*
உன்னை
என்
பெற்றோர்களுக்குப் பிடித்திருந்தது
பார்த்து
சம்மதம் சொல்ல அழைத்து வந்தார்கள்.
நான்
உன்னைப் பார்த்தேன்
நீ
என்னைப் பார்த்தாய்.
மாப்பிள்ளையைப்
பிடித்திருக்கிறதா? என்று
உன்னிடம்
உன்
அம்மாவும் என் அம்மாவும்
இரகசியமாய்
கேட்டார்கள்.
என்
சம்மதம் கேட்காமலேயே
எப்படி
நீ ஒற்றை வார்த்தையில்
பிடித்திருக்கிறது
என்று சொன்னாய்?
அம்மாக்களுக்குப்
பிடிப்பதைப்
பிள்ளைகள்
தலையில் கட்டுகிறார்கள்
பிள்ளைகளுக்குப்
பிடிப்பதை
அம்மாக்கள்
மறுக்கிறார்கள்.
*
No comments:
Post a Comment