகிறது வேப்பங் காற்று
பாஸ்ட் புட் உணவுகள் வயிற்றுக்குத் தீமை
ஆரோக்கியம் பேணிட விரும்புவோர் தவிர்த்தால்
உடலுக்கு என்றென்றும் நன்மை
காதலர்களின் தலை எப்பொழுதும் தாழாது
தர்மபுரி சம்பவங்கள் நாட்டில் தோன்றிடின்
காதல் என்பது உலகில் உயிர் வாழாது
No comments:
Post a Comment