முல்லா
நஸ்ருத்தீன் மனைவியுடன் திரைப்படம் பார்க்கச் சென்றார். ஆனால் இருவரும் படத்தைக்
பார்க்காமல் சளசளவென்று உரையாடியபடியே இருந்தனர். சுற்றிலும் அமர்ந்து திரைப்படம்
பார்த்தவர்களுக்கு இவர்களின் உரையாடல் தாங்க முடியாத தொந்தரவாகி விட்டது. முல்லாவின்
இருக்கைக்குப் பின் இருக்கையில் இருந்த ஒருவர் எரிச்சலுடன், இதென்ன இரண்டு
கழுதைகள் மாற்றி மாற்றிக் கத்தவதுபோல இருக்கிறதே! ஒரு நிமிஷம்கூட வாயை
மூடமாட்டார்கள் போலுள்ளதே.” என்று கத்தினார்.
முல்லாவுக்கு
கோபம் வந்துவிட்டது. அவர் திரும்பிப் பார்த்து,
“ யாரைக்
கழுதைகள் கத்தற மாதிரி இருக்குன்னீங்க? எங்க ரெண்டு பேரையுமா சொல்றீங்க? ” என்று
பதிலுக்கு கத்தினார்.
பின்னிருக்கையில்
இருந்தவர் கிண்டலாக சமாதானப்படுத்தினார்.
“ சே. சே,
உங்களைக் போய் குறைசொல்வேனா? சினிமாவுல நடிக்கிறவங்க பேசற சத்தம் தாங்க முடியலை.
அவங்க வாயை மூடிசிட்டா தானே நீங்க ரெண்டு பேரும் பேசற காதல் பேச்சை நாங்களும்
கேட்க முடியும்கிற அர்த்தத்தில் நடிகர்களைத்தான் திட்டினேன் ” என்றார் அவர்.
ஆதாரம் ;
ஓஷோவின் – அஷ்டாவக்ர மகாகீதை – பக்கம் – 114.
தகவல் ; ந. க .துறைவன்.
*
No comments:
Post a Comment