*
ஊரிலிருந்து வந்தவர்
யாரென்று எனக்குத் தெரியவில்லை.
நீங்க யாரென்று கேட்டதற்கு
உறவினர் ஒருவரின்
பெயரைச் சொல்லி
அவர்களுக்குச் சொந்த மென்று
விவரமாய்ச் சொன்னார்.
என்ன விஷயமாக வந்தீர்கள்
என்று கேட்டேன். தேடி வந்தச்
செய்தியைச் சொன்னார்.
*
ஊர்காரர் என்றாலும்
அறிமுகமில்லாதவர்க்கு
எப்படி உதவி செய்வ தென்று
பெரும் தயக்கம்.
சரி பார்க்கலாம் என்றேன்.
”கொஞ்சம் பார்த்து செய்யுங்க”
என்று
கெஞ்சிக் கேட்டு விடைப்
பெற்றார்.
மறு முனையிலிருந்து
போன் வந்தது.
“நம்ம ஊரிலிருந்து பையன்
ஒருத்தன் வருவா, வந்தா?
ஏதாச்சும் சொல்லி
சமாளியப்போ” என்றார்
அனுப்பி வைத்த உறவுக்காரர்.
உறவுக்காரருக்கும் "நல்ல" மனம்....!
ReplyDelete