நீ….!!
*
நீ மழையாக இல்லாவிட்டால்
என் அன்பே
ஒரு மரமாக இரு
வளமுள்ள ஒரு மரமாக
இரு
நீ மரமாக இல்லாவிட்டால்
என் அன்பே
ஒரு கல்லாக இரு
ஈரலிப்புள்ள கல்லாக
இரு
நீ கல்லாக இல்லை
என்றால் என் அன்பே
ஒரு சந்திரனாக
இரு
அன்புள்ள ஒரு பெண்ணின்
கனவில் ஒரு சந்திரனாக இரு
ஒரு பெண் தன் மகனின்
சவ அடக்கத்தின்
போது இப்படிச் சொன்னாள்.
ஆதாரம் ; மஹ்மூத்
தர்வீஷ் கவிதைகள் பக்கம் 86
தமிழாக்கம் : எம்.எ.
நுஃமான்.
No comments:
Post a Comment