இந்தியாவில் திருமணங்கள்.
1.
இந்தியாவி்ல் ஒரு திருமணத்திற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.5 கோடி
வரை செலவிடப்படுகின்றன. சுமார் மூன்று மாதம் முதல் ஒரு ஆண்டு வரையிலும் திருமண திட்டமிடல்
நீள்கிறது.
2.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் தோராயமாக 1 கோடி திருமணங்கள் நடக்கின்றன.
3.
இன்று திருமணம் என்பது கோடிகளில் புழுங்கும் தொழிலாக மட்டுமே
பார்க்கப்படுகின்றன. திருமண அழைப்பிதழ் சந்தை ரூ.10 ஆயிரம்கோடி, மேக்கப் மற்றும் அலங்கார
சந்தை ரூ.10 ஆயிரம் கோடி, அணிகலன்கள் சந்தை ரூ.10 ஆயிரம் கோடி, ஆபரண சந்தை ரூ.1 லட்சம்
கோடி என தனித் தனியான சந்தை மதிப்பு கொண்டுள்ளது. உணவுக்கு கூட ஒரு இலைக்கு இவ்வளவு
தொகை என்றுதான் குறிப்பிடப்படுகின்றன.
4.
ஒவ்வொரு திருமண சீசனிலும் 3 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள்
உருவாகின்றன.
5.
ஒரு திருமணத்திற்கு சராசரியாக 30 முதல் 40 கிராம் ஆபரணம் நகை
பயன்படுத்துகிறார்கள் என்றால் ஒரு ஆண்டில் நடக்கும் 1 கோடி திருமணத்துக்கு ஆண்டுக்கு
300 முதல் 400 டன் தங்கம் தேவையாக இருக்கிறது.
ஆதாரம்் தி இந்து – நாளிதழ் – 12-09-2016 – தொழில் வளம் தரும்
இந்தியத் திருமணங்கள் – என்ற கட்டுரையிலிருந்து.
தகவல் ; ந.க.துறைவன்.
No comments:
Post a Comment