*
அம்மனாகி வருகிறாள்
ஆடி வெள்ளிக் கிழமையிலே
அம்மாகி வருகிறாள்
ஆசிர்வதிக்க வருகிறாள்.
*
கல்வி தரும் கலைமகளாய்
சரஸ்வதி வருகிறாள்
செல்வமளிக்கும்
திருமகளாய்
இலட்சுமி வருகிறாள்
*
கருணை
மழை பொழிபவளாய்
காமாட்சி
வருகிறாள்
துன்பம்
போக்கும் தேவியாக
துர்க்கையம்மன்
வருகிறாள்.
*
அகிலம்
ஆளும் அம்மனாகி
சக்தி
ஜோதி வருகிறாள்
சகலருக்கும்
அருள் பாலிக்கும்
ஸ்ரீசக்கர
நாயகியாக வருகிறாள்
*
No comments:
Post a Comment