இளவேனில்
நீ இளவேனில்
உன் பருவம் அப்படி
உன் நிறம் என் நிறம்
ஒரே நிறம்
உன் இதயம் இலை
உன் உதடுகள் கனிசுவை
நேரில் சந்திப்பு
வார்த்தைகள் உபசரிப்பு
முத்தமிடாமல் போகுது
அந்த வண்ணத்திப்பூச்சி
நீ சிரிக்கிறாய்
நான் மௌனமாய்
வசந்தமாய் வீசும் காற்று
உன் மூச்சு காற்று
என் மீது படர்ந்து
இளவேனில் மன உற்சாகம்
உன் அன்புக்காக
அந்த வேம்பு உனக்காக
என்னிடம் கொடுத்தது
இளவேனில் பூத்த
ஒரு பூ... அழகியல் வேம்பூ
நீயே என் அன்பூ...!!
ந க துறைவன்.
No comments:
Post a Comment