வாசித்ததில்
வசீகரித்தது.
*
எழுத்தாளர்.
மைக்கேல் கேரிதர்ஸ் எழுதிய “ புத்தர் ” மிகச் சுருக்கமான அறிமுகம் - நூல் வாசிக்கும்
வாய்ப்பு கிடைத்தது. இந்நூல் 2005 – ல் வெளி வந்துள்ளது. இந்நூலினைத் தமிழில் மொழிபெயர்த்திருப்பவர்
மறைந்த எழுத்தாளர் சி.மணி ஆவார். மிகச் சிறந்த முறையில் ஆங்கிலத்தில் இதனை மொழிபெயர்த்திருக்கிறார்
என்றே சொல்லலாம். அவ்வளவு சுருக்கமான எளிய வார்த்தை அமைப்பு கொண்டது. தோய்வுராது வாசிப்புக்கேற்ற
மொழிநடையில் அமைந்துள்ளது. புத்தர் பற்றி அறிமுகம் செய்து கொள்ள விரும்பும் வாசகர்கள்
மிக அவசியம் படிக்க வேண்டிய நூலாக இருக்கிறது. இவர் தான் மகாகவி பாரதிக்கு பிறகு, ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை ஆங்கில வழியாக, தமிழுக்கு
மொழிபெயர்த்துக் கொடுத்துப் பெருமளவில் அறிமுகப்படுத்தியவர்
ஆவார்.
ந.க.துறைவன்.
No comments:
Post a Comment