பேனா
Labels
Friday, 31 August 2018
எழுத்துரிமை
Sunday, 26 August 2018
நெஞ்சுக்குள்ளே...
Friday, 24 August 2018
பார்த்தீனியம்
அழிப்பதற்கு எவருமில்லை
படர்ந்து வளர்கிறது எங்கும்
நஞ்சு பார்த்தீனியம்.
ந க துறைவன்.
நஞ்சு பார்த்தீனியம்
Thursday, 23 August 2018
இனிது
துன்பம் இனிது
துயரம் நன்று
வேதனை சுகம்
கவலைக் கனிவு
அழுகை ஆனந்தம்
விகாரமாயிருப்பதில்லை
யாருக்கும் மனம்
எதிலும்
முரண்பட்டதோ
இந்த வாழ்க்கை.
ந க துறைவன்.
வாழ்க்கை
Tuesday, 21 August 2018
இருவழி சாலை
இருவழி சாலை
பச்சை வாழையிலை
எறும்புகள் உல்லாச பயணம்.
ந க துறைவன்.
பயணம்
Monday, 20 August 2018
பூரணமாய்...!!
என்னுள்
நீ பூரணமாய்
நிரம்பி விடு
மௌனத்தை
வழங்கி விடு
உன்னுள்
கரைகிறேன்
மறைகிறேன்
சூட்சுமமாய்
சூன்யத்தோடு
சூன்யமாய்
உன் இருப்பில்
என்றும்
நான்!
ந க துறைவன்.
பூரணமாய்...
Thursday, 16 August 2018
அஞ்சலி
இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பாஜகவின் மூத்த தலைவரும், சிறந்த கவிஞருமான திரு. அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் காலமானார்.
அவருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலி பதிவு செய்கிறேன்.
ந க துறைவன்.
அஞ்சலி
Wednesday, 15 August 2018
இயர்போன்
காதில் இயர்போன்
கையில் செல்போன்
தோளில் பை
பேருந்தில் நின்றவாறு
காதலுடன் தொடர்ப்பேச்சு
உற்று கவனிக்கும் பயணிகள்
உரசி உரசி செல்லும் கண்டக்டரின் மெல்லிய புன்னகை
முகத்தை மறுபக்கம்
திரும்பி நின்றிருக்கும்
சகப்பெண்கள்
அடிக்கடி விசில் சத்தம்
வருகிறது பேருந்து நிறுத்தம்
இறங்குகிறார்கள்
ஏற்றுகிறார்கள் படிகளில்
வாழ்க்கை படிகளில்...!!
ந க துறைவன்.
பேசியபடியே பயணம்
Friday, 10 August 2018
சொல்ல...
சொல்ல ஒன்றுமில்லை
என்றான்
மனசில் சொல்ல
ஆயிரமாய்
சொற்கள் வைத்துக் கொண்டு
செய்திகள் வைத்துக் கொண்டு
வதந்திகள் வைத்துக் கொண்டு
எவரிடம் சொல்லலாம் என்று
கணப்பொழுதும்
மனம் புழுங்கி...!
ந க துறைவன்.
சொற்கள்
Saturday, 4 August 2018
தாடி
நீண்ட தாடி வளர்த்தது
சாமியாராய் துவராடை அணிந்து
குளக்கரை ஆலமரம்.
ந க துறைவன்.
தாடி வளர்ப்பு
Thursday, 2 August 2018
சிலைகள்
அரூபம் உருவமாகியது
ரூபமாகிய சிலைகள்
தத் சித் ஆனந்தமாய்
கடத்தப்படுகின்றன
வெளி தேசம்.
ந க துறைவன்.
கடத்தல்
ஆடி பெருக்கு
ஆடி வந்தாள் காவிரி
அழகான அலைபரப்பி
நீரில் மிதக்கும் நெய் விளக்கு
நினைவெல்லாம் பிரார்த்தனைகள்
கரையெங்கும் கலகலப்பு
கைவளையல்கள் சலசலப்பு
காவிரியில் நீர்ப்பெருக்கு
கழனியெலாம் வளம் செழிக்கும்
வாழ்க்கை வளமாக்கு
ஆடி வரும் காவிரியே
அனைத்துலகம் சேமமுறவே!
ந க துறைவன்.
ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்