GST – வரி...!!
*
ஓரே நாடு ஓரே மொழி ஓரே வரி
ஓரே ஊரு ஓரே மக்கள் ரெண்டு
சுடுகாடு.
*
என்றேனும் ஒருநாள்
குப்புறத்தள்ளும்
கண் தெரியாமல் வரிக்குதிரை.
*
வீட்டில் சாப்பிட்டால்
வரியில்லை
பேசி நாக்குக்கு அடக்கமில்லை.
*
எந்த ஒன்றுக்கு
வரிவிதிக்கவில்லை
எல்லாமே வரியின் கீழ்
உள்ளடக்கம்.
*
வரியை ஏற்றுவார்கள் மக்கள்
எதிர்த்தால்
குறைப்பதாய் சொல்லி
ஏமாற்றுவார்கள்.
*
வரியோடு வாழ்வு
வரியோடு சாவு.
*
ந.க. துறைவன்.
No comments:
Post a Comment