*
ஒருமுறை முல்லா நஸ்ருத்தீன் அவருடைய நண்பர் ஒருவர் ஒரு ஹோட்டலில்
சந்தித்தார். அவர் சொன்னார். “ அன்பரே, வாருங்கள். ஆளுக்கொரு பெக் மது அருந்தலாம்.
இங்கு சரக்கு நல்லா இருக்கும்.
”முல்லா மறுத்தார். “ வேண்டாம் நண்பரே, உபசரிப்பிற்கு மிகுந்த
நன்றி நான் குடிக்க விரும்பவில்லை. அதற்கு மூன்று காரணங்கள். உள்ளன. முதலாவதாக, நமது
மதத்தில் குடிப்பழக்கம் தடை செய்யப்பட்டிருக்கிறது. இரண்டாவதாக, என் மனைவி இறக்கும்
சமயத்தில் நான் இனிமேல் மது அருந்தமாட்டேன் என்று அவளுக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளேன்.
மூன்றாவது காரணம் என்னவென்றால், நான் சற்று நேரம் முன்புதான் வீட்டில் குடித்துவிட்டு
இங்கு வந்திருக்கிறேன் ” என்றார்.
ஆதாரம் ; - பகவான் ஓஷோவின் – அஷ்டவக்ரா மகாகீதை – பக்கம் –
24.
தகவல் ;- ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment