கிராமத்திற்குள் நுழையுமுன்னே
காற்றில் மிதந்து வந்தது
வெல்லம் காய்ச்சும் மணம்,
கிராமங்களில் மறைந்து போனது
கருவிகள் செய்யும் கொல்லர்
உலைகளங்கள்,
வயலில் அத்துமீறி மேய்கிறது
விரடடப் பயந்தார்கள்
அரசின் இலவச ஆடுகள்,
குணசீலம் போய் வந்தும்
குணமாகவில்லை
மன நோய்,
தினம் டாஸ்மா கடையில்
போய்சேர்கிறது
சம்பாதித்தப் பணம்,
தாயில்லாத நேரம்
பால்குடி நினைவில்
விரல் சூப்புகிறது குழந்தை,
No comments:
Post a Comment