Labels
Saturday, 28 September 2019
விசாரிப்பு
Thursday, 26 September 2019
விழிப்பு
விழிப்பு
என்னுள் ஒலித்து கொண்டிருக்கிறது
அந்த நள்ளிரவில் எழுந்த
முகாரி ராக இசையின் ஒலி
அதிர்வலைகள் அறையெங்கும்
நிரம்பி வழிகின்றன
அருகில் இருந்தவள் கை
அணைப்பிலிருந்து சற்றே
விலகி இருந்தது
அந்த இசையின் ஒலி
இன்னும் நிற்கவில்லை
அறையின் நீலவொளி பிரகாசம்
அவளின் ஆழ்ந்த உறக்கத்தின்
முகத்தைக் காட்டியது
அவர்கள் விழிப்பதாக தெரியவில்லை
எனக்கும் உறக்கம் வரவில்லை
இசையின் ஒலி எப்பொழுது
நின்றதென்று தெரியவில்லை
இன்னும் நேரமிருக்கிறது விடிவதற்கு...
ந க துறைவன்.
Thursday, 19 September 2019
அழகு
பயணம்
எப்பொழுதும் உற்சாகம் தரும்
உணர்ச்சி மிக்க பேச்சு
கலாய்த்து பதில் தரும் தருணங்கள்
சிரிப்பு மிட்டாய்கள்
அழகின் பெருமை பேசும் கவிதைகள்
காதலர்கள் சில்மிஷங்கள்
இவையெல்லாம் இல்லாது வெறுமையாய்
அமைந்து விடுகிறது
காதலி இல்லாத பயணம்.
ந க துறைவன்.
Monday, 16 September 2019
மீதி
மீதமிருக்கிறது எஞ்சியவைகள்
என்ன செய்வது மீதமிருப்பதை
எவருக்கு கொடுப்பது அந்த மீதியென
யோசிக்கையில்
கொடுக்கும் மீதியை யாரேனும்
வாங்குவார்களா?என்ற கேள்வி
என்னுள் எழுந்தது
காசு வாங்கிக் கொள்வார்கள்
உணவு வாங்கி கொள்வார்கள்
துணி வாங்கி கொள்வார்கள்
வீணான பொருள்கள் வாங்கிக் கொள்வார்கள்
வேறென்ன வாங்கி கொள்வார்கள்?
என்னிடம் இருக்கும் மீதமிருக்குமதனை
யாரேனும் வாங்க மறுத்து விட்டால்
என் மனம் நொந்து போகும்
மீதமிருக்கும் எஞ்சியவைகள்
என்ன செய்வது வீணாக்காமல்...
ந க துறைவன்.