தனிமை
Labels
Saturday, 30 June 2018
தனிமை
Wednesday, 27 June 2018
உணர்ந்து
உள் உணர்ந்து காண்கிறேன்
கடந்து செல்கிறது மனம்
சூரிய வெளிக்கு அப்பால்.
I see has realized
Passes the mind
Beyond the outer space.
Thuraivan NG
வெளியில்...
Tuesday, 26 June 2018
விலகல்
Monday, 25 June 2018
ஈரம்
Sunday, 24 June 2018
மனநோய்
மனநோய்
1.
ஒருவனை டார்ச்சர் செய்து
பழகியவனை,
அவனை இன்னொருவன் டார்ச்சர் செய்ய
காத்திருப்பான்
டார்ச்சர் என்பது மிகக்
கொடூரமான வக்ரபுத்தி.
2.
பெரும்பாலான
துன்பங்கள்
டார்ச்சர் என்கிற
துன்புறுத்தலால்தான்
நிகழ்கின்றன.
3.
டார்ச்சர் என்பது
உளவியல் சார்ந்த
மனநோய்.
4.
எல்லோருடைய மனங்களில் புகுந்திருந்து
ஆட்டிப்படைக்கிறது
டார்ச்சர் எனும்
மனப்பேய்.
5
டார்ச்சர் செய்பவன்
டார்ச்சரால் அழிவான்.
6.
சாதுவாக இருப்பவனும்
டார்ச்சர் செய்கிறான்
கோபமாக இருப்பவனும்
டார்ச்சர் செய்கிறான்.
ஆக, டார்ச்சர்
சர்வ மயமாய்
உடலில் இயங்கும்
எதிர்மனச் சக்தி.
7.
டார்ச்சரால் தற்கொலைக்கு
முயற்சிப்பவர்கள்
எதிர்த்து போராடும்
மனப்பக்குவம் இழந்து
மனபிறழ்வுக்காளாகி
என்றோ ஒருநாள்
தன் தீர்வைத் தானே தேடி
நாள் குறித்து கொள்கிறார்கள்
முன்கூட்டியே உள்ளுணர்வால் உணர்ந்து...
8.
டார்ச்சர் மரணங்கள்
இங்கே
சங்கேதக் குறீடுகள்
விட்டுச் செல்கின்றன
அதன் ஆய்வுகள்
புலப்படாமலேயே
மறைகின்றன.
9.
டார்ச்சர்
மெல்ல மெல்ல
உயிர் பறிக்கும்
உயிக்கொல்லி.
10.
உடல் நோய்க்கு
மருந்துண்டு
மனநோய்க்கு
மருந்தில்லை.
ந க துறைவன்.
சில அனுபவங்கள்
Saturday, 23 June 2018
ஞானம்
தத்துவம் புரிந்து கொள்ள
கொஞ்சம் ஞானம் தேவையென
தத்துவம் அறிந்தவர் சொன்னார்
அவனோ
நா நல்லாவே புரிஞ்சிக்குவேன்
என்று
பளிச்சென்று பதில் சொன்னான்
" அப்ப நீ
என்ன படிச்சிருக்கே "
என்று கேட்டார்
அவன் பதில் சொன்னான்
" நான் பள்ளிக்கூடமே போகலையென்று..."
ந க துறைவன்.
தத்துவ விசாரணை
அவள்
அவள் புரியும்படி
சொல்லென்று கேட்டாள்
அவன் புரியும்படி சொன்னது
அவளுக்குப் புரியவில்லை
கொஞ்சம் தடுமாறினாள்
புரிந்துக் கொள்ள
மீண்டும்
சொல்லி புரிய வைத்தான்
மெதுவாக
அவளுக்கு எது புரிந்திருக்கும்?
எது புரியாமல் தவறியிருக்கும்?
ஏதோ, இப்பொழுதாவது
அவன் சொன்னது
அவளுக்கு
புரிந்திருந்தால் சரி.
ந க துறைவன்.
புரிதல்
Friday, 22 June 2018
புரிதல்
புரிஞ்சிதா, புரிஞ்சிதா என்று
வார்த்தைக்கு வார்த்தை பேசி
புரிய வைக்க முயன்றவர் பேச்சு
கொஞ்சம் குழப்பமாகவே
புரியாமல் போனது அவனுக்கு
அப்புறம் தான் புரிந்தது
அவர் புரியும்படி
சொன்ன விளக்கம் இப்பொழுது...
+
சிலர் சுற்றி வளைத்து
பேசி புரிய வைப்பார்கள்
சிலர் நேரடியாக பேசி
புரிய வைப்பார்கள்
சிலர் பேசாமலேயே
செயல்வழி புரிய வைப்பார்கள்
புரிய வைப்பதை எத்தனையோ
வழிகளில் புரிய வைக்கலாம்
அதில் எது
புரிந்துக் கொள்ளத்தக்கதோ?
அதுவே புரிந்து கொள்ள இயலும்
அக்கணத்தில்...
ந க துறைவன்.
புறிதல்
Tuesday, 19 June 2018
காதல் வரிகள்
கசக்கி எரிந்தக் காகிதம்
புல்வெளியில்
எடுத்துப் பிரித்து படித்தால்
அது
யாருக்கோ எழுதிய
காதல் வரிகள்.
ந க துறைவன்.
கசங்கிய காகிதம்
Monday, 18 June 2018
அப்பா...!!
அப்பா
1.
அப்பாவின்
சுண்டுவிரல்
பிடித்து நடந்த மகன்
திருமணத்தில்
மனைவியின்
சுண்டுவிரல்
பிடித்து நடந்தான்
இப்பொழுது
சுண்டுவிரல்
கவனமே
இருவருக்குமில்லை.
2.
மகனைத் தோளில்
சுமந்து
கருடசேவை
தரிசனம் செய்தார்
அப்பா.
3.
இப்பொழுது
அப்பாவின் நினைவேயில்லை
மகனுக்கு
இரண்டு குழந்தைகள்
பெத்த பிறகு.
4.
அப்பாவுக்கு
மகளைப் பிடிக்கும்
அம்மாவுக்கு
மகனைப் பிடிக்கும்
இப்பொழுது
இருவரின் பிடிப்பும்
கைவிட்டு போய்விட்டது.
5.
மகன்
கல்வி கற்க வேண்டி
கடன் வாங்கி
சொத்தைக் கரைத்தார்
அப்பா.
6.
அப்பாவின்
பாக்கெட்
காலி
செய்து விட்டான்
பாச மகன்
7.
அப்பாவுக்கும்
மகனுக்கும்
பிரச்சினை
வரும் போதெல்லாம்
இருவரையும் சமாளிக்கும்
சமாதானப் புறா
அம்மா.
8.
அப்பாவின்
சொத்து பத்திரங்கள்
அனைத்தும்
மகன் பெயருக்கு
மாறிவிட்டது
அப்பா
இப்பொழுது...?
9.
மகன் வருகை
எதிர்ப்பார்த்து
காத்திருக்கிறார்
மரணித்த
அப்பா
சவப்பெட்டிக்குள்.
ந க துறைவன்.
அப்பாவின் வலி
Thursday, 14 June 2018
வெளி
அறையில் இன்னிசை
சிறகு விரித்து குருவி பறத்தல்
கற்பனைக்கு அப்பால் வெளி.
ந க துறைவன்.
வெளிக்கு அப்பால்
Wednesday, 13 June 2018
குடிநீர்
அன்றைய கிராமங்களில் இருந்த
மிகச் சுவையானது
நீரோடைக் குடிநீர்
இன்றைக்கு அது கிடைக்குமா?
ந க துறைவன்.
நீரோடைக் குடிநீர்
Tuesday, 12 June 2018
விடைபெறல்
விடைபெற்றது கோடை
மீண்டும் அடுத்த ஆண்டு வரும்
ஓராண்டு கூடியது வயது.
ந க துறைவன்.
கோடை நிறைவு
Monday, 11 June 2018
இரக்கம்
இரக்கமற்றதோ?
இந்த இரவு
உள்வாங்கி கொள்கிறது
அம்மாவின் கண்ணீர்.
ந க துறைவன்.
அம்மாவின் அழுகை
Sunday, 10 June 2018
வலி
வலிக்கு நிவாரணம் தேடினாள்
இன்னொரு வலி தேடி வந்தது
நேற்று நிர்வாணப் பதவியடைந்தாள்.
ந க துறைவன்.
காதல் தோல்வி
Saturday, 9 June 2018
செம்பருத்தி
செம்பருத்தி
1.
செம்பருத்தி
பெண்மை விருத்தி
செம்பருத்தி அழகு
பருவத்தின் அழகு
2.
அவளுக்கும்
செம்பருத்திக்கும்
நெருங்கிய உறவு
எப்பொழுதும் உண்டு
அது
இருவருக்கும்
அழகியல் பந்தம்.
ந க துறைவன்.
செம்பருத்தி அழகியல்
Thursday, 7 June 2018
நிறங்கள்
நிறங்கள்
*
நிறங்கள் எல்லாம்
ஒன்றே
நிறங்களின்
பெயர் தான்
ஏழு.
*
நிறம்
நிரந்தரமானது
மனதைக் கவரும்
தந்திரம்
வைத்திருக்கிறது
உள்ளே...
*
புதிய புதிய
நிறங்கள் உருவாக்கலாம்
மனதுக்குப் பிடித்த
நிறத்தை
மனிதர்கள்
மாற்றிக் கொண்டே
இருப்பார்கள்.
*
அவரவர்க்கு
பிடிக்குமொரு நிறம்
நிறம்
பிடிக்காதவர்கள்
எவரேனும் உண்டோ?
*
ஏழு நிறங்களுக்கு
சண்டையில்லை
இரண்டு
நிறங்களுக்குத்தான்
எப்பொழுதும்
கலகம்... சண்டை...?
*
மலர்கள்
பல நிறம்
மனிதர்கள்
இரு நிறம்.
*
எல்லா நிறங்களின்
ஒளிச்சேர்க்கை
கிரணங்கள்
உள்வாங்கிக் கொள்கிறது
மனித உடல்.
ந க துறைவன்.
ஏழு நிறங்கள்...