முள்கள்…!!
*
சந்தோஷம்
முகத்தில் மலரும் பூக்கள்
சந்தேகம்
மனதைக் குத்தும் முள்கள்
*
உயர்ந்த
கோபுரத்திலும் வாழ்கின்றன
கூண்டிலும்
வாழ்கின்றன புறாக்கள்.
*
இன்று
உங்களை இகழ்பவர்கள்
நேற்று
உங்களைப் பாராட்டியவர்கள்.
*
செயலைத்
தொடங்குவது எளிது
செய்து
முடிப்பதுதான் கடினம்.
*
No comments:
Post a Comment